வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின் இருப்பபையே இல்லாதொழிக்கும் தனது அடக்குமுறை நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்திக் கொள்வதற்கு காலக்கெடு விதிக்கவிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி. அடுத்த மூன்று மாதத்துக்குள் - அதாவது இந்த ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் - அடக்கு முறை நடவடிக்கைகளை நிறுத்தி, நிலைமையைச் சீர்செய்வதற்கு இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறுமானால் - அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருமானால் - தைத்...
  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை அந்தக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளில் தெரிவுசெய்யப்பட்டனர். இதன்படி தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, செயலாளராக கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த துரைராஜசிங்கம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவராக பொன். செல்வராஜா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவர்களாக திருகோணமலையைச் சேர்ந்த துரைரட்ணசிங்கம், அம்பாறையைச் சேர்ந்த தோமஸ்...
 தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் இரண்டாவது அமர்வு இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இளைஞர் மாநாடு ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இளைஞர் அணிப் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னைய தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி....
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் காலை 9.30க்கு ஆரம்பமான நிகழ்வுகளில் 160 பொதுச்சபை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இதனையடுத்து நாளை இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் வெளியிடப்படும் தீர்மானங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது. இன்றைய நிகழ்வுகளில் தமிழ்த் தேசியத்தின்...
சுப்பிரமணியன் சுவாமியும் சர்ச்சைகளும் என்று சொல்லலாம். இப்போது மீனவர்கள் பற்றி அவர் அடித்த கமென்ட் கடலோர மக்களின் மனத்தில் சுனாமியாகக் கொந்தளித்து வருகிறது. மீன் பிடிக்கிறதுக்காக எல்லைதாண்டி வரும் தமிழ்நாட்டுக் கப்பல்களை எல்லாம் பிடிச்சு வெச்சுக்குங்கோ. கப்பல் முதலாளிகளின் கட்டாயத்தினால் வரும் மீனவர்களை விடுதலை செஞ்சுருங்கோ என்று நான் சொன்னபடிதான் ராஜபக்ச நடக்கிறார்'' என சுப்பிரமணியன் சாமி தமிழக மீனவர்களுக்கு எதிராகக் கூறியுள்ள கருத்துக்களால் ஒட்டு மொத்த கட்சிகளும் தமிழக...
  சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் தயாரத்னாயக்க! நேற்று விடத்தல் தீவு மற்றும் மணாலறு ஆகிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை பார்வையிட்டுள்ளார். நந்திமித்ரகம ,நாமல் கம ஆகிய சிங்கள குடியேற்றப்பகுதிக்குச் சென்ற அவர் கட்டுமானப் பணிகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கும் என அப்பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களிடம் தெரிவித்துள்ளார்
அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் தலைமைத்துவங்களை இல்லாது முடக்குவதற்கான முயற்சிகள் பெரிதும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. பத்திரிகைகள் வாயிலாகவும், இணையத்தளங்களின் மூலமும் மட்டுமல்லாது தொலைபேசிகள் மூலமும் அச்சமூட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. கிழக்கு மக்களின் பாதிப்புக்களுக்கு சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதும் இயலாவிடில் ஆளுமை உள்ள சமூகத்தினை கட்டி எழுப்புவதுமே எமது இலக்கு. இவ் இலக்கை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. கிழக்கு மாகாணத்தில் இனப்பரம்பலை புரிந்து கொண்ட எவரும் ஜதார்த்தத்தினை உரைத்து இவர்களுக்கு...
  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முதல் நாள் நிகழ்வாக இன்று கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களது கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள்...
  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இளைஞரணி மகாநாடு நாளை(06.09.2014) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ள அதேநேரம், இம்மாநாட்டின் நோக்கம் என்னவென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களிடம் தினப்புயல் பத்திரிகை வினவியபொழுது, தேர்தல் சட்டங்களின் அடிப்படையிலும் ஓராண்டு இரண்டாண்டு என்ற ரீதியிலும் புதிய பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டும்இது ஒரு காரணம். அடுத்து இதனோடு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினையும் அதற்கப்பால் முஸ்லீம் மக்களையும் இணைத்து அது மட்டுமல்லாது தென்னிலங்கையில் இருக்கக்கூடிய முற்போக்கு ஆதரவாளர்கள் மற்றும் எமது கட்சியின்...
மக்களுக்காக செய்ய வேண்டிய அபிவிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தையும் மறந்து விட்டு வடக்கு மாகாண சபை தனியான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் அதிகாரம் இல்லாத காலத்திலும் அரசாங்கம் அங்குள்ள மக்களுக்காக பெரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்தியது என்று அமைச்சர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய...