ஏமன் நாட்டில் இன்று இரண்டு இடங்களில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் 67 பேர் பலியாகியுள்ளனர். ஏமனில் ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அரசு தலைமையகத்தை கைப்பற்றியதையடுத்து ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் முகமது பசிண்டாவா சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அதிபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பிரதமர் அகமது அவாத் பின் முபாரக்கையும் ஷியா கிளர்ச்சியாளர்கள் ஏற்க மறுத்து மிகப்பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன் காரணமாக, புதிய பிரதமர்...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பொதுமக்கள் வாழும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி அருண் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் தனது அத்துமீறலை நிறுத்தவில்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்றும், இனியும்...
ரூ.3,600 கோடி மதிப்பிலான 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இந்தியா 2010 ஆம் ஆண்டு இத்தாலியின் பின்மெக்கானிக்காவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட் லேண்ட்டிடம் இருந்து  ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு அந்த நிறுவனம், பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும்,...
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த 1-ந்திகதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்தியா தகுந்த பதிலடி தந்து வருகிறது. ஆனால் இந்தியாதான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. அத்துடன், இந்த பிரச்சினையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் சரியான விதத்தில் செயல்படவில்லை என அங்குள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த நிலையில், பிரதமர் நவாஸ் ஷெரீப், இஸ்லாமாபாத் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை)...
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்னில் மோசமாக தோற்றது. முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்தது. சாமுவேல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 116 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 126 ரன்னும், ராம்தின் 61 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி 4 விக்கெட்டும், ஜடேஜா, அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இந்திய...
கொச்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் வீரர் சாமுவேல்ஸ் சதம் அடித்தார். அவர் 116 பந்தில் 126 ரன் எடுத்தார். ஒருநாள் போட்டியில் அவரது 6–வது செஞ்சூரி இதுவாகும். இந்த சதத்தை சாமுவேல்ஸ் மறைந்த தனது பயிற்சியாளருக்கு அர்ப்பணித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது சில காயத்தால் நான் ஆபரேசன் செய்து கொண்டேன். இதனால் அதிகமான போட்டிகளில் ஆடவில்லை. கரிபீயன் லீக் போட்டியில் நான் சிறந்த நிலையை...
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்டேன்களில் ஒருவர் வீராட் கோலி. சமீபகாலமாக அவரது பேட்டிங் மோசமாக இருந்து வருகிறது. ஆசிய கோப்பையில் சரியாக ஆடவில்லை. அதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வீராட் கோலி ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. 4 ஆட்டத்திலும் சேர்த்து 54 ரன்களே எடுத்தார். 3–வது வீரராக களம் இறங்கும் அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய முதல் போட்டியிலும் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். வீராட் கோலியின் பேட்டிங்...
பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சயீத் அஜ்மல் சமீபத்தில் பந்துவீச தடை செய்யப்பட்டார். அவரது பந்துவீச்சு சட்டவிரோதமாக இருப்பதாக கூறி அவரை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சஸ்பெண்டு செய்தது. அவரை தொடர்ந்து ஜிம்பாப்வே சுழந்பந்து வீரர் பிராஸ்பா உத்செயா, வங்காளதேச சுழற்பந்து வீரர் சோஹக் காஜி ஆகியோர் பந்துவீச தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த இருவரது பந்து வீச்சும் சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக புகார்...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வீரர்களுக்கு முன்பை விட குறைவான ஊதியமே கிடைக்கும். புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியினர், தங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன், வீரர்கள் சங்கம் ஏற்படுத்தி இருக்கும் ஒப்பந்தத்துக்கு எதிராக திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்து வரும் போட்டி தொடர்...
படையினர் எமக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் ஒருபோதும் கூறவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையில் இன்றைய தினம் காணி தொடர்பிலான விசேட அமர்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பொதுத்தேவை என அடையாளப்படுத்தி படையினருக்கு காணிகளை வழங்குகிறீர்களே? என்ன அடிப்படையில் வழங்குகிறீர்கள் என நான் அரசாங்க அதிபரை கேட்டிருந்தேன். அவர்கள் எனக்கு...