ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து அப்பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு என்று பெயரிட்டு அரசு அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் இந்தியாவில் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து அந்த இயக்கத்தில் சேர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவிலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை அவர்கள் மூளைச்சலவை செய்து சேர்த்துள்ளதாக தெரிகிறது. இதுவரை...
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி இம்ரான் கான் மற்றும் காத்ரியின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம் அருகில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பதவி விலகும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று எச்சரித்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு ஒருபுறமிருக்க, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையும் பிரதமர் நவாசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று ராணுவ தளபதி ரகீல் ஷெரீப்பை சந்தித்து...
இந்தியப் பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது கூட்டமைப்பிடம் அவர் கூறியது என்ன?, பிரதமர் மோடியிடம் கூட்டமைப்பு கூறியது யாது என்பன பற்றித் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. ஏனெனில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது. அதேநேரம் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் ஆட்சி மோடியின் கைகளில் என்பதும் தெரிந்த விடயம். எனவே எங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்ற...
உலகிலேயே முதன் முதலில் தமிழர் பிரதேசங்களுக்கு பாப்பரசர் பிரன்ஸிஸ் செல்வதால் முக்கியம் பெறுகிறார் என வத்திக்கானைத் தளமாகக்கொண்டுள்ள 'இன்சைடர்' இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 26 வருடங்களாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் போர் இடம்பெற்ற பகுதியை அவர் தனது பயணத்துக்கான இடமாகத் தெரிவு செய்திருக்கிறார் இதனால் அவர் முக்கியம் பெறுகிறார் எனவும் தெரிவித்துள்ளது. அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான மூன்று...
சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் தனது அதிகாரத்தின் கீழ் எடுத்து வைத்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் செயற்படுவதால் சர்வாதிகாரம் மேலோங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று (25.08.14) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் உihயாற்றிய சரத் பொன்செகா தேர்தல் திணைக்களம் உட்பட அனைத்து முக்கியமான அரச நிறுவனங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார். ஊழல் மோசடி மலிவடைந்துள்ளது....
    இன்று வவுனியாவில் நடைபெற்ற கார்த்திகேசு தங்கராஜா குலேந்திரன் {இந்திரன்}மரணச்சடங்கில் த.தே.கூ பா.உ சிவசக்திஆனந்தன் ;சிறிடெலோ தலைவர் உதயராசாவும் பெருந்திரலான வர்த்தக உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.அன்னார் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பது  குறிப்பிடதக்க விடையமாகும்.அன்னாரின் நல்லடக்கம் வவுனியா தச்சனா மடு மயாணத்தில் தகனம் செய்யப்பட்டது.   TPN NEWS  
  வாரம்தோறும் வன்னி  மண்ணில் இருந்து வெளிவருகின்ற தினப்புயல் பத்திரிகை மீதுஇனம் தெரியாதோரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கடந்த ஞாயிறு ( 24-08-2014}அன்றுவெளிவர இருந்த எரிக்சொல்கெம் தழிழ்மக்களுக்கும் LTTE யினறுக்கும் செய்த வரலாற்றுதுரோகம் என்பதே அக்கட்டுரை ஆகும் இது தொடபாக ஆராயப்பட் வருவதுடன் இப் பத்திரிகைதொடர்ந்து வரும் என்பதையும் தினப்புயல் நிர்வாகம் வாசகரகளுக்கு அறியத்தருகிறது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்திய சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று அங்கிருந்து திடீரென தமிழகத்திற்குப் பயணமாகினர். சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகியோர் நேற்றிரவு நாடு திரும்பினர். தமிழக விஜயத்தின் போது அ.தி.மு.க....
மத அமைப்புக்களுடன் மோத வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மத அமைப்புக்களுடன் அமைச்சர்கள் மோதுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மோதிக் கொள்வதனால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக் வாய்ப்புக்கள் அதிகமாககும். மத அமைப்புக்களுடன் வேலை செய்யும் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும், மத அமைப்புக்கள் ஏதேனும்...
சாட்சியாளர்களுக்கு பணக் கொடுப்பனவு: ஜீ.எல் பீரிஸின் கருத்துக்கு கிளம்பிய விமர்சனங்கள் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், பணம் கொடுத்து சாட்சியங்களை பெறுவதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கூறிய கருத்துக்கு பலரும் தமது விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்த கருத்தை முட்டாள்தனமாக கருத்து என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நடந்திருந்தால் ஜீ.எல் பீரிஸ் அதற்கான ஆதாரத்தை...