பிரேசிலின் ஆபத்தான வளைவில் அதிபயங்கர விபத்துக்கள்
  கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ஆகேட் இன்டர்நெஷனல் வர்த்தக தொகுதி திறப்பு விழாவிற்கு 300 மில்லியன் ரூபா பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. கொழும்பு - 07ல் அமைந்திருந்த கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் முன்னைய அலுவலகத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டு ஆகேட் இன்டர்நெஷனல் என்ற பெயரில் வர்த்தகத் தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் மறுசீரமைப்புக்கு 5000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வர்த்தகத் தொகுதியின் திறப்பு விழா அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக...
விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் நிலைத் தலைவருக்கு அவுஸ்ரேலியா புகலிடம் வழங்கியுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான இரண்டாம் நிலைத் தலைவர் சுவர்ணராஜா பூர்ணராஜா என்பவரை மலேசிய அதிகாரிகள் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தத் தீர்மானித்திருந்தனர். எனினும், அவரை நாடு கடத்துவதற்கு அவுஸ்ரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சுவர்ணராஜாவிற்கு அவுஸ்திரேலியா அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாத...
 மண்ணின் சொந்தக்காரர்களான தமிழ் மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், அந்நிய குடியேற்றங்களுக்கு தாராளமாக வழங்கப்படுகின்றன என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் ஏற்பாட்டிலும் பிரான்ஸ் t .r .t . வானொலியினுடைய பங்களிப்பிலும் இடம்பெற்ற மூத்த பிரஜைகள் இல்லத் திறப்பு விழாவில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ‘அ’ பகுதியில் 09.08.2014 அன்று காலை 10 மணிக்கு பிரதம விருந்தினர் உரை குருர் ப்ரம்மா …………………. தலைவரவர்களே, கௌரவ அமைச்சர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே, இன்று திறக்கப்பட்ட இந்த முதியோர் இல்லம் ப்ரான்சில் உள்ள கொடையாளர் ஒருவரின் தாராள சிந்தையின் பிரதிபலிப்பாக கட்டப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அவர் தமது தாயார் ஏழாலை ப+பதி டீச்சர் ஞாபகமாகக் கட்டிக் கொடுத்துள்ளார் என்று அறிகின்றேன். அவருக்கு எனது மனமார்ந்த...
ஆளும் கட்சிக்குள் பாரியளவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக மவ்பிம லங்கா கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி தொடர்பிலான மாற்றங்களை தெளிவாக அவதானிக்க முடியும். ஆளும் கட்சிக்குள் உள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. ஊவாவின் முதலமைச்சருக்கு எதிராக ஏற்கனவே சில ஆளும் கட்சி வேட்பாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அராஜக அரசாங்கத்தின் தோல்வி ஊவா மாகாணசபைத் தேர்தலுடன் ஆரம்பமாகவுள்ளது. மிகவும் நியாயமற்ற முறையில் அமைச்சுக்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு சொந்தமான வாகனங்கள் தேர்தல்...
இலங்கையில் காணாமல் போனவர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினாலேயே இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரச சார்பற்ற நிலையில் இந்த முயற்சிகளை மேற்கொள்ள செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் தமது முயற்சிகள் அரசுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான பட்டியலைத் தயாரிக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின்...
தொடக்கம் 1: மியான்மார்: திகதி – 20 மார்ச் 2013முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தைச் சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார். இதை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது மோசமான இன அழித்தொழிப்பு நடந்தேறியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்...
இறுதிக் கட்ட போரின் போது வன்னியில் காணாமல் போன போனவர்கள் தொடர்பில் சர்வதேச  விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா திட்டவட்டமாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதனையும் எம்மால் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.  காணமால் போனவர்கள் தொடர்பான விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் மூவரை சிறிலங்கா ஜனாதிபதி நியமித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படுவதனை வரவேற்கின்றோம். ஆனால், இந்த...
அரசாங்கத்திலிருந்து குரைக்கும் நாய்களைக் கட்டிப்போடுங்கள்!- ஜனாதிபதியிடம் ஞானசார தேரர் கோரிக்கை! அமைச்சர்களோ அல்லது எம்.பி.க்களோ இனிமேல் காவியுடை மீது கைவைக்க முற்படுவார்களாயின், அதுவே அரசாங்கத்தின் அழிவாகும். அரசாங்கத்திலிருந்து குரைக்கும் நாய்களைக் கட்டிப்போடுமாறு ஜனாதிபதியிடம் கோருகிறேன். இவ்வாறு பொது பல சேனா  பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இந்த நாட்டுக்கு தற்போது தேசியத் தலைவர் ஒருவரே தேவைப்படுகிறார். தவிர பொது வேட்பாளர் இல்லை. அதனால், அரசர்களை நியமிக்கும் வேலைத்திட்டமொன்றை பொது...