கல்பிட்டி அருகே உள்ள விமானப்படை முகாமொன்றில் சற்று முன்னர் மர்ம வெடி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்பிட்டி கந்தல்காடு பகுதியில் அமைந்துள்ள விமானப்படை முகாமிலேயே குறித்த மர்ம வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வெடிவிபத்தில் உடல் கருகிய நிலையில் காயமுற்ற மூன்று விமானப்படையினர் தற்போது கல்பிட்டி மற்றும் புத்தளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெடிவிபத்து நடைபெற்ற இடத்தைச் சுற்றிலும் இராணுவம் மற்றும் பொலிசாரினால் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால்...
பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வடக்கில் இந்த ஆண்டு நிலவிய கடும் வரட்சி இனிவரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் கலப்பினங்களை மாத்திரம் முற்றுமுழுதாக நம்பியிராமல் வரட்சிக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய பாரம்பரியப் பயிரினங்களுக்கு நாம் மீளவும் திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அழிந்துவரும் பாரம்பரியப் பயிரினங்களைப் பாதுகாக்கவென வடக்கு விவசாய அமைச்சால்...
வடக்கு கிழக்கில் அன்பே சிவம் சுவிஸ் சூரிச்சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தினாரால் வரப்புயர மரநடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் நிலத்தை வளம் நிறைந்த பொருளாதாரம் நிறைந்த பூமியாக மீண்டும் மாற்றும் நல்லெண்ணத்தில் சுவிஸ் அன்பே சிவம் சுவிஸ் சூரிச் சிவன் கோவில் சைவத்தமிழ் சங்கம் என்பன வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்துள்ளது. இந்த அந்தந்த மாவட்டங்களில் தமிழ்த் தேசியக்...
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிந்த தடை நீக்க விவகாரம் குறித்து பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்ட தடைநீக்க விவகாரம் முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளில் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு எதிராக அந்நாடுகளின் அரசுகள் செயல்பட முடியாது. அந்த வகையில்...
விடுதலைப் புலி ஆதரவாளர்களால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட ஈமெயில் ஒன்று தன்னிடம் சிக்கியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் அரச ஊழியர்களுக்கு ஜனசெவன வீடமைப்புக் கடன் மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் விமல் வீரவங்ச மேற்கண்ட பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்வதற்கு இரண்டாம் நிலைத் தலைவர் மாத்தையாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதம் வழங்கியது என கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். போர் இடம்பெற்ற காலத்தில் பிரபாகரனுக்கும் மாத்தையாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது. இந்த முரண்பாட்டை பயன்படுத்தி பிரபாகரனை கொலை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தீட்டம் தீட்டியது. இதற்காக மாத்தையாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதங்களையும் பணத்தையும்...
விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் தடையின்றி வீசா வழங்கும் விவகாரம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் இருக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அவர்களுக்கு கனடா மற்றும் சுவிட்சர்லாந்துக்கான வீசா இலகுவாக கிடைப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக இன்றைய திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலனாய்வுப்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக என்பது குறித்து நாளை கலந்தாலோசிக்கவுள்ளதாக சமசமாஜக் கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது ஆராய்வது நாளைய கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் என்று சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார முறையை ரத்துச் செய்யுமாறு தனது கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்தும் ஜனாதிபதியை வலியுறுத்தி வருகின்ற போதிலும், ஜனாதிபதி அது தொடர்பில் கரிசனை காட்டவில்லை...
புதிய ஊதிய ஒப்பந்த விவகாரத்தில் தங்களது கோரிக்கையை ஏற்க வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் மறுத்ததால் ஆத்திரமடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து பாதியிலேயே பின்வாங்கினார்கள். இந்திய சுற்றுப்பயணத்தை வெஸ்ட் இண்டீஸ் திடீரென ரத்து செய்ததால், இலங்கையுடன் இந்தியா விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. கட்டாக், ஐதாராபாத், ராஞ்சி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில்...
உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை சார்ந்துள்ள நிலையில், மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டை கருத்தில் கொண்டு மின் பாதுகாப்பு சாதனத்தை சகீல் தோஷி என்ற அமெரிக்க வாழ் இந்திய மாணவர் கண்டுபிடித்து சாதனை படைத்து இருக்கிறார். அமெரிக்காவின் பித்ஸ்பர்க் பகுதியில் தங்கி இருக்கும் அவர், இந்த சாதனைக்காக ‘அமெரிக்காவின் உயரிய இளம் விஞ்ஞானி’ என்ற புத்தாக்க விருதையும் 25 ஆயிரம் அமெரிக்க டாலரையும் வென்று உள்ளார்....