கொத்மலை, டன்சினன் தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதை தொடர்ந்து 92 குடும்பத்தினர் இடம்பெயர்ந்து தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 92 குடும்பங்களை சேர்ந்த 400 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். பிரதி அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கிணங்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தார். அதன்போது தோட்டத்தில் உள்ள லயக் குடியிருப்புகள், தனிவீடுகள், புதிதாக அமைக்கப்பட்ட மாடிவீடுகள் போன்ற வீட்டின்...
கொஸ்லந்தை மிரியபெத்த பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவில் காணாமல்போனோரை தேடும் பணிகள், மீட்புப் பணிகளில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. கொஸ்லந்தை மீரிய பெத்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், 192 பேர் காணாமற் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரி வித்தது. சீரற்ற காலநிலைக்கு மத்தியி லும் நேற்று முன்தினம் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த போதும் நேற்றைய தினம் சடலங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும்...
வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல்… எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும் மலர்ந்து கிடக்கும் அழகிய வதனம்… அவரைப் போலவே இனிமையான அருகிருக்கும் தோழர்கள்… எல்லாமே, எல்லோருமே இப்போதும் எங்கள் அருகிருப்பது போல…. உண்மையில் அப்படியொரு நாளாந்தம் அருகிலும், இல்லையென்றால் நினைவிலும் இல்லாமல் நாங்கள் ஒரு கணம்கூட...
  2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நாட்டு மக்கள் எல்லோரையும் முட்டாள்களாக்குவதற்கான முன்மொழிவே தவிர நாட்டையோ, மக்களையோ முன்னேற்றுவதற்கானதல்ல. -இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன். 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தள்ளார். அவரது உரையின் முழு விவரம் வருமாறு: நாட்டினுடைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ 2015...
  ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் புலித்தடை நீக்கம் தொடர்பான வழக்கில் எம்மை ஒரு தரப்பாக சேர்க்குமாறு கேட்கமாட்டோம். அவ்வாறு கோரினால் ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன்பாக இலங்கை அடிமைப்படும் நிலை ஏற்பட்டுவிடும்.'' - இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் பீரிஸ் மேலும் கூறியவை வருமாறு:- "ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற வழக்கில் இலங்கை பிரதிவாதியல்ல. ஏனைய 28...
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதா அல்லது சர்ஜன வாக்கெடுப்பு நடத்துவதா என்பது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.நாவீன்ன தெரிவித்துள்ளார். மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென...
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை கொழும்பு - டுப்ளிகேன் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சிறு காயங்களுக்கு இலக்கான மாலக சில்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதல் நடத்தியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் உயிர்களை காக்க இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஓ பன்னீர்ச்செல்வம் இது தொடர்பில் கடிதம் ஒன்றை இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அதில், போதைவஸ்து குற்றச்சாட்டின் பேரில் ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டமையை அடுத்து தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் உண்மையில் அப்பாவிகள், இந்தநிலையில்...
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கம் தொடர்பாக இலங்கையுடன் நெருக்கமான நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த உள்ளதாக ஊடகம் மற்றும் செய்தி துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சர்வதேச உத்தரவுகள் இலங்கைக்குரியன அல்ல என்பதாலும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை என்ற காரணத்தினாலும் புலிகளுக்கு எதிரான தடைநீக்கம்...
மலையகத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார். லக்ஷபான நீர்தேக்கத்தில் 3 வான்கதவுகள் நேற்று இரவிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. அத்தோடு காசல்ரீ மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியாகுவதோடு மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின்...