ஈழ விடுதலைப் புலிகளை வீழ்த்திய பின்னர் புலிகளை அழித்து விட்டோம் என்ற மமதையில் இலங்கை இராணுவத்தின் அட்டகாசம் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. வடக்கில் நாளாந்தம் சிறுமிகள் மற்றும் குடும்பப் பெண்களை சிறிலங்கா படையினர் கற்பழிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது உலகமறிந்த உண்மைகள். இவைகள் ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஆனால் இதுவரையும் வெளிவராத செய்திகளை கிழக்கின் புல்மோட்டையில் இருந்து பொத்துவில்; வரையுமான இராணுவ ரோந்துச் செய்திகளைப் பார்ப்போம். 24 மணிநேரமும்...
  ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில் "எவ்வித சந்தேகமும் இல்லை" என இதனை ஆராய்ந்த முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் அக்கட்டுரையின் முழுவிபரமாவது, மிகப் பெரிய படுகொலை நாடகத்துக்கு பின்னால் மறைந்திருந்த திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு...
காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் ஐரோப்பாவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக சிலுமின என்ற சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் கிழக்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு இரகசிய வழிகளில் தப்பிச் சென்றுள்ளனர். வடக்கு கிழக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுரையில் சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தமிழ்த்...
இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் எல்எல்சி எனப்படும் லிபட்டி இன்டர்நெசனல் குரூப் என்ற பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளது. இதற்காக இலங்கை அரசாங்கம் 760 000 அமெரிக்க டொலர்களை செலுத்த உடன்பட்டுள்ளது. இலங்கை அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் இலங்கையை அமெரிக்காவுக்குள் பிரசித்தப்படுத்துவதற்காக இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில் மத்திய வங்கியின் உதவி ஆளுநர் பி நந்தலால் வீரசிங்க கையொப்பமிட்டுள்ளார். லிபட்டி நிறுவனத்தின்...
இலங்கையில் இம்முறை நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 120 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது. 60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறியுள்ளார். இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்யும் இந்த பாதுகாப்பு மாநாடு 4 வது முறையாகவும் நாளை கொழும்பில் ஆரம்பமாக உள்ளது. இந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை...
அண்மைய நாட்களாக உலாவி வந்த ஒரு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை. இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு இந்தியாவோ, தாய்லாந்தோ வீசா வழங்க மறுக்கவில்லை என்று அவர் உறுதிபடுத்தியிருக்கிறார். சில வாரங்களாக இந்த விவகாரம் ஊடகங்களில் பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வந்தது. ஏனென்றால் இந்த விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை...
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இராணுவ நீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் பற்றி ஐ.நா மனித உரிமை குழு கேள்வி எழுப்பியுள்ளதுடன் இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தை கேட்;டுள்ளது. ஓக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள குறிப்பிட்ட குழுவின் அறிக்கை இலங்கை பற்றிய பல கேள்விக்கணைகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இலங்கை குறித்து ஒக்டோபர் 7;ம் திகதி இந்த குழு விசாரணை செய்யவுள்ளது...
கண்கள் கட்டப்பட்ட நிலையில் மனித உருவில் ஒவியத்தை வரைந்து முடித்த வாளிபன்
  14.08.2006 அன்று வள்ளி புனம் செஞ்சோலை வளாகத்தில் இனவெறிச் சிங்கள அரசின் இரும்புப் பறவைகளின் குண்டுத்தாக்குதலில் எமையெல்லாம் விட்டுப்பிரிந்த மாணவச் செல்வங்களின் 7ம் ஆண்டு நினைவாக.14.08.2013 வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம். தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′...
ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவை கட்சியின் பிரதி தலைவராக நியமிக்கவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருங்கிய தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. பிரதி தலைவர் பதவி வழங்கப்படுமானால் அது சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படும் மூன்றாவது சந்தர்ப்பமாக இருக்கும். பல கட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து பழையவற்றை மறந்து ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க,...