தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது என்றும் அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா லண்டனில் நடந்த விருந்துபசார நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றுமுன்தினம் லண்டன் சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 'பி.ரி.எவ்.' முக்கியஸ்தர் ரூட் ரவி, அதன் முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆகியோரைச் சந்தித்ததன் பின் நிகழ்ந்த இராப்போசன...
2009 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடும் சிங்கள தேசம் ஆயுதமுறையில் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்துகின்றது.
Thinappuyal News -
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா தலைமையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் நகல் வரைபு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வருகின்ற தமிழின அழிப்பு நடவடிக்கை, 2009 ஆம் ஆண்டு மாபெரும் இனவழிப்பாக உச்சம் பெற்றது. இலட்சக்கணக்கான மனிதவுயிர்கள் காவுகொள்ளப்பட்டும், பல ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனமாக்கப்பட்டும், பல ஆயிரமாண்டு காலமாக தங்கள் சொந்த தாய் நிலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் வேரோடு...
நான் சமஷ்டி ஆட்சி முறைக்கு மாற்றாக இந்திய முறையிலான அரசியல் சாசனத்தையொத்த ஒரு தீர்வை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறேன் வீ. ஆனந்தசங்கரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்புக் கோரும் வகையிலான கடிதம்.
Thinappuyal News -
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்புக் கோரும் வகையிலான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
எமது மக்களுக்கு உண்மையாக இருப்போம் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்போது நான் வகிக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவி திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் 1989ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பதாக வகித்து வந்ததாகும். அகிம்சையையும், சகிப்புத்தன்மையையும் மிக...
அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் தீவிரவாதம் தொடர்பாக அறிக்கையொன்றை (Country Reports on Terrorism) வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெளிவந்த அறிக்கையில் 57 அமைப்புக்கள், சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களாக பட்டியல் படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் ஒன்று.
Thinappuyal News -
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் கூடி சில முடிவுகளில் உடன்பட்டிருக்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘தமிழ் தேசிய சபை’ ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அவ்வப்போது கூடி, முடிவெடுப்பதும், பின்னர் அந்த முடிவுகளை கிடப்பில் போடுவதும், தமிழ் அரசியல் வாசகர்களுக்கு புதிய விடயமல்ல. ஆனால், இதுவரை முடிவுகள் எடுக்கப்பட்ட போதிருந்த நிலைமைக்கும் தற்போதிருக்கின்ற நிலைமைக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு.
முன்னைய முடிவுகளின் போது, ஜயா...
புனித பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வத்திக்கானில் சந்தித்து அவரின் இலங்கை விஜயம் தொடர்பான உத்தியோகபூர்வ அழைப்பையும் கையளித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இலங்கையின் சமூக பொருளாதார நிலைமை குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது பாப்பரசரின் இலங்கை விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
TPN NEWS
வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்களை இலங்கை இராணுவம் கற்பழிப்பு : அதிர்ச்சித் தகவல்!
Thinappuyal News -
வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்களை இலங்கை இராணுவம் கற்பழிப்பு : அதிர்ச்சித் தகவல்!
இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனாண்டோ ஏன்பவர் தறோது ஒரு வெளிநட்டில் சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிற்து. இறுதி நேரத்தில் நடந்த போரில் இரணுவம் செய்த அட்டூளியங்களை அவர் புட்டுப் புட்டு வைக்கிறர். இராணுவத்தின் தேசிய அடையள அட்டையோடு தன்னை நிரூபிக்கும் அவர், சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சிக்கு முகம் மறைக்கப்பட்ட நிலையில்...
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து விடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா.| கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்.
வாஷிங்டனில் மார்டின் லூதர் கிங் நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பிரதமர் நரேந்திர மோடி. | கோப்புப் படம்: பி.டி.ஐ.
இந்தியா-அமெரிக்கா இடையே ஆன உறவில் புதிய வலுவான, நம்பகமான மற்றும் நீடித்த ஆற்றல் பிறந்துள்ளதாக இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஐந்து நாள் பயணம்...
இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றமில்லை – மகிந்தவின் கருத்த அமெரிக்க நிராகரித்தது
Thinappuyal News -
இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றமில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா இலங்கை தொடர்பான கடுமையான நிலைப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்த தகவல்களில் உண்மையில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பசாகீ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் நியூயோர்க்கில் வைத்து சந்தித்திருந்தார்.
எனினும் இலங்கை...
வெளிவிவகார செயற்பாடுகளை இராஜதந்திர ரீதியில் நகர்த்தும் தேசியப் பட்டியல் சுமந்திரன்
Thinappuyal News -
அண்மைக் காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் வெளிவிவகாரங்களின் திட்டங்களை அறிந்து அதற்கேற்ப தனது இராஜதந்திர நகர்வைக் கொண்டுசெல்கின்றார். காரணம் அவர் ஒரு சட்டத்தரணி மட்டுமல்லாது அரசியலில் சிறந்த பேச்சாளராகவும் திகழ்கின்றார். இவரைப் பற்றி அண்மைக்காலமாக இணையத்தளங்களில் அரசாங்கத்தின் கைப்பொம்மையாகச் செயற்படுகின்றார் என செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனாலும் தமிழரசுகட்சியின் சட்ட திட்டங்களுக்கமைய சுமந்திரன் அவர்களுடைய செயற்பாடுகள் நகர்த்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் வவுனியா நகரசபை மண்டபத்தில்...
தமிழ்த்தேசியத்தின் உரிமைகளை மீறி அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப தமிழரசுக்கட்சி செயற்படுகின்றது
Thinappuyal -
விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களைக் கடந்துள்ள இந்நிலையில் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியினர் செயற்பட்டுவருகின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால் மாகாணசபை உருவாக்கப்பட்ட காலந்தொட்டு தெரிவுக்குழு என்கின்ற போர்வையில் இலங்கையரசு அரசியல்க்கட்சிகளை ஒன்றிணைத்து அதனூடாக அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான அரசியலையே எதிர்ப்பு அரசியலாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செய்துவந்தார்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கான தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை இவற்றிற்காக போராடி வந்த விடுதலைப்புலிகளின் போராட்டத்தை...