ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வரும் விலை குறைப்பு நிகழ்ச்சி நிரலில் அடுத்தாக கோதுமை மாவின் விலை குறைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று பிரிமா நிறுவனம் மற்றும் இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரிதொரு நிறுவனத்துடன் நடத்தப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலையை 20 வீதமாக குறைக்க இணங்க வேண்டுமாயின் தமது நிறுவனத்திற்கு வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்...
  கர்நாடகாவுக்கு சுற்றுலா வருபவர்கள் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் இப்போது பரப்பன அக்ரஹாராவும் சேர்ந்திருக்கிறது. ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் சிறையைப் பார்க்க வேண்டும்என்பதற்காக டிராவல்ஸ் பஸ்கள் பரப்பன அக்ரஹாரா பக்கம் ஒரு ரவுண்ட் வந்து திரும்புகிறது. இங்கதான் அம்மாவை புடிச்சு வெச்சுருக்காங்க...'' என்று சொல்லி பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் செல்லும் சாலையை வேடிக்கை பார்த்தபடியே டிராவல்ஸ் பஸ்ஸில் ஏறி கிளம்புகிறது ஒரு கூட்டம். தர்மபுரி பக்கமிருந்து மைசூருக்கு சுற்றுலா வந்த கிராமத்து...
சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் இதனைத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அடிக்கடி வடக்கில் மறைந்துள்ள புலிகள் தகவல்களை வழங்கி வருகின்றனர். போர் முடிந்து விட்டது புலிகள் இல்லை என சிலர் குறிப்பிடுகின்றனர். அப்படி என்றால் படையினருக்கு எதிராக அறிக்கைகளை அனுப்பி வைப்பது பேய்களா? புலிகளின் பிரச்சாரப் பணிகளுடன் தொடர்புடைய பலர் வடக்கில் இருக்கின்றார்கள். சந்தர்ப்பம் வரும் வரையில் காத்திருந்து தகவல்களை அனுப்பி வைக்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்...
சப்ரகமுவ பல்கலைக்கழககத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது மற்றொரு பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது கூரான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதனால் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது கூரான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதனால் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்
  இந்தியப் பிரதமர் நரேந் திர மோடி அமெரிக்கா சென்றபோது அங்குள்ள முதலாளிகளிடம் அவர் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் தொழிலாளர் நலன்களுக்குக் கேடானது என்ற உண்மை வெளி யாகியுள்ளது. இதுகுறித்து மோடி அமெரிக்கா சென்ற போது அங்கிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் அளித் திருக்கும் வாக்குறுதிகள் குறித்து பல்வேறு தகவல் களை ட்ரூத் ஆப் குஜராத் இணையம் வெளியிட்டிருக் கிறது. அதில் கூறியிருப்ப தாவது:- கடந்த 2001-ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி...
  நியூயார்க்: கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியா அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய கெயில் ட்ரெட்வெல் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார். கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுவதை நான் நேரில் கண்டுள்ளேன்.என்னை மடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார்.அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர்...
  இந்திய பாதுகாப்பு செயலாளர் ராதாகிருஸ்ண மாதூர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று வெள்ளிக்கிழமை காலை கண்டியில் சந்தித்து பேசியுள்ளார். இந்திய - இலங்கையிடையேயான வருடாந்த பாதுகாப்பு கருத்தமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ராதா கிருஸ்ண மாதூர் ஜனாதிபதி மறிந்தவையும் சந்தித்துள்ளார். இதேவேளை பாதுகாப்பு கருத்தமர்வில் இந்திய பாதுகாப்பு செயலாளரும், இலங்கை பாதுகாப்பு செயலாளரும் தமது பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு...
ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நோபல் சமாதான விருதினை பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. எனினும் அவருக்கு சமாதான விருது கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் அரிதாகவே காணப்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. பாப்பாண்டவர், பாகிஸ்தான் சிறுமி மலாலா மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு உள்ளிட்ட தரப்பினரது பெயர்களும் சமாதான விருதிற்கான பட்டியலில் முன்னணி வகிக்கின்றன. இந்த ஆண்டில் நோபல் பரிசு கிடைக்காவிட்டால், பதவிக் காலம் முடிவடையும்...
எதிர்வரும் 12ம் 13ம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி விஜயத்தினை வடமாகாணசபையும், தமிழ்தேசிய கூட்டமைப்பினரும் புறக்கணிக்கப் போவதாக வடமாகாண முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் நிகழ்வுகளை வடமாகாணசபையினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் புறக்கணிப்பதற்கான காரணங்களை தமிழ் மக்களுக்கு விளக்கும் வகையில் முதலமைச்சர் 14 முக்கிய சமகாலப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றிணை இன்றையதினம் வெளியிட்டுள்ளதுடன், அந்த அறிகையினை ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்துள்ளார். மிக...
 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்கின்றேன் என்றும் அதற்காக கிடைக்கப்பெறும் விருப்பங்கள் மிகவும் பலமானதாக அமைந்திருக்கவேண்டும் என்றும் ஜனநாயக கட்சித்தலைவர் சரத் பொன்சேகா இன்று (08) தெரிவித்தார். எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் படி தன்னிடம் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின், நாம் ஜனாதிபதி...