வடக்கு மாகாண சபையில் 7 பிரேரணைகள் நிறைவேறற்றப்பட்டதுடன் ஒரு பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 18 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது அவைத்தலைவரினால் 3 பிரேரணைகளும், உறுப்பினர் பரஞ்சசோதி 2 பிரேரணை , உறுப்பினர் சயந்தன், உறுப்பினர் ரவிகரன் தலா ஒரு பிரேரணையும் சபையின் முன் வைத்து தீமானமாக நிறைவேற்றப்பட்டது. எனினும் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டு வந்த தீர்மானம் அடுத்த அமர்வில் எடுத்துக்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையாக போட்டியிட முடியும் என்று பிரதமர் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்துக்கு ஊடாக கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு அமைய இது சாத்தியம் என பிரதமர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது  2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமையை உறுதிப்படுத்தினார். இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிடுவதற்காக சட்டங்களின்...
புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். புலம்பெயர் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர் ஒருவருடன் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றது. புலம்பெயர் சமூகத்திற்கு என்ன விலை கொடுத்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடியுமா என்று பார்க்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. தங்களது தேவைக்காக எவருடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடியவர்களே இந்த ராஜபக்சக்கள். நாடு முழுவதிலும் பல்வேறு வழிகளில் பிரச்சார...
  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெறுவோம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அதன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். கட்சிக்கு மலைஉச்சியை அடைவதற்க்கு சிறிதளவு தூரமேயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனிற்கான விஜயத்தின்போது விடுதலைப்புலிகள் சார்பு அமைப்பு எதனையும் சந்திக்கவில்லை என அவர்  குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கட்சியின் பிரதித்தலைவர் சஜித்பிரேமதாஸாவும் எதிர்வரும் தேர்தல்களில் கட்சிக்கு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த வெற்றி நிச்சயம் என...
எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்றுக்கு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலியுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இந்த ஆரம்ப கட்ட சந்திப்பு நடத்தப்பட்டது. தேசிய சுதந்திர...
சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள் என்றால், லிபியாவில் நடந்த இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு, ஸ்ரீலங்கா அரசின் எஜமானர்களான நேட்டோ படைகள் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். கடாபிக்கு எதிராக போரிட்ட "கிளர்ச்சிக் குழு", உண்மையில் நேட்டோப் படைகளின் கூலிப் படையாக செயற்பட்டது. இலங்கையில், முள்ளிவாய்க்கால் சுற்றி...
பெண் நல சிந்தனைகள் பேச்சில்தான் இருக்கிறது ,ஆனால் நாளுக்கு நாள் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் .இந்நிலை  பல நாடுகளிலும் உள்ளது . சமீபத்தில் உலகிலேயே பெண்களுக்கு அதிக தீங்கிழைக்கும் சில நாடுகளின் பட்டியல் வெளியானது .இப்போது அது உங்கள் பார்வைக்கு . 1 .ஆப்கானிஸ்தான் பெண்களுக்கெதிராக அதிக வன்முறைகள் நிகழும் நாடு .மோசமான பொருளாதார சூழ் நிலைகள் சுகாதார சீர்கேடு போன்றவற்றால் இங்குள்ள பெண்கள் பெரிதும்...
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 12வது மாநாடு மற்றும் 40ஆவது ஆண்டு விழா கடந்த அக்டோபர் 4, 5, ஆகிய நாட்களில் ஜெர்மனி - ஹம் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.  ஏற்கனவே, 2004ஆம் ஆண்டு புதுவையில் நடைபெற்ற 9வது உலகத் தமிழ் மாநாட்டிலும் 2007ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 10ஆவது மாநாட்டிலும் கலந்துகொண்டேன். அடுத்து 2011ஆம் ஆண்டு ஃபிரான்சில் நடைபெற்ற 11ஆவது மாநாட்டிற்கும் அழைக்கப்பட்டேன். ஆனால், கலந்துகொள்ள இயலவில்லை. தற்போது ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டிலும் பங்கேற்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். இவ்வியக்கத்தின்...
இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டொலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை இணைந்து நிறுவும் பணிகளை ஹவாய் தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹவாய் தீவில் இருக்கும் புகழ்பெற்ற மவுன கிய எரிமலைக்கு அருகில் நிறுவப்படும் இந்த தொலைநோக்கி தான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும். 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மிகச்சிறிய நாணயத்தைக்கூட மிகத்துல்லியமாக காட்டக்கூடிய அளவுக்கு இந்த தொலைநோக்கி திறன்...
  குர்திஷ் பெண் போராளி ஒருவரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், தலைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கோபேனி (Kobane) நகரை கைப்பற்றுவதில் ஐ.எஸ்.ஐ.எஸ் மும்பரமாக உள்ளதால் அவர்களை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த குர்து இனப் பெண்கள் நீண்ட நாட்களாய் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குர்திஷ் பெண் போராளிகளில் மிக முக்கியமாக கருதப்படுகின்ற ரெஹேனா (Rehana) என்பவரை ஐ.எஸ்.ஐ.எஸ் உயிருடன் சிறைப்படித்துள்ளனர். இதனையடுத்து இவரது...