எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் சமூகங்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றியீட்டினால் வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வேன். நாடாளுமன்றிற்கு பொறுப்புச் சொல்லக்கூடிய வகையிலான ஓர் தலைவராக கடமையாற்ற எதிர்பார்க்கின்றேன். 13ம்...
வவுனியாவில் இன்று (10.10.2014) 10.45 மணியளவில் சட்டவிரோதமாக குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி 211 நாட்கள் தடுத்துவைத்துள்ள விஜயகுமாரி உட்பட ஏனையோர் தொடர்பாக இம்மௌன போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு பதாதைகளை ஏந்தியவாறு வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக தமது மௌன ஆர்ப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.       இவ்வார்ப்பாட்டத்தின்பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரவணபவான், சிவசக்தி ஆனந்தன், வினோதராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும், அந்த பொது வேட்பாளராக முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்தை நிறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். குமார் குணரட்னம், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை. இது அரசாங்கம் கூறி வரும் பொய்யான கதை. ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரிகளின் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முன்னிலை சோசலிசக் கட்சி பல...
இலங்கை விடயத்தில் அமெரிக்கா மென்மைப்போக்கை கடைப்பிடிப்பதாக ஜனாதிபதி கூறியமைக்கான காரணத்தை இலங்கையின் ஊடகம் ஒன்று ஆராய்ந்துள்ளத. இதன்படி அமெரிக்காவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்தித்த பின்னர் இந்தக் கருத்தை வெளியிட்டமை குறித்து குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜோன் கெரியை சந்தித்த பின்னர் மஹிந்த ராஜபக்ச இந்தக் கருத்தை உடனடியாக வெளியிடவில்லை. சஜின் வாஸ் குணவர்தன, கிறிஸ் நோனிஸை தாக்கிய பின்னர் அனைவரும் இலங்கைக்கு வந்த பின்னரே...
தங்க நகையில் போலி உண்டு. வாங்குகிற பொருட்களில் போலி உண்டு. சினிமாவில் போலி  உண்டு என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? சினிமாவிலும் போலி உண்டு என்பதுதான் கசப்பான உண்மை. அதென்ன போலி என்று யோசிக்கலாம். போலி என்பது என்ன? ஒரு மூலப்பொருளைப் போல இன்னொரு பொருளை உருவாக்கி மூலப்பொருள் போல காட்டுவதுதான் போலி. அப்படி சினிமாவில் ஒரு விஷயம் உண்டு. சில திரைப்படங்கள் புதிய படங்களின் வடிவில் வரும். ஆனால்...
பணத்துக்காகவும், பழி வாங்குவதற்காகவும் பெண்களைக் கடத்துவது பற்றி நடக்கும் சம்பவங்களை உள்ளது உள்ளபடி என்ற கோணத்தில் சொல்லும் படம்தான் ‘யாவும் வசப்படும்’. கனடாவைச் சேர்ந்த விஜித் இதன் நாயகன். பிரான்ஸைச் சேர்ந்த தில்மிகா நாயகி. இவர்களைத் தவிர பாலா, வைபவி என்ற ஜோடியும் இருக்கிறார்களாம். தீபச் செல்வன் பாடல்களுக்கு ஆர்.கே. சுந்தர் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் புதியவன். க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் முழுப் படப்...
அஜீத் படத்துக்கு டைட்டில் முடிவாகியும் வெளியிடாமல் மவுனம் காக்கிறார் இயக்குனர்.கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவரை வெளியிடப்படவில்லை. ‘தல 55 என்ற தற்காலிக  தலைப்புடன் ஷூட்டிங் நடந்து வருகிறது. 75 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தற்போது கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அஜீத், அருண் விஜய் மோதும் சண்டை காட்சி படமாகிறது. இதுவரை பட தலைப்பு வெளியிடாதது ஏன் என்றபோது,‘படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டது....
சென்னை: சமந்தா படத்தில் குத்து பாடலுக்கு ஆடுகிறார் சார்மி.தமன்னா நடித்த ‘ஆகடு தெலுங்கு படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார் ஸ்ருதி ஹாசன். இதற்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக கூறப்பட்டது. இதில் ருசிகண்ட ஸ்ருதி அடுத்து இந்தி படமொன்றிலும் குத்துபாடலுக்கு நடனம் ஆடி கைநிறைய சம்பளம் வாங்கினார். இதையறிந்த சில ஹீரோயின்கள் குத்து பாடல் ஆடுவதற்கு தயாராயினர். தமிழில் விக்ரம், சமந்தா நடிக்கும் படம்...
மும்பை: தேசிய கீதம் பாடலுக்கு எழுந்து நிற்காத ரசிகரை தாக்கினார் பிரீத்தி ஜிந்தா. ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள பாலிவுட் படம் ‘பேங் பேங். இப்படத்தை பார்ப்பதற்காக மும்பை சினிமா தியேட்டருக்கு வந்தார் நடிகை பிரீத்தி ஜிந்தா. படம் தொடங்குவதற்கு முன்னதாக தேசிய கீதம் திரையிடப்பட்டது. உடனடியாக மரியாதை நிமித்தமாக பிரீத்தி ஜிந்தாவும் மற்றவர்களும் எழுந்து நின்றனர். ஆனால் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ரசிகர் மட்டும் எழுந்து நிற்காமல்...
ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து பல இடங்களிலும் இந்த தாக்குதல் நடக்கிறது. அமெரிக்கா தனது தரைப்படையை பயன்படுத்தாமல் விமான படை மூலமே ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்து விடலாம் என்று கருதியது. ஆனால் இதற்கு போதிய பலன் இருப்பதாக தெரியவில்லை. பலமுனைகளில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் தொடர்ந்து...