வெலிமடை (Welimada) பகுதியில் கைவிடப்பட்ட கட்டடமொன்றில் மதுபான விருந்து நடத்திய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றினை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வெறிச்சோடி காணப்பட்ட கட்டடத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 பாடசாலை மாணவிகள் அருந்திக்கொண்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வெலிமடை பொலிஸார் விசாரணை இந்த கட்டடத்திற்கு பயிற்சி வகுப்புகளுக்காக வருகை...
  இன்று நள்ளிரவு (31) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும். மண்ணெண்ணெய் லீட்டருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும். 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலை மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படுத்தப்படும் என...
  மாந்தை மேற்கு காயாநகர் கிராம சேவையாளர் பிரிவின் ஈச்சளவக்கை கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்ப்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத உற்பத்தி நிலையமானது இன்று(31.03.2024) பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கு அமைய ஈச்சளவக்கை கிராமத்தின் மருதம் விளையாட்டு கழக உறுப்பினர் ஆறு பேர் ஊடகவியலாளர் சகிதம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத செயற்பாடுகள் இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 2 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இப்படியான சட்டவிரோத செயற்பாடுகள் குறித்த கிராமத்தில் செய்பவர்களால்...
  கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று(31.03.2024) ஆராதனையின் பின்னர் கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுக்கப்பட்ட கோரிக்கை இந்த கவனயீர்ப்பு போராட்டமானது போதகர் கிருபைராஜா தலைமையில் இடம்பெற்றதுடன் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேவேளை இப் போராட்டத்திற்கு பொலிஸார்...
  ஜனாதிபதியாக வர நினைக்கின்ற எவருமே தமிழரசு கட்சியின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக வரமுடியாதளவிற்கு தமிழரசு கட்சியை பலப்படுத்திக் கொள்வது தான் எங்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 126 ஜனன தினத்தையிட்டு நேற்று(31) தமிழரசுக்கட்சி ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில் தந்தை செல்வா பூங்காவில் இடம்பெற்ற போது அவரது திரு உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு...
  கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் அதிகாலையில் குடித்துவிட்டு அட்டகாசம் செய்த நபருக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். குறித்த நபர் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் குடித்துவிட்டு பொதுமக்களை தாக்கியுள்ளார். உடனடி நடவடிக்கை அவரின் அட்டகாசம் எல்லைமீறிச் சென்ற நிலையில் அங்குள்ள வியாபாரிகள் உடனடியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி பேருந்து தரிப்பிடத்தில் அமைதி நிலையை ஏற்படுத்த உதவுமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து இரவோடு இரவாக...
  ஞாயிறுத்தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே (India) செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2019ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போதே உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தியா மீது குற்றச்சாட்டு அண்மையில் கண்டிக்கு பயணம் செய்திருந்த அவர்,...
  மஹரகம பிரதான வீதியில் அம்பில்லவத்தை சந்திக்கு அருகில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் சேவை பெற வந்த பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 53 வயதுடைய மஹரகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவயந்துள்ளது. உயிரிழப்பிற்கான காரணம் சேவை பெற வந்த நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக மசாஜ் நிலையத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இது தொடர்பான...
  பல் வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை, பரகல, மொரவக பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், யுவதி ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட பல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி பல்கலைக்கழக படிப்பை முடித்து ஆசிரியர் தொழிலுக்காக காத்திருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
  குவைத்தில் இருந்து தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரை மனைவி நாட்டிற்கு அழைத்து வந்தமையினால் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் இன்று அதிகாலை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். குவைத் நாட்டை சேர்ந்த 80 வயது முதியவரை மனைவி அழைத்து வந்த நிலையில், தங்கும் இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது கணவன் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் தலைமறைவு சந்தேகநபர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதி எனவும்,...