வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீ.வி.பிரகாஷ்குமார். குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த ஜீ.வி., தற்போது தயாரிப்பாளர், ஹீரோ என்று வளர்ந்து கொண்டே செல்கிறார். தற்போது இவர் அதர்வா, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இரும்புக்குதிரை படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு தனியார் எப்.எம். ஒன்றில் இன்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதர்வா, ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி(லட்சுமிராய்), ஜீ.வி.பிரகாஷ், இயக்குநர் யுவராஜ்போஸ் உள்ளிட்ட...
ஒரு படத்தை எந்த நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சினிமாக்காரர்களுக்கு தெரியும். அதிலும் குறிப்பாக பண்டிகை கால விடுமுறைகளோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தபடி விடுமுறை வந்தாலோ உடனே அதை மையமாக வைத்து படத்தை ரிலீஸ் செய்து கல்லா கட்டி விடுவார்கள் சினிமாக்காரர்கள். இது நம்மூர் கோலிவுட் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் வரை இதே நிலை தான். அதிலும் ஒருபடம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி, நீண்டநாட்களாக...
பிரியாணி படத்துக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் மாஸ். இதில் சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இதன் முன்னோட்ட படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில்தான் சூர்யா, நயன்தாரா காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் படத்தில் சூர்யாவுடன் ஜெயராம் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது....
மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டில் கட்டப்பட்டுள்ள செயற்கை நீரிணைப்பு வழியாகும். 145 வருடங்களைக் கடந்துள்ள இந்தக் கால்வாயானது கப்பல் போக்குவரத்துமூலம் ஆண்டுதோறும் 5 பில்லியன் டாலர் வருவாயை அந்நாட்டிற்கு ஈட்டித் தருகின்றது.
கடந்த 2011ஆம் ஆண்டு எகிப்தின் அதிபராக இருந்த முகமது மோர்சி பதவி இறக்கப்பட்டபின் அங்கு நடந்த கலவரங்களால் சுற்றுலாவும், வெளிநாட்டு முதலீடுகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருவாய் ஆதாரம் முக்கியத்துவம்...
லெபனான் நாட்டின் எல்லையோரமாக ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஜிஹாதி’கள் என்னும் இஸ்லாமிய போராளிகள், கடந்த சில நாட்களாக லெபனான் ராணுவத்தினர் மீது ஆவேசமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அர்சல் என்ற நகரின் மீது ஜிஹாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் பலியாகினர். 85 வீரர்கள் படுகாயமடைந்தனர். 22 வீரர்கள் மற்றும் 20 போலீசாரை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
ஜிஹாதிகளின் அதிரடி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க தங்களிடன் போதிய...
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் அமைதியிழந்து காணப்படும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.அந்த வகையில், அமெரிக்கா இன்று நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தட்டாகெல் பகுதியில் ஆளில்லா விமானம் இரண்டு ஏவுகணையை ஒரு வீட்டின் மீது வீசியது. இதில் 6 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர்...
பழமைவாத இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படாதது குறித்த கண்டனங்கள் உலகம் முழுவதிலுமிருந்து எழுந்துள்ளது. இப்போது மற்றுமொரு புதிய விதிமுறையாக புலம் பெயர்ந்த பெண்களை அந்நாட்டு ஆண்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று அரசு செயல்படுத்தவிருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளிலேயே மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக விளங்கும் சவுதி அரேபியாவில் 9 மில்லியன் புலம் பெயர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்....
புதிய வைரஸ் நோயான ‘எபோலா’ ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ‘எபோலா’ தொற்று நோய் என்பதால் இந்நோய் தாக்கியவர்களை மற்றவர்கள் நெருங்குவதற்கு அச்சப்படுகிறார்கள்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய ‘எபோலா’ லைபீரியா, சியரா லியோனிலும் பரவியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவில் ஒரு டாக்டருக்கு எபோலா நோய் தாக்கியிருந்தது தெரிய வந்தது. இங்கு ஒரு டாக்டர் உள்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவில்...
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கலேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் பேட்டிங் தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் வீரர்கள் குர்ராம் மன்சூர்- அகமது ஷாஷெத் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மன்சூர் 3, ஷாஷெத் 4 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு அசார் அலி- யூனிஸ்கான் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர்....
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் அரவிந்த் லஷ்மண் ஆப்தே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.
முதல்தர போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட அரவிந்த் லஷ்மண் ஆப்தே, தத்தாஜிராவ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாடியுள்ளார்.
1959ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் நாரி காண்ட்ராக்டர் காயமடைந்ததால் அரவிந்த் ஆப்தே துவக்க...