ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் துபாயில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. சுழலையும், ‘ரிவர்ஸ்விங்’கையும் சமாளிப்பது தான் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். என்றாலும் விதிமீறல் பிரச்சினையில் பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சிகரமான விஷயமாகும். ஆஸ்திரேலியாவும் நாதன் லயன்,...
ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரை இறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 0-3 என்ற கணக்கில் சரிதா தேவி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. இந்த ஆட்டத்தில் நடுவர்களின் அதிகபட்ச கருணை ‘உள்ளூர் வாசி’ மீது விழுந்தது.  இதனையடுத்து தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை நினைத்து வேதனை தாங்காமல் சரிதா...
இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் (வயது60) நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். சம்பளப் பிரச்சினை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது. தனது ராஜினாமா குறித்து அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வழிகாட்டியாக இருந்த வால்ஷ், இந்திய ஹாக்கி அமைப்பின் முடிவெடுக்கும்...
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கும், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேரடி சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக, "முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், எனக்கும், ஐக்கிய இலங்கை வட்டத்துக்குள், அ முதல் ஃ வரை அனைத்தையும் அலசும், முக்கிய கலந்துரையாடல்" என மனோ கணேசன் தனது டுவீட்டர் சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் தெரிவித்ததாவது, முதல்வர் விக்னேஸ்வரனுடனான சந்திப்பில்...
  இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய.வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காலவரையறையற்றவை எனத் தெரிவித்துள்ளார். MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட பரிச்சயமில்லாத உளவு நிறுவனங்கள் பல்வேறு அரசுகளுக்காக உலகம் முழுவதும் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அங்கமாக உளவு அமைப்புகள் இன்று கருதப்படுகிறது. இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தான் ஒரு தமிழன்....
  தமிழீழத்தைக் கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். பி.பி.ஸி.க்கு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- 1972ஆம் ஆண்டின் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே, மிகவும் நியாயமாக தமிழீழம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது...
மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் யுத்தத்தினால் மீள் குடியேறியுள்ள நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காட்டுப்பகுதியினுள் வாழ்ந்து வரும் மக்களுக்கு வடமாகாண சபை அவசர தற்காலிக வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் அயராத முயற்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் முள்ளிக்குளம் பகுதியில் வாழ்ந்து வரும் 82 குடும்பங்களுக்கு தற்காலிக...
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணையாளர்களிடம் தன்னிடமுள்ள வீடீயோ ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சனல் 4 இன் ஊடகவியலாளர் கலும்மக்ரே புதிய தகவல்களையும் தான்சேர்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். என்னிடமுள்ள, ஆதாரங்களை ஐ.நா சர்வதேச விசாரணைக்ழுவிடம் வழங்குவதற்க்கு நான் தயாராகவுள்ளேன், இது குறித்து நான் மகிழ்ச்சி கொண்டுள்ளேன், விரைவில் நான் அதனை செய்யவுள்ளேன், இது நேர்மையான சர்வதேச விசாரணை , எதிர்காலத்தில் இந்த விசாரணை நீதிநடவடிக்கைகளுக்குவழிவகுக்க கூடும், எமது வீடீயயோக்கள் பொய்யானவை,...
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பாராளுமன்ற வளாகத்தை அண்மித்து இருப்பதன் காரணமாக அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்த்தாங்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வித்துறையில் காணப்படும் சீரழிவுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை தாமரைத் தாடகம் அருகாமையில் ஆரம்பமானது இலசவ கல்வி அழிப்பு, தனியார் பல்கலைக்கழகம் அமைப்பு உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில்...
துறைமுக பாதுகாப்பு கல்லூரியை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு கொம்பனித்தெருவில் இந்த பாதுகாப்பு கல்லூரி அமைந்துள்ளது. குறித்த பாதுகாப்பு கல்லூரியின் நிலைமைகள் குறித்து கண்காணிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர். இதன் போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணம் செய்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதல் சம்பவத்தினால் கொழும்பு கொம்பனித்தெரு...