பூச்சிகளை உயிரோடு துடிக்க துடிக்க உண்ணும் இத் தாவரங்கள் பொதுவாக கண்டல் சூழலில் வாழ்கிறது. தமது நைதரசன் தேவையை நிறைவு செய்துகொள்ள அங்கிகளை பிடித்துண்கிறது.  
யாழ். கலைத்தூது மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நிகழ்வில் சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார் அதன் முழுவிவரம் வருமாறு:- சட்டத்துறையிலும் அரசியலிலும் பிரகாசித்து மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திய பல தலைவர்களை இந்த நாடு கண்டிருக்கிறது. சட்டத்தில் பாண்டித்தியம் பெற்று தங்கள் வாதத்திறமையாலும் வாக்குவன்மையாலும் மக்களைக் கவர்ந்து புகழின்...
வடமாகாண எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் செய்ய இடமளிக்கப்படமாட்டாது. மீறி செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் எச்சரித்துள்ளார். அதற்காக எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் அவற்றைக் கண்டு பின்வாங்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார். வல்வெட்டித்துறை பகுதியில் இழுவைப்படகு மூலமாக கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியைவழங்குமாறுகோரி நானை திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராத்தில் ஈடுபடவுள்ளனர் என இழுவைப்படகு தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்...
கொழும்பை அண்மித்த இங்கிரிய பொலிஸ் நிலையத்தின் முன்பாக அமைந்திருந்த சோதனைச் சாவடியை திருடர்கள் தூக்கிச்சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்துக்கு வருகின்றவர்களை சோதனைக்குட்படுத்துவது, பாதையைக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை முன்னிட்டு இரும்புக் கம்பிகளைக் கொண்டு இந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த சோதனைச் சாவடியை திருடர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளனர். பொலிஸ் நிலையம் முன்பாக இருந்த சோதனைச் சாவடி திருடிச் செல்லப்பட்ட சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொலிசாருக்கே...
ஆசிரியர்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்புக்கள் கவனயீனமாக இருப்பதனைக் கண்டித்து நாளை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர் தினமான நாளை யாழ்.நகரில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. மாணவர்களின் ஆளுமையை வளப்படுத்துவது மட்டுமல்லமல், மாணவர்களுடைய எதிர்காலத்திற்கான அத்திபாரத்தையும் இடும் ஆசிரியர்கள் சமகாலத்தில் பல்வேறு விதமான நெருக்குவாரங்களை எதிர் கொள்கின்றார்கள். அவர்களுடைய நலன்கள் தொடர்பில் அரசாங்கமும் பொறுப்புவாய்ந்த தரப்பு க்களும் கவனயீனமாகவே இருக்கின்றனர். எனவே சர்வதேச...
பாரிய அழிவுகள் இடம்பெற்றபோது அதனை தடுத்து நிறுத்தியிருந்தால் இன்று சர்வதேச விசாரணை பொறிமுறையொன்று தேவையற்றதாக இருந்திருக்குமென தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் எஸ்.துஸ்யந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய முன்னணியின் வவுனியா அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இன்று சர்வதேச பொறிமுறை என்பதனை நாம் எமது பார்வையில் எடுத்துக்கொள்ளும் போது யுத்தம் இடம்பெற்று மனித அழிவுகள்,...
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 27வது கூட்டத் தொடர், புதிய மனித உரிமை ஆணையாளர் இளவரசர் சியாட் றசாட் அல் ஹுசைனின் பங்களிப்புடன் நடந்து முடிந்தது. வழமைபோல், பல நாடுகளில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஆழமாக ஆரயப்பட்டதுடன், அதற்கான கண்டன உரைகளுடன், கண்டனப் பிரேரணைகளும், மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் சிரியா, ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீனம், சிறிலங்கா, சூடான், தென் சூடான், உக்ரைன், கொங்கோ...
நெடுங்கேணி பிரதேச கிராம மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளை வழங்கி உரையாற்றும் போதே “எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த பட்டிக்குடியிருப்பு, துவரங்குளம், கற்குளம், மாமடு, முத்துமாரி நகர், கனகராயன்குளம், புத்தூர்சந்தி, மன்னகுளம், கொல்லர் புளியங்குளம்,...
சிரியாவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து பிணைக்கைதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் சிறை பிடித்துள்ளனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அந்நாடுகளை மிரட்டுவதற்காக பிணைக் கைதியின் தலையை துண்டித்து படுகொலை செய்கின்றனர். கடந்த மாதம் அமெரிக்கா பத்திரிகை அதிபர் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் கோட்லாப் மற்றும் இங்கிலாந்து சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகியோரை தலை துண்டித்து கொன்றனர். இவர்களை தொடர்ந்து மற்றொரு இங்கிலாந்து பிணைக் கைதி ஆலன் ஹென்னிங்ஸ் என்பவரையும் சமீபத்தில்...
இங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட் போலம். இவர் லிபியாவில் பெங்காசியில் உள்ள சர்வதேச பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் தனது மனைவி சியோயினுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் மார்க்கெட் சென்ற அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை பிணைக் கைதியாக பிடித்த தீவிரவாதிகள் அவர் குறித்த வீடியோவை கடந்த ஆகஸ்டு 28–ந் திகதி வெளியிட்டனர். அதில் அவர் பிரதமர் டேவிட் கேமரூனிடம் தன்னை காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் பிணைக்...