எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான வழிவகைகளை அறியாமல் ஆளுங்கட்சி அல்லாடிக் கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆளுங்கட்சியை விட முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, எதிர்க்கட்சியை திணறடிக்க நினைத்த அரசாங்கம் தான் வெட்டிய குழிக்குள் வீழ்ந்து, வெளியேற வழியறியாது தவிக்கின்றது. காட்டாற்று வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவனுக்கு வைக்கோலும் பெரும் மீட்புக் கருவியாக தென்படுவதைப்...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ளும் ஆளும் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாவை வழங்க பிரச்சார நடவடிக்கைக்கு பொறுப்பான அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அமைச்சர் பசில் ராஜபக்ஷ அண்மையில் மாகாண சபை உறுப்பினர்களை அலரி மாளிகைக்கு அழைத்து இத் தகவலை தெரிவித்துள்ளார். மாகாண சபை உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் தொகுதிகளில், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத கட்சியினரை சந்தித்து அவர்களின் தேவைகளை அறிந்து,...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது. இதற்குப் பிரதியுபகாரமாக அக்கட்சிக்கு வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. முதற்கட்டமாக கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளது. ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக், அஸ்லம் ஆகியோர் இதன் மூலம் பிரதியமைச்சர்களாக தெரிவாகவுள்ளனர். மேலும் கட்சித் தலைவரின் உறவினர்களில் ஒருவருக்கு வெளிநாடொன்றுக்கான தூதுவர் பதவியும், இன்னொருவருக்கு கூட்டுத்தாபனமொன்றின் தலைவர் பதவியும் அளிக்கப்படவுள்ளது. அமைச்சர் ரவூப் ஹக்கீமும்...
  இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை. 1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972 குடியரசு அரசியலமைப்புக்குத் திருத்தமொன்றைக் கொண்டுவந்து ஜனாதிபதிப் பதவியை நிறைவேற்று அதிகாரம் கொண்டதாக மாற்றியமைத்துவிட்டு 1978 பெப்ரவரி 4 சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அந்தவருடம் செப்டெம்பரில் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. முழுமையாக...
நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத் தொடர் ஒன்றுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வழமையாக நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கி, வெள்ளி வரை நடைபெறுவதுண்டு. இந்த சம்பிரதாயத்தை மீறி தற்போதைய அவசர கூட்டத்தொடர் இன்று தொடக்கம் வெள்ளி வரை நடைபெறவுள்ளது. இந்த அவசர கூட்டத்தொடரின் போது காணி, நிலங்கள் தொடர்பான பல விசேட சட்டமூலங்களை அவசர கதியில் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் அதனை உறுதிப்படுத்து...
தோட்டத் தொழிலாளர் குடும்பங்க​ளுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவிடம் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். 50,000 வீடுகளைக் கட்டி தருவதாக, கடந்த வரவு செலவு திட்டத்தின் போது நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாக்களித்தார். அதற்கு முன்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தோட்டத்துறை தரிசு நிலங்களை தொழிலாளர் குடும்பங்களுக்கு குறிப்பாக, தோட்டத்துறை இளைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கப் போவதாக கூறியிருந்தார். ஆனால்,...
தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை, மனம் தளரப்போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ' 'எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளில் இருந்து உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட...
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான ஐந்து வருடங்களில் தமிழ் மக்களின் இருப்பையும், தனித்துவமான அடையாளங்களையும் சிதைக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி தை திங்கள் நாளில் அகிம்சை வழி போராட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மாவட்ட க் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக் கின்றார். நிகழ்வில்...
ரணில் விக்கிரமசிங்க தனது ஐரோப்பிய விஜயத்தின் போது விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியதாக அரச ஊடகத்தில் பரபரப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய சிலுமிண பத்திரிகை , விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தூண்டுகோலாக இருந்த எதிர்க்கட்சி அரசியல்வாதி யார்,என்ற தலைப்பில் மேற்குறித்த விபரங்களை உள்ளடக்கி பிரதான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில் ரணிலுடன் ஐரோப்பாவில் வாழும் நான்கு இலங்கையர்கள் ஒன்றாக நிற்கும் புகைப்படமொன்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் காணப்படும் நபர்கள் ஐரோப்பாவில்...
நாட்டின் பௌத்த பிரிவெனாக்களில் கல்வி போதிக்கும் 5 ஆயிரம் போதகர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று அலரி மாளிகையில் சந்தித்தார். இதன்போது அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, நாடு முழுவதும் பிரிவெனாக் கல்வியை வளர்ப்பதில் சிறலங்கா சுதந்திரக் கட்சி பெரும் பங்காற்றியது என்றார். அத்துடன் பிரிவெனாக் கல்விக்காக வரவு-செலவுத் திட்டத்தில் பிரத்தியேகமாக நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.