அரியம் எம் பி பியசேனவைப் பார்த்து கீழ்சாதி, வாயைப் பொத்திக் கொண்டிரு உனக்கு தமிழ்களைப் பற்றித் தெரியாது வெறுமனே இலவச நீலத்துண்டினை கழுத்திலே போட்டுக்கொண்டு தமிழ்களைப் பற்றிக் கதைப்பதற்கு அருகதை அற்றவன்
Thinappuyal News -0
பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழர்களது பூர்விக எல்லைக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது என கூறியபோது அதற்கு இடையூறு விளைவித்த போதே பியசேனவைப் பார்த்தே கீழ்சாதியான் எனக்கூறி அவருடைய வாயை மூடவைத்த சம்பவம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று உள்ளுராட்சி சட்டத்திருத்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதில் கலந்து கொண்ட அரியநேத்திரன் எம்.பி. மேற்கண்டவாறு திட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் பா.அரியநேத்திரன் உள்ளுராட்சி சட்ட திருத்த மூலம் தொடர்பாக தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பில்...
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆவாரா என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் லில்லி தோமஸ் தொடுத்த பொதுநல மனுவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2013 ஜூலை 10இல் அளித்த தீர்ப்பில், ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8இல் உட்பிரிவு 4-ஐ நீக்கி உத்தரவிட்டது. இதன்படி, குற்றங்கள் நிரூபணம் செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட எம்.பி....
முல்லைத்தீவில் மட்டும் 34,191 ஏக்கர் நிலம் அபகரிப்பு! ஆதாரங்களுடன்-வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்
Thinappuyal News -
முல்லைத்தீவில் மட்டும் 34,191 ஏக்கர் நிலம் அபகரிப்பு! ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் ரவிகரன்
வடமாகாண சபையின் காணி அபகரிப்பு தொடர்பான இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட அமர்வில் 5 மாவட்டங்களிலும் இடம்பெற்ற காணிகள் அபகரிப்பு விவரங்களை மாகாணசபை உறுப்பினர்கள் அம்பலப்படுத்தினர்.
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 34 ஆயிரத்து 191 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் புள்ளிவிபரங்களுடன் வெளிப்படுத்தினார். அவர் வெளிப்படுத்திய விபரங்களின் படி முல்லைத்தீவில் பிரதேச...
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை ( ப்ரீடம்
ப்ரம் டோச்சர்) என்ற அமைப்பு இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
அமைப்பின் தலைவர் ஜூலியட் கொஹென் ஜெனீவா மனித உரிமைகள் குழுவின் அமர்வில் நேற்று பங்கேற்றபோது இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் கரிசனை கொள்ளாது இருந்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இலங்கையில் தொடரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் என்பன தொடர்பில் இலங்கை அரசாங்கம்...
அலைபாயுதே மாதவன் தமிழில் மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன் என பல ஹிட் படங்களில் நடித்தபோதும், வேட்டை படத்திற்கு பிறகு தமிழில் எதிர்பார்த்தபடி சரியான கதைகள் கிடைக்காததால் டோட்டல் கவனத்தையும் இந்தி படங்கள் மீது திருப்பி விட்டார். தற்போது தமிழில் ஒரு படத்திலும், இந்தியில் 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்ஜனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு...
இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஐ. தீபாவளியன்று படம் திரைக்கு வந்து விடும் என படத்தின் இசை வெளியீட்டு வரை பேசினார்கள். அதன் பின் போகப் போக அந்தப் பேச்சு மறைந்து கொண்டே வந்தது. தற்போது, படம் தீபாவளிக்கு வெளிவருவதற்கு வாய்ப்பேயில்லை, நவம்பர் மாதம் எப்படியும் வந்துவிடும் என்கிறார்கள். ஆனால், அதுவும் உறுதியான தகவலா என்றும் தெரியவில்லை. தற்போது படத்தின் தெலுங்கு, ஹிந்தி டப்பிங்...
அஜித் ரசிகர்களுக்கு தீபாவளிக்குத் தங்கள் அபிமான நடிகரின் படம் வெளியாகவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயம்தான் என்றாலும், அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் புகைப்படங்கள் வெளிவந்தாலே போதும், அதையே கொண்டாடி மகிழ்வார்கள். இன்று காலை அப்படி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஒரு மளிகைக் கடையின் முன் அஜித் அமர்ந்திருக்கும் அந்த புகைப்படத்தில் அஜித்தின் வித்தியாசமான தோற்றம் கொண்ட புகைப்படங்கள் 'வைரலாக'ப்...
'சூர்யா, காஜல் அகர்வால் நடித்த 'மாற்றான்' படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் 'அனேகன்'. தனுஷ், அமிரா தஸ்தூர், கார்த்திக் மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 'அயன், கோ, மாற்றான்' படங்களுக்குப் பிறகு கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்து நான்காவது முறையாக இணையும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஆரம்பமானது. பல காரணங்களால் அவ்வப்போது படப்பிடிப்பு தடைபட்டு தற்போது...
ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கும், ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் புதுப் புது வழிமுறைகளை தற்போது கையாள வேண்டி வருகிறது. அந்த விதத்தில் மலையாளத் திரையுலகில் ஒரு புதிய முயற்சியாக '100 டிகிரி செல்சியஸ்' என்ற படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு படம் பார்க்க வரும் 50 பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக உள்ளது.ராகேஷ் கோபன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப்...
குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள்...