இலங்கை அரசாங்கம், தமிழ் சிறுபான்மையினரின் சமவுரிமை, இறைமை மற்றும் சுயமரியாதை என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இன்று புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது மோடி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையின் தமிழ் மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமை, நீதி மற்றும் சுயமரியாதை என்ற அடிப்படையில் அவர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று இந்திய பிரதமர் இதன் போது கோரியதாக அறிக்கை ஒன்றில்...
மோடியுடன் கூட்டமைப்பினர் சந்திப்பு! - மன்மோகன் சிங், அஜித் டோவல், கூட்டமைப்பினர் சந்திப்பு இந்தியா வந்துள்ள இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இலங்கையில் தமிழர்கள் தாயகமான வடகிழக்கு பகுதியில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மோடியிடம் வலியுறுத்தினர். அத்துடன், இலங்கையில் 13வது...
  அமரர் பொன் சபாபதி நினைவு நிதியநிகழ்வு 2014. கிளி ஃகிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய(மத்திய கல்லூரி) மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப்பங்களிப்புடனும், அமரர் பொன் சபாபதி அவர்களின் மாணவர்களது நிதிப்பங்களிப்புடனும் பெற்றோரை இழந்த 300 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இம் மாணவர்களுக்காக மாதந்தோறும் கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்வில் வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் குருகுலராஜ மற்றும் த.தே .கூ பாஉ. சிறிதரன் மற்றும் மாணவர்களையும் படத்தில் காணலாம் ...
  தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் மற்றும் புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்று இராணுவத்திடம் சரணடைந்த நிலையில், அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தியை அனைவரும் அறிவோம். இருப்பினும் இராணுவம் இதனை முற்றாக மறுத்து வருகிறது. இவர்கள் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்திடம் சென்று சரணடைய முற்பட்டவேளை, இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், எரிக் சொல்கைம், ஊடகவியலாளர் மரியா கொல்வின், மற்றும் விஜய் நம்பியார் ஆகியோருடன் தொடர்புகளை மேற்கொண்டனர்....
தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என  வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள், டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, 13வது அரசியல் சட்ட திருத்தம் குறித்து...
வடமாகாணசபை பொறுப்பேற்று ஆசனத்தில் அமர்ந்த சி.வி விக்னேஸ்வரன் இவ்வளவு காலமாக என்ன செய்கின்றார் என்ற கேள்வியை மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். 89 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று யாழ்.மாவட்டத்தில் வெற்றிவாகை சூடிய அனந்தி சசிதரன், வடமாகாணசபைக்கு சைக்கிளில் வந்துள்ளமையானது ஏனைய வடமாகாணசபை உறுப்பினர்கள் மீது வட மாகாண ஆளுநரும், முதலமைச்சரும் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது. அரசாங்கத்துடன் சேர்ந்து கூத்தாடும் முதலமைச்சராகவே மக்கள் பார்க்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிகாரங்களை கையில் எடுத்து...
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு சர்வதேச ரீதியாக பெரும் வர்த்தக முயற்சிகளில் கோத்தபாய ராஜபக்ச இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட யுத்தவெற்றியினை அடுத்து விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகைப் பணம் மற்றும் தங்கம் என்பன இராணுத்தினரால் கைப்பற்றப்பட்டன. உள்நாட்டில் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் மட்டுமே ஆயிரக்கணக்கணக்கான கோடி ரூபாய் பெறுமதியைக் கொண்டிருந்தன. இதற்கு மேலதிகமாக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் கே.பி.யின் கைது மூலம் சர்வதேச ரீதியாகவும்...
யாழ்ப்பாணத்தில் முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் மீது இனம் தெரியாத நபர்கள் நேற்று இரவு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது நல்லூர் செட்டிதெரு வீதியில் வைத்து இரவு இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் முகத்தில் காயம் அடைந்த நிலையில் விஜயகாந் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இத்தாக்குதல்...
போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக - மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக்...
ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் ஐக்கிய அமெரிக்கா கொண்டுவந்த சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச அரங்கில், இலங்கைத்தீவின் இனமுரண்பாடு என்பது ஒரு பேசுபொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தி நிற்கிறது. அதே சமயம் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவிரும்பும் வல்லாதிக்க நாடுகள் இப்பிரச்சனையை பயன்படுத்த விரும்புவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.    துரதிர்ஸ்டவசமாக இந்த ஆதிக்கச்சமரில் தமது விருப்பத்திற்கு மாறாக இலங்கைத் தீவில் வாழும் மக்களும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்....