வவுனியாவில் நேற்றைய தினம் அரசு சார்பான அரசியல் கட்சியொன்றின் தலைவரினால் கைத்தொலைபேசி மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் இன்று (7.10) மதியம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, பம்பைமடு கிராம அலுவலருக்கும் கற்பகபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் செயலாளருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பான செய்தியை வெளியிட்டமை தொடர்பாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளரான கோ. வசந்தரூபன் அரசியல் கட்சியொன்றின் தலைவரினால் அச்சுறுத்தப்பட்டிருந்தார். இது...
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை மாநில அரசு கட்டுப்படுத்தும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்தும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளித்தார். "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமேயானால், அதைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கட்டுப்படுத்துவார்கள்.அது அவர்களுடைய கடமை. அவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று...
தமிழர்கள் தமது ஆட்சியை நிறுவ இந்தியா முழு நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும்: உ.த.ப. இயக்கத்தின் மாநாட்டுத் தீர்மானங்கள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் ஜேர்மனி ஹம் நகரில் கடந்த 4ம், 5ம் திகதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளில் இருந்து வருகை தந்த அரசியல் பிரமுகர்கள், கல்வித் துறை சார் பேராசிரியாகள் அடங்கலாக...
[ இஸ்ரேலுக்கு உளவு பார்த்தாக கூறி எகிப்தை சேர்ந்த தீவிரவாதிகள், 3 பேரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.எகிப்தின் சினாய்(Sinai) மாகாணத்தில் இயங்கி வரும் அன்ஸார் அல்-மக்தஸ் (Ansar Beit al-Maqdis) (ஏ.பி.எம்.) என்ற பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி 3 பேரின் தலையை துண்டித்துள்ளனர்.மேலும் எகிப்து ராணுவத்துக்காக பணியாற்றியதாக கூறி மற்றொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், அந்த காணொளியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த காணொளியில் தீவிரவாதிகளிடம் சிக்கிய 4...
தரமான கணனிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் HP 10 Plus எனும் புதிய Android 4.4 KitKat டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. 279.99 டொலர்கள் பெறுமதியான இந்த டேப்லட் 10.1 அங்குல அளவுடையதும், 1900 X 1200 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது. இது தவிர 1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை...
சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும் பட்டம் வென்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் அந்த நாட்டைச் சேர்ந்த கீ நிஷிகோரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார். முடிவில் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் வெற்றி...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். தென் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்தது. சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கமும், தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் பெற்றார். இதுபற்றி சானியா மிர்சா அளித்த ஒரு பேட்டியில், ஆசிய போட்டியில் டென்னிஸில் 5 பதக்கங்கள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தில்...
ஜீவா படத்தின் வெற்றி களைப்பில் ஓய்வெடுக்காமல் அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார் இயக்குனர் சுசீந்திரன். வழக்கு எண் மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ஸ்ரீயையும், சமீபத்தில் வெளிவந்த பொறியாளன் படத்தில் நடித்த ஹரிஷையும் வைத்து தன் அடுத்த படத்தை தொடங்க உள்ளார் சுசீந்தரன். ஹீரோயினாக சம்ஸ்கிருதி செனாய் நடிக்கிறார். இப்படத்தின் கதை இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான ஈகோதான். தென் சென்னையில் நடக்கும் இக்கதையின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. ஒரு...
பூஜை படத்துக்கு பிறகு சுந்தர் .சி இயக்கத்தில் ஆம்பள என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களின் மகள்களாக ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது இந்த ‘ஆம்பள’ டீம் படப்பிடிப்பிற்காக ஊட்டியில் முகாமிட்டுள்ளது. தன் கணவர் சுந்தர்.சியுடன் குஷ்புவும் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். இதனால் இப்படத்தில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது....
மாயமான மலேசிய விமானத்தை தொடர்ந்து தற்போது மலேசிய போர்க்கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 8ம் திகதி MH 370 மலேசிய விமானம் நடுவானில் மாயமானதை போல் தற்போது அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 7 பணியாளர்களுடன் மாயமாகியுள்ளது. சி.பி.90.ஹெச் என்ற போர்க்கப்பல் நேற்று முன் தினம் புலாவ் லயாங் லயாங் (Layang Layang) பவளத்தீவு நோக்கி வழக்கமான ரோந்துப் பணிக்கு சென்றபோது திடீரென ரேடாரில்...