கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதியில் 14.10.1998 அன்று ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிலவன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இலங்கையின் இணையத்தள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ நிறுவனத்தில் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை மற்றும் சீனாவின் இணையத்தள துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான அவசர வினையாற்றல் குழுவினர் தமது அரசாங்கங்களின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் இணையத்தளப் பயன்பாடு, பாதுகாப்பு மற்றும் இணையத்தளப் பாவனையைக் கட்டுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் சீனாவின் உதவியைப் பெற்றுக் கொள்ள இலங்கை...
யுத்தத்தால் அழிவுற்று மெல்ல மெல்ல மீண்டுவரும் பாடசாலைகளில் நூல்வளம் பெருக்கும் நோக்கோடு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்விச்செழுமை செயற்திட்டத்தில் இன்று நான்கு பாடசாலைகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. துணுக்காய் வலயத்தில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு இன்று காலை விஜயம் செய்த ரவிகரன், பெறுமதியான பயிற்சிப்புத்தங்களை வழங்கியதோடு பாடசாலைகளில் நிலவும் குறைகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது, கல்விச்செழுமை செயற்திட்டத்தில்  முதலாம் கட்டமானது முல்லை கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்வாங்கியிருந்த...
வடக்குக்கு மூன்றுநாள் பயணமாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இன்று செவ்வாய்க்கிழமை தீவகத்துக்கு சென்று பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, பின்னர் நெடுந்தீவு மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். இதேவேளை வேலணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலக கட்டடத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார். அத்துடன் மின்சாரசபையின் பாவனையாளர் அலுவலகத்தையும் அவர்...
அடக்குமுறை அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டுமென ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காலி மாவட்ட அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.  ஆட்சியாளர் தற்போதே வன்முறைகளை ஆரம்பித்துள்ளார். அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இவ்வாறான சம்பவங்கள் வியாபிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விடயம் குறித்து மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டும். ஊழல் மோசடிகளில் ஈடுபடும்...
லிங்கா படத்தில் ரஜினி இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். ஒன்று சுதந்திரத்துக்கு முந்தைய காலத்து ரஜினி. மற்றொன்று இப்போதைய காலகட்டத்தைச்சேர்ந்த ரஜினி என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதனால் இந்த படத்தில் சந்தானம், கருணாகரன் என்ற இரண்டு காமெடியன்கள் நடிக்கின்றனர். சுதந்திரத்துக்கு முந்தைய ரஜினியுடன் கருணாகரனும், இக்காலத்து ரஜினியுடன் சந்தானமும் நடிக்கின்றனர். அதேபோல், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்து ரஜினிக்குத்தான் அனுஷ்கா ஜோடியாக இருப்பார் என்றுதான் முன்பு கூறப்பட்டது. ஆனால், இப்போது...
'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது பிரம்மாண்டமாக இயக்கி வரும் சரித்திரப் படம் 'பாகுபலி'. இப்படம் தமிழில் 'மகாபலி' என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது குண்டு வெடிப்பு காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். அந்த சமயத்தில் ஏற்பட்ட திடீர் தீ...
கடந்தவாரம் போராட்ட வழியில் வந்த கட்சிகளுடனான சந்திப்பின்பொழுது முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்த கருத்துக்களானது ஒட்டுமொத்த போராட்ட வரலாற்றினையும் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நடவடிக்கையாகவே அமைகின்றது. அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகவிருந்தாலும் கூட  இக் கட்சிகளுடன்  இணைந்து தன்னால் செயற்பட முடியாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. தமிழீழ விடுதலைப்புலிகளினால் தான் இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. வன்முறைக் குழுக்கள் என்பது வேண்டுமென்று உருவானதொன்றல்ல. தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்றபொழுது அதற்கெதிராக குரல்கொடுத்து வந்தவர்கள்தான் இந்த...
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வேதனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து விட்டது, 150ஐ எட்டிவிட்டது என கிட்டத்தட்ட செஞ்சுரி அடித்த பெருமிதம் பொங்க சொல்லி வருகின்றனர் அ.தி.மு.க.வினர். ஆனால் அவர்கள் சொல்லும் 100, 150 என்பது எல்லாம் பலியான உயிர்களின் எண்ணிக்கை என்பதுதான் சோகம். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக...
கவியரசர் கண்ணதாசன்-விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கவியரசர் கண்ணதாசன் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கில் மாலை 6 மணிக்கு நடக்கும் விழாவில் டாக்டர் குமாரராணி மீனா முத்தையா குத்துவிளக்கேற்றுகிறார். ப.லட்சுமணன் தலைமை தாங்கி கவியரசர் விருதுகளை வழங்குகிறார். பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் "கவியரசு கண்ணதாசன் பாடல்களும் நான் பாடிய பாமாலைகளும்"...