அரசுக்கு எதிராகத் தமது அதிருப்தியை வெளியிடுபவர்கள் மீது இலங்கையில் அடக்குமுறை தொடர்கிறது. கடந்த வாரம் நாடாளுமன்றுக்கு அருகில் மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை ஒடுக்கிய செயலும் இதன் ஒரு அணுகுமுறையே." இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை. இதுகுறித்து மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர். மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதையே அதிகாரிகள்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 9 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதியை இழப்பார்கள் என தெரியவருகிறது. இலங்கை மக்களின் வாக்காளர் பதிவுகளுக்கு அமைய தேசிய அடையாள அட்டையோ வேறு அடையாள பத்திரங்களோ இல்லாததே இந்த தகுதியிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் தேர்தலுக்கு முன்னர் அடையாள அட்டைகள் இல்லாத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. 9 லட்சம் பேரில் சுமார்...
மகிந்த அடுத்த சனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டம் இடம் கொடுக்காவிடில் -சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடியாவிடில்……….. ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி மஹிந்த போட்டியிட முடியாது போனால், கோத்தபாயவை வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கோத்தபாயவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக்குவதே, மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாது முறையாக போட்டியிட முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்வைத்து வரும் சட்ட...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 50000 வீட்டுத் திட்டம் தொடர்பில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. 50000 வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பிலான யோசனைத் திட்டத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த வீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்டளவு வீடுகள் வடக்கு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் தேவானந்தா கோரியுள்ளார். டக்ளஸின் இந்தக்...
ஜனநாயக ரீதியான போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனதிராஜா தெரிவித்துள்ளார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணிகளின் 44ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஹெக்டர் கொப்பேக்கடுவ கமநல ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் 80 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனநாயக ரீதியான...
இலங்கையில் காணாமல்போனவர்களின் தேசிய நினைவுதினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களது புகைப்படங்களுடன் அச்சுறுத்தல் சுவரொட்டிகள் கொழும்பு புறநகர்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. அதனால் நாளைய நிகழ்வுக்கு பொலிஸார் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். தங்களை அச்சுறுத்தும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தக் கோரிக்கையை விடுப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கொழும்பின் புறநகர்ப் பகுதியான சீதுவ ரத்தொலுவ பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும்...
வட பகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடு, இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டவர்களுக்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வரும் இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொண்டிருப்போர் தமது உறவுகளை பார்வையிட செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னனுமதி தேவையில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் வடக்குக்கு சுற்றுலாவாகவோ அல்லது அபிவிருத்தி திட்டங்களுக்காகவோ செல்லும் போது, பாதுகாப்பு அமைச்சின்...
தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமாகிய மாவைசேனாதிராஜா 2015ம் ஆண்டிற்க்கான வரவு செலவுத்திட்ட அறிக்கை தொடர்பில் தொடர்ந்து கருத்த்துத்தெரிவிக்கையில்;;;; அரசஊழியர்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகை ஒதுக்கியுள்ளார்தான் ஆனாலும் சாதாரண மக்களும் இதனால் பயன் பெறுவார் என்று கூறமுடியாது.   வடஃகிழக்கிற்கு பாரியளவில் நிதி ஒதுக்கப்படவில்லை அதாவது பாதுகாப்பு அமைச்சினூடகவும் , பொருளாதார அமைச்சினூடகவும் சொற்ப ஒதுக்கீடுகளே வடபகுதிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. மக்களுடைய வாழ்க்கைச்செலவைக் குறைப்பதற்கு இந்த பயற் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை...
   சனல் 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஷோன் என்ற இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த படம் ஜெனிவாவில் ஐநா வளாகத்தில், மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக வந்திருந்தவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. ஐநாவின் 23 வது அறையில் அது திரையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்தப் படத்தை அங்கு திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தபோதிலும், ஐநாவில் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற அடிப்படையில் அது அங்கு திரையிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்தில் நடந்ததாகக்...
பலதரப்பட்ட எதிர்ப்புக்கும் ஆதரவுக்கும் இடையில் ஒருவழியாக காமன்வெல்த் எனப்படும் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்திய அடிவருடி(அடிமை)களின் மாநாடு முடிவடைந்தது. ஆம் அப்படித்தான் சொல்லவேண்டும், காமன்வெல்த் அமைப்பு என்பது பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியல் அடிமைகளாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பு என்றுதான் சொல்லப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்திற்கு அடிமைகளாக இருக்கும் நாடுகளின் கூட்டமப்பு என்பதுதான் சரியானதாகும். இதில் உறுப்பினர் பதவி என்பது கட்டாயம் அல்ல.  இதில் உறுப்பினர் ஆவதற்கு ஒரே தகுதி இங்கிலாந்தின் வரலாற்றுடன் தொடர்புடைய எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக விண்ணப்பித்து இந்தகாமன்வெல்த் நாடுகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ளலாம். பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின் கீழ் அடிமை நாடாக இருந்த அமெரிக்கா இந்த அமைப்பில் பங்கெடுக்க விருப்பம்...