மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா எனும் நோய் தாக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நைஜீரியா, லைபீரியா, கினியா, சியாரோலோன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. நோயை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடுகள் தவிக்கின்றன. நோய்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளையும் நோய் தொற்றிக்கொள்கிறது. நைஜீரியாவில் எபோலா நோய்க்கு சிகிச்சை அளித்த நர்சு ஒருவரை நோய் தாக்கியது. அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நர்சு பலியானார். லைபீரியா நாட்டைதான்...
அமெரிக்க ராணுவ வீரர்களை காப்பாற்ற ஈராக் பேராளிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்த ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் குர்தீஷ்தான் பகுதியில் 4 கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றினர். அங்கிருந்த 1 லட்சம் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர். குர்தீஷ்தானில் ‘யாஷிடி’ என்ற படிங்குடியினர் உள்ளனர். அவர்களை சிஞ்சர் மலையில் சிறைபிடித்து அடைத்து வைத்துள்ளனர். அங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி சிக்கி தவிக்கின்றனர். சிஞ்சர்...
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கிடையே நடைபெற்று வரும் கடும் சண்டையில் சுமார் 1900 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேல் தரப்பில் 67 பேரும் பலியாகியுள்ள நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய இருதரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. போர் நிறுத்த நேரம் தொடங்கிய உடனே காசாவில் முகாமிட்டுருக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் படைகள் அனைத்தையும் இஸ்ரேல் திரும்பப் பெற்றது. 5-ம் தேதி தொடங்கிய இந்த போர் நிறுத்தம்...
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. பலஸ்தீனம் மீதான தாக்குதல்களைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி - காலி வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. TPN NEWS
08.10.2014 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் வவுனியா பொதுவைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் தங்குவதற்கான தங்குமிட விடுதியொன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் தியாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். சுகாதார பராமரிப்பு நிலையத்தில் 20 பேருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வடமாகாண சுகாதார...
  மகிந்தவை அவமதிக்கும் அசத்தலான நடன இசை நிகழ்வு இந்தியாவால் அரங்கேற்றம் இதற்கு எந்த வித நடவடிக்கைகளும் இல்லை பாவம் மகிந்த சில்க் சிமிதாவின் இடுப்பை தொட்டு ஆடும் மகிந்த ராஜபக்ஷ   TPN NEWS  
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி நேற்று கடுமையாக விமர்சித்தது. வெளிநாட்டு சேவைக்காக வழங்கப்பட்டுள்ள நியமனங்களில் பெரும்பாலானவை அரசியல் நியமனங்களாகும் என சபை ஒத்திவைப்பு வேளை மீதான பிரேரணையை சமர்ப்பித்து, சபையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க குற்றச்சாட்டு முன்வைத்தார். இன்று வெளிவிவகார சேவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிளை சங்கமாக மாறியுள்ளது. இதற்கு என்னிடம் தேவையான அளவு உதாரணங்கள் இருக்கின்றன. 1.சரத் கோன்கஹகே – ஜேர்மனிக்கான தூதுவர் ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...
“இலங்கையின் இறுதிப்போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர அமெரிக்காவால் முடியாது” என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொள்ளுப்பிட் டியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்குப் பின்னர், “இலங்கையில் இடம்பெற்றவை...
தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். காலவரதேய சட்டம் தொடர்பிலான நாடாளுன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன. . இது பாரதூரமான ஓர் பிரச்சினையாகும். காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுவதனை அரசாங்கம் எவ்வாறு நியாயப்படுத்தப் போகின்றது. இந்து மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் புதிதாக பௌத்த மத வழிபாட்டுத்...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில் 12 அம்ச கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது. இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அரசாங்க ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஏற்றுக் கொள்வதும் அது குறித்து பேச்சுவார்த்தை நடாத்த இணங்குவதும் இரு வேறுபட்ட...