சென்னை: நடிகர் நாகேஷ் பேரன் ஹீரோவாக அறிமுகமாகிறார்.கறுப்பு வெள்ளை முதல் கலர் பிலிம் காலம்வரை 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்திருப்பவர் நடிகர் நாகேஷ். இவரது மகன் ஆனந்த்பாபுவும் ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது மகனும், நாகேஷ் பேரனுமான கஜேஷ் ‘கல்கண்டு என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏ.எம்.நந்தகுமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தென்னவன், ஜாம்பவான் படங்களை இயக்கியவர். படம் பற்றி அவர் கூறியதாவது: நகைச்சுவை நடிகர்...
‘தமிழ் படங்களை விட்டு விட்டு நான் ஏன் இந்திக்கு போகணும் என்றார் சூர்யா. இதுபற்றி சூர்யா கூறியது:மலையாள படம் ‘ஹவ் ஓல்டு ஆர் யு ரீமேக் செய்வதன் மூலம் தமிழில் ஜோதிகாவை நடிக்க வைப்பதுபோல் கன்னடம் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கிலும் அவர் நடிப்பாரா என்கிறார்கள். முதலில் இப்படத்தை தமிழில் உருவாக்குகிறோம். அது எந்தளவுக்கு பொருந்துகிறது என்பதை பார்த்துத்தான் அடுத்த படம் பற்றி முடிவு செய்யப்படும். மலையாள படமாக இருப்பதால்...
செக் மோசடி வழக்கில் கைதான சரண், ‘பிரச்னையிலிருந்து மீண்டு வந்துள்ளேன் என்றார்.காதல் மன்னன், அமர்க்களம் போன்ற படங்களை இயக்கியவர் டைரக்டர் சரண். சமீபத்தில் காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு இயக்குனர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. தற்போது வினய் நடிக்கும், ‘ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்கி வருகிறார் சரண். அவர் நேற்று குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் கூறியது: சிறுவயது...
புள் மீனிங் வரிகள் இருந்தால் பாட மறுத்து முரண்டு பிடிக்கும் ‘ஆண்ட்ரிய’ நடிகை, படங்களில் கவர்ச்சி காட்டுவது நியாயமா என்று ஓரிரு இசையமைப்பாளர்கள் புலம்புகின்றனர். ஆனால், அதுபற்றி கவலைப்படாத நடிகை, அவர்களை எடுத்தெறிந்து பேசுகிறாராம்.ரிஸ்க் எடுக்க வேண்டாம்  
ரஷ்யாவின் உதவியால் உக்ரைனில் இருந்து கிழக்கு உக்ரைன் என்ற தனிநாடு உருவாக்கப்பட்ட பின்னர் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரொஷன்கோவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று முதன்முறையாக சந்தித்து பேசினார். உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க ரஷ்ய ஆதரவாளரான முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறியது. இதனையடுத்து, தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற...
போரினால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடான் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான சரக்கு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகினர்.தெற்கு சூடானின் எண்ணெய் வளம் மிக்க வடபகுதியில் உள்ள வாவ் நகரில் இருந்து பெண்டியுவில் உள்ள ஐ.நா. முகாமுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்றபோது, தகவல் தொடர்பு அறையின் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர், பெண்டியு நகரில் இருந்து...
உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள எபோலா நோயால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் பலியான 4 நைஜீரியர்களின் பிரேதங்களும் ஒன்றாக எரிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன. கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதச்சடங்குகளின்படி, பிரேதங்களை புதைப்பதற்கு பதிலாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இந்த 4 பிரேதங்களும் லாகோஸ் நகரில் ஒன்றாக எரிக்கப்பட்டதாக நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல்,...
1997-ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இருந்து மழைப்பொழிவின் அளவு பற்றி அறிவதற்காக விண்ணில் செயற்கைக்கோள் ஒன்று ஏவப்பட்டது. தி டிராபிக்கல் ரெயின்பால் மெஷரிங் மிஷன் (டி.ஆர்.எம்.எம்) என்ற அந்த செயற்கைக்கோளை நாசாவும், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து திட்டமிட்டது. இந்த செயற்கைக்கோளில்தான் முதன்முதலாக ஆர்பிட்டல் பிரிசிபிடேஷன் ரேடார் பொருத்தப்பட்டிருந்தது. வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட இது விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்துள்ளது. குறிப்பாக, இதுவரை...
அணு ஆயுத சோதனைக்கு எதிரான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29–ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் அணு ஆயுதங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அணு ஆயுத பரவல் தடைச் சட்டம் ஒன்றை ஐ.நா. கொண்டு வந்தது. சீனா, எகிப்து, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதில் கையெழுத்திட்டு இருந்தாலும் கூட, இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒப்புதலை இன்னும் இந்த நாடுகள்...