கடந்த முப்பது வருடமாக நடந்து முடிந்த தமிழீழ நாடகத்தின் திரைமறைவு இயக்குனர்கள் யார் என்பது கே.பி யின் சுய வெளிப்படுத்துகையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சுய வெளிப்படுத்துகையானது டீ.பி.எஸ். ஜெயராயா என்ற ஏகாதிபத்திய ஏஜண்டும் படு பிற்போக்குவாதியுமான ஊடாகவிலாளர் கே.பியைச் செவ்விகண்டபாணியில் மிக நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்டு பத்திரிகைளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த டி.பி.எஸ்.ஜெயராஜா யுத்த காலங்களில் இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகளோடு உறவு வைக்கவும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புரட்சித் தயாரிப்பு ஊடகமான...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு 2013 இல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு ஆண்டுகள் தடையை ஐந்து ஆண்டுகளாக நீட்டித்துச் சட்டத் திருத்தம் செய்தது. அந்த அடிப்படையில், இந்த ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடை ஐந்து ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தடையை நீக்கக் கோரி, தன்னையும் ஒரு தரப்பாகத் தீர்ப்பு ஆய...
  பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்ட பிரபாகரனுக்கு ராஜீவ்காந்தி செய்த துரோக செயலும் அதன் பின் விளைவுகளும் புலிகளுடன் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த இந்தியா, தனது அரைகுறை ஒப்பந்தத்திற்கு புலிகளின் தலைவர் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்பதை நன்கு உணர்ந்திருந்தது. ஆனாலும் மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு என்ற ரீதியிலும், அப்பொழுது ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த ஒரே அமைப்பு என்ற ரீதியிலும் புலிகளை இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது...
புதுடில்லியில் கடந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த சமயம், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் கோடி காட்டியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தத் தகவலை நேற்று திங்கட்கிழமை 'மலரும்' இணையத்துக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது வெளியிட்டார். புதுடில்லி மற்றும் தமிழக விஜயங்களை முடித்துக் கொண்டு இரா.சம்பந்தன் எம்.பி. நேற்றுமுன்தினம் ஞாயிறு மாலை கொழும்பு திரும்பினார்....
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றி பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துரையாடினார் காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும்  போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு, அனைத்து இயக்கங்களினதும் போராளிகளுக்கான வாழ்வாதாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனுக்கு  சிவசக்தி ஆனந்தன் எடுத்துரைத்தார். பா. உறுப்பினரால் வலியுறுத்தப்பட்ட மேற்குறித்த விடயங்களை மிகுந்த அவதானத்துடன் செவிமடுத்த உயர்ஸ்தானிகர், தன்னால்...
      காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (30.08.2014) அன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றதுடன், மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்காக வவுனியா அரச அதிபரைச் சந்திக்கச்சென்றபொழுது அதனை மேற்கொள்ளவிடாது பொலிஸார் தடுத்ததையடுத்து பொலிஸாருக்கும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும், வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும், மக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அன்றைய தினம் சனிக்கிழமை ஆகையால் அந்த மகஜரினை வவுனியா அரச அதிபரிடம் கையளிக்கமுடியாதிருப்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா தெரிவித்ததுடன் அந்த மகஜரினை காணாமற்போனோர் சங்கத்தின் தலைவியிடமிருந்து பெற்றுக்கொண்டு...
நாட்டின் உழைக்கும் மக்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் அரசியல் செயற்பாடுகளை அழிக்கும் ஒப்பந்தம் பொதுபல சேனா அமைப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் முதல் கட்டமாக சுகாதார சேவையின் சிற்றூழியர் சங்கம் என்ற அமைப்பு நேற்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள ஊழலான நிலைமையை போக்குவதற்காக அந்த துறையின் கீழ் மட்டத்தில் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஞானசார தேரர்...
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து இந்திய அரசாங்கத்தின் கருத்தாக இருக்காது! ஜெயலலிதா நம்பிக்கை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்யப்படுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமருக்கு நேற்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்தநிலையில், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார். இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தமிழக மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையானதுää மனித நேயமற்ற பயமுறுத்தும் நடவடிக்கையாகும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்யப்படும் மீனவர்களின்...
நாட்டை என்னிடம் தாருங்கள் அபிவிருத்தி செய்து காட்டுகிறேன்:  தழிழ் இனத்தை கொன்று ஒழித்த அடுத்த கள்ளன் பொன்சேகா சவால் நாட்டை தன்னிடம் ஒப்படைத்தால், மூன்று வருடங்களில் சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்து காட்டுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனமல்வில பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள், கடந்த மேல் மற்றும் தென் மாகாண...
24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!  குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம்...