மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லையென்று மன்னாரில் இடம்பெற்ற விசாரணையின் போது ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே கலகொட அத்தே ஞானசாரதேரர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக தேரர் மேலும் தெரிவிக்கையில்,...
  இந்திய நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நாடு முழுவதும் 68வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் டெல்லியில் இன்று (15.08.14) காலை காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தலைப்பாகை அணிந்த உடையுடன் டெல்லி செங்கோட்டை சென்றடைந்தார். அங்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர்...
இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் பௌத்த பலத்தை மேலோங்கச் செய்வதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது மரணித்த மருத்துவபீட மாணவியின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி மரணித்த மகிழுரைச் சேர்ந்த கெங்காதரன் மாதுமை (வயது-22) என்ற களனி பல்கலைக்கழக மருத்துவபீட மாணவியின் மரணத்திலேயே சந்தேகம் நீடிக்கிறது. விசம் தீண்டி இறந்ததாக முன்னர் கூறப்பட்டிருந்தபோதிலும் பின்னர் தாயாரின் பார்வையிலே சந்தேகம் வரவே பிரபல பெண் சட்டத்தரணி திருமதி எஸ்.தாரணி மூலமாக நீதிமன்றில்...
எங்கள் தேவதூதுவனின் இறக்க முடியாத சிலுவையைப் போல்  என் மனக்கிடங்கினுள்ளும் அமிழ்ந்து கிடக்கும் பளுவையும் என்னால் இறக்க முடிவதில்லை! ஓட ஓட விரட்டப்பட்டோம்  ஒன்றின் மேலொன்றாய்ப் பிணமாய் வீழ்ந்தோம் வீழ்த்தி விட்டோமென்ற வெற்றிக்களிப்பில் இன்று நீ வீழ்ந்து கிடக்கின்றாய்! பார் விழிகளில் நீர் வழிய வீதிகளில் நாங்கள் வெதும்பிக் கிடக்கின்றோம் கொடி ஏற்றி, கொலு வைத்து குடம் நிறைந்தது போலநிறைந்த நிறைந்த எம் வாழ்வில் குடியேற்றங்களுக்காய்க் காத்துக்கிடக்கின்றோம் அகதிகளாகி!  அழகுதமிழ்ச் சோறும் ஆடிக்கூழுமுண்ட எங்கள் வாயினுள் பரிசென்று பால்சோறு திணிக்கின்றாய் நீ புசிக்கின்றோம் பசித்த வயிற்றுக்காய் நாங்கள், பஞ்சபுராணங்களும், வேதங்களுமோதிய புல்லாங்குழலிற்கும், நாதசுரத்திற்கும் பண்சலைகளில் என்ன வேலை! பிரித் ஓதுவதாய் பிதற்றுகிறாய் நீ பிரித்துவைத்தது நீயென்றறியாமல் பந்திவைத்து,...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள் குவித்தது. தரங்க அதிகபட்சமாக 92 ஓட்டங்கள் குவித்தார். நட்சத்திர ஆட்டக்காரர் ஜெயவர்த்தனவிற்கு இந்த போட்டி கடைசி டெஸ்ட் போட்டி...
இலங்கை இராணுவத்தில் அண்மையில் இணைந்திருந்து மரணமடைந்த தமிழ் யுவதியின் மரணம் தொடர்பில் குடும்பத்தவர்களிடையே பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அவசர அவசரமாக படைத்தரப்பு பத்திரிகையாளர் மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடத்தியுள்ளது. ஓட்டுசுட்டான் செல்வபுரத்தில் பிறந்த பிரசாத் அஜந்தா (வயது 22) என்பவரே படையில் இணைந்து பலாலியில் ஆயதப்பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை நோய்வாய்ப்பட்டதாக கூறி யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். பின்னர் அவரது சடலம் குடும்பத்தவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனிடையே அவரது...
கே.பியை பாதுகாத்து கொண்டுள்ள அரசாங்கம், சர்வதேச ரீதியாக சர்வதேசத்தின் உதவியுடன் புலிகளின் பணத்தை கண்டுபிடிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்துள்ளது.புலிகளின் பணத்தை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அரசாங்கம் கூறும் கதையை நாம் நம்ப தயாரில்லை.போர் நடைபெற்ற போது, புலிகளுக்கு சொந்தமான 220 கிலோ கிராம் தங்கத்தை தனது இரண்டு கைகளால் பொலிஸாரிடம் கொடுத்ததாக சரத் பொன்சேகா கூறியுள்ளார். இன்று அதை பற்றி எவரும் பேசுவதில்லை. அது நாட்டின் சொத்து....
ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவிபிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது பக்கச்சார்பின்றி நேர்மையாக நீதியாகச் செயற்பட்டு வருகின்றார். அதனால் ஆத்திரம் கொண்டுள்ள அரசாங்கம் அவர் மீது குற்றச்சாட்டி விமர்சித்து வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவி்த்தார். அரசாங்கம் இவ்வாறு ஏனையோர் மீது குற்றஞ்சாட்டுவதை விட்டு விட்டு, தாம் விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்வதுடன் தன்னால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்...
  வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படை வீரர் இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முற்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான எம். கே. சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் ஆகியோர், இதுபோன்ற அராஜகங்களைத் தடுப்பதற்கு மக்கள் குடியிப்புகளுக்கு நடுவிலுள்ள இராணுவம் மற்றும் கடற்படை முகாம்களை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற முனைப்புக்கள் தொடருமாயின் எமது மக்களைப்...