யாழ்.ஆயர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று
Thinappuyal News -0
வடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டை!- யாழ். ஆயர்
வடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன்னிற்கு எடுத்துக் கூறியதாக யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.
யாழ்.ஆயர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இச்சந்திப்பை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
வடமாகாண சபைத்தேர்தலில் வெற்றிபெற்று தமது ஆசணங்களில் அமைச்சர்கள் அமர்ந்த பின்னர் தமிழ் மக்கள் எதிர்பார்த்ததன் படி தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, காணாமற்போனோர் விவகாரம் மற்றும் ஏனைய அபிவிருத்திகள் தொடர்பில் அக்கறை காட்டுவார்களென எண்ணியிருந்தனர்.
ஆனாலும் வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தற்பொழுது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கருணா போன்றவர்களைப்போன்று அரசுடன் இணைந்த அரசியலையே மேற்கொண்டுவருகின்றனர். இதற்காகவா மக்களாகிய நாம் இவர்களை வடமாகாணசபைக்கு வாக்குகளை அளித்து தெரிவுசெய்தோம்....
பாகிஸ்தான் உளவு நிறுவனமான அய்.எஸ்.அய். அமைப்பிலிருந்து பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு, அமெரிக்காவில் செயல்பட்ட குலாம் நபி ஃபாய் என்பவரை அமெரிக்க உளவுத் துறையான எஃப்.பி.அய். கைது செய்துள்ளது.
காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகளை அமெரிக்காவில் உருவாக்குவதற்காக அவர் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டுள்ளார்.
இதற்காக அவர் 4 மில்லியன் டாலர் பணம் பெற்றுள்ளதாக ‘எப்.பி.அய்.’ அமெரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் நடத்துவதே இவர் வேலை.
இதில் காஷ்மீர் பிரச்சினையில்...
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 65 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Thinappuyal News -
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 65 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட மதிய உணவே விஷமாகியுள்ளதாக தொழிற்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு தொடர் வாந்தியோடு தலைசுற்றலும் ஏற்பட்டதாகவும், இன்று காலை இவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தற்போது 35 பேர் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சம்பவம்...
விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் ஆளுனரின் அனுமதி அவசியம்!- இந்தியாவிற்கு பயந்தவர்கள் போல் இலங்கை நடிக்கிறது
Thinappuyal News -
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் அவர், வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளும் போது உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
எந்தவொரு அதிகாரியும் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது அவரை விடவும் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக எவ்வாறு...
தந்தை செல்வா அகிம்சைவாதி. விடுதலைப் புலிகள் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் தந்தை செல்வாவிற்கு புலி முத்திரை குத்த வேண்டாம்-வீ.ஆனந்த சங்கரி
Thinappuyal News -
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணையுமாறு ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோவுக்கு சங்கரி அழைப்பு
தமிழரசுக் கட்சியினர் மக்களுக்கும் தந்தை செல்வாவிற்கும் மாபெரும் துரோகம் செய்கின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கை தமிழரசுக் கட்சி 1949ம் ஆண்டு, சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள், ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து...
அரசாங்கத்தால் திட்டமிட்டு முல்லைத்தீவு மாவட்டம் சூரையாடப்படப் போகிறது தழிழ்தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பா.உ. சிவசக்தி ஆனந்தன் தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி
Thinappuyal News -
அரசாங்கத்தால் திட்டமிட்டு முல்லைத்தீவு மாவட்டம் சூரையாடப்படப் போகிறது
தழிழ்தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பா.உ. சிவசக்தி ஆனந்தன்
தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி
எம்மைப் புறக்கணிக்க எமது ஆதங்கங்களைப் புறக்கணிக்க அரசாங்கம் தீர்மானித்தால் வெளி நாடுகளுக்கு எமது குறைகளை எடுத்துச் செல்வதை விட எமக்கு வேறு வழியிருக்காது-முதலமைச்சர் விக்னேஸ்வரன்
Thinappuyal News -
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
03ஃ09ஃ2014 அன்று மதியம் 03.00 மணிக்கு
முல்லைத்தீவு மரிடைம் பற்று பிரதேச செயலரின் கருத்தரங்கு மண்டபத்தில்
இணைத் தலைவரின்
தலைமையுரை
குருர் ப்ரம்மா.............!
இணைத் தலைவரவர்களே, அமைச்சர்களே, அரசாங்க அதிபர் அவர்களே, பிரதேசச் செயலாளர்களே, எமது செயலாளர் அவர்களே, மற்றைய செயலாளர்களே, ஆணையாளர்களே, மேலும் சகஅலுவலர்களே!
இணைத் தலைவராக முல்லைத்தீவில்; நான் பங்கு பற்றும் முதற் கூட்டமிது. முன்னர் எமது கட்சியானது முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றாமல் இருந்தமை உண்மைதான்....
பாலுணர்ச்சியைத் தூண்டும் பூசணிக்காய் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூசணிக்காயில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.
Thinappuyal News -
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூசணிக்காயில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.1 கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான், இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம்.
உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது.
சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது, பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது.
திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.
இதன் விதைகளை காயவைத்து, பொடியாக செய்து...
சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்ட தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Thinappuyal News -
ஐ.நா.விசாரணைக் குழுவின் சாட்சியங்கள் சேகரிக்கும் முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவு
சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்ட தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களிடம் அதற்கான சாட்சியங்களை திரட்டும் பணிகள் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமைத்த விசாரணைக் குழுவினாலும் விசாரணைக் குழுவினரின் வழிகாட்டுதலில் ஈழத்தமிழ் அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வரலாற்று முயற்சியின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களிடம் சாட்சியங்களை...