2014ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய வாக்காளர் இடாப்புக்களை தயாரிக்கும் பணிகளை தேர்தல் செயலகம் பூர்த்தி செய்துள்ளது. எதிர்வரும் 31ம் திகதி ஆவணங்களில் கையொப்பமிட்டு நவம்பர் மாதம் 1ம் திகதி வாக்காளர் இடாப்பு வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் இடாப்பு திருத்தங்கள் கடந்த மே மாதம் 15ம் திகதி ஆரம்பானது. மிகவும் குறுகிய காலத்தில் வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது. நவம்பர் 1ம்...
நடிகை ஸ்ரேயாவை தமிழ்த் திரையுலகம் மறந்து விட்டாலும், தெலுங்குத் திரையுலகம் அவரை மறக்காமல் 'மனம்' படம் மூலம் மீண்டும் ஒரு மறுவாழ்வைக் கொடுத்திருக்கிறது. 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் அறிமுகமானாலும் ஜெயம் ரவி நடித்த 'மழை' படம் மூலம்தான் யார் இவர் என தன்னைப் பற்றிப் பேச வைத்தார். அழகான தோற்றத்தாலும், கிளாமரான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் அப்படியே இயக்குனர் ஷங்கரையும் கவர்ந்தார். அதன் பலனாக...
என் வாழ்க்கை துணைக்கான நபரை விரைவில் சந்திப்பேன் என்று கூறியுள்ளா நடிகை பிரணீதி சோப்ரா. பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை பிரணீதி சோப்ரா. தற்போது ஷாத் அலி இயக்கத்தில், ''கில் தில்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரணீதியுடன் ரன்வீர் சிங், அலி ஜாபர், கோவிந்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் காதல்-கீதல் என்று எதுவும் இல்லாமல்...
ஒளிப்பதிவாளராக இருந்த வேல்ராஜ், ''வேலையில்லா பட்டதாரி'' படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். தனுஷ், அமலாபால், சுரபி, சரண்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது. தனுஷூக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படம் இன்றோடு 100வது நாளை எட்டியிருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநரான வேல்ராஜ் கூறுகையில், இப்படத்தை...
தலைப்பைப் பார்த்ததும் கேரளாவில் தீபாவளியன்று 'கத்தி' திரைப்படக் கொண்டாட்டத்தில் மரணமடைந்த உன்னி கிருஷ்ணன் என்ற விஜய் ரசிகருக்காக அப்படத்தின் நாயகன் விஜய் உதவி செய்தார் என நினைத்து விட வேண்டாம். இது வேறு மாநிலத்தில் நடந்த ஒரு ரசிகரின் மரணம். அதற்காக அந்த ரசிகரின் ஆதர்ச நாயகன் உதவி செய்த செய்திதான் இது. தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடித்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் 'கோவிந்துடு...
வரவு, செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். வரவு- செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழமையாக தேநீர் விருந்துபசாரமொன்றை ஜனாதிபதி வழங்குவது வழமையாகும். இந்த தேநீர் விருந்துபசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை...
புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே இன்னும் பல வீதிகள் திருத்தப்படவேண்டிய நிலையில் உள்ளபோது அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வேறு மாவட்டங்களுக்காய் கிரவல் அள்ளப்படுவதையும் வீதிகளையே சிதைத்து கிரவல் தோண்டுவதையும் நிறுத்தி தாருங்கள் என புதுக்குடியிருப்பு வாழ் மக்கள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டிருந்தனர். நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த ரவிகரன், அளவுக்கு அதிகமாக கிரவல் அகழப்பட்டு இருப்பதையும் வீதியும் சேர்ந்து அகழப்பட்டிருப்பதையும் பார்த்து உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் மேலும்...
“இன்னல்களை பொருட்படுத்தாமல் கடமையைச் செய்பவர்களை அங்கீகரிப்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் முன்னிலை வகிக்கிறது” இது செல்வி ஜெயலலிதா, மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நடத்திய பாராட்டு விழாவில் பேசியது. இதுதான் ஜெயலலிதாவின் உண்மையான குணம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். ஏனென்றால்,வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் 4 ஹெக்டேர்களில் கார்னெட் எடுக்க உரிமம் பெற்று விட்டு, 30 ஹெக்டேர்களில் சட்டவிரோதமாக கனிமவளங்களை கொள்ளையடித்தபோது, அதை அதிரடி சோதனை...
சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன்கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பேசிவம் அமைப்பின் ஊடாக ‘வரப்புயர மரநடுகைத் திட்டம்’ (என்னை வளர்த்தால் உங்களைக் காப்பேன்) திட்டத்தின் ஏற்பாட்டில் இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாளம்பன் கிராமத்தினைச் சேர்ந்த இருநூறு குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ நோதராதலிங்கம் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் பங்கொண்டு...
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் மீதான தடைச்சட்டத்தினை நீக்கியதனை அடுத்து பல்வேறு நாடுகளும் விடுதலைப்புலிகளின் மீதான தடைச்சட்டத்தினை நீக்கவுள்ள அதேநிலையில் இரகசியமான முறையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைப்பதற்கான முன் நடவடிக்கைகளை இந்தியாவின் பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ளது. சீன வல்லாதிக்கத்தினை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்தவேண்டுமாயின் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் ஒரேயொருவழி விடுதலைப்புலிகளை மீள கட்டியெழுப்புவதாகும். அது மட்டுமல்லாது ஒரு நிர்வாகக் கட்டமைப்பினை வைத்திருந்த விடுதலைப்புலிகள் தமிழினத்;தின் விடுதலைக்காக போராடிய அவர்கள் எவ்வாறழிக்கப்பட்டனர். சர்வதேச நாடுகள் தற்பொழுது...