இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?
மலேசியாவில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் மூவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இலங்கையின் ஊடகங்களுக்கு சிறிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கைக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் மலேசியாசில் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட எட்மன் சிங்கராஜா என்ற சீலன் சசி, இந்திக சஞ்சீவ என்ற மொஹமட்...
இலங்கை அரசாங்கம் பொதுமக்களை பாதுகாப்பது என்ற தனது முக்கிய கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   ஐந்து வயது சிறுவன் கல்கமுவவில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இலங்கை அரசாங்கம் பொதுமக்களை பாதுகாப்பது என்ற தனது முக்கிய கடமையை நிறைவேற்ற தவறிவிட்டது என்பதை இந்த சம்பவம் புலப்படுத்துகிறது. பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய முக்கிய கடப்பாடுடைய பொலிஸ் திணைக்களத்தை...
  "இலங்கை அரசாங்கம் பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்தத் தவறினால், இஸ்லாமிய தீவிரவாதம் உருவாகுவது தவிர்க்க முடியாததாகிவிடும்" - இவ்வாறு எச்சரித்துள்ளார் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம். வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் கடந்த மாதம் இடம்பெற்ற மத வன்முறைகளை தடுத்து நிறுத்தத் தவறியதைத் தொடர்ந்து தன்னைப் பதவி விலகுமாறு தனது ஆதரவாளர்கள் கடும் அழுத்தம் கொடுத்தனர் என...
அரசியலுக்கு வருமாறு கோத்தபாயவிற்கு, விமல் அழைப்பஅரசியலுக்கு வருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார். தாய் நாட்டை நேசிக்கும் கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களின் சேவை தேவைப்படுகின்றது. இவ்வாறானவர்களின் பங்களிப்பின் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். எனவே, பாதுகாப்புச் செயலாளரை எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். ஜனாதிபதியின் சகோதரர் என்ற காரணத்திற்காக நாம் கோத்தபாயவை நேசிக்கவில்லை. அவரது செயற்திறன் மிக்க...
ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் சில முரண்பாடுகள் நிலவி வருவதாகவும், சிலவற்றுக்கு அவசரமாக தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் கட்சியை விட்டு விலகினால், அசாத் சாலிக்கு நேர்ந்த கதியே தமக்கும் நேரிடும் எனவும், தேசிய அரசியல் நீரோட்டத்தை விட்டு விலகியிருக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி ஆதரவாளர்கள்...
…2009-ம் ஆண்டு மே மாதம்வரை பிரபாகரனை ‘தேசிய தலைவர்’ என்று கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியினர், பிரபாகரன் கொல்லப்பட்டபின், அந்த டியூனை மாற்றிக் கொண்டனர். அக் கட்சியின் தூண்களின் ஒருவரான (சுமந்திரன் மன்னிக்கவும்) சரவணபவன் எம்.பி. கொடுத்த பேட்டி ஒன்றில், “எமது தலைவர் இரா.சம்பந்தன்தான் தற்போது ‘தேசிய தலைவர்’ ஆகியுள்ளார்” என்றார். அது அவர்களது உள் கட்சி விவகாரம். யாரையும் தேசிய தலைவர் என்று அப்பாயின்ட் செய்து கொள்ளலாம்....
  ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்கள், படு கொலைகளை உருவாக்கி திட்டமிட்டு, அரங் கேற்றிய சதிக் கும்பலே, உளவு நிறுவனங்கள்தான் என்ற உண்மையை முற்றாக ஒதுக்கிவிட்டு, உளவுத் துறையின் ஒலி குழலாகவே ஒலிக்கிறது இந்த நூல். 1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போராளி களுக்குப் பயிற்சி தந்த காலத்திலிருந்தே ‘ரா’ உளவு நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடங்கி விட்டன. இந்திய உளவு நிறுவனத்தோடு நெருக்கமாக இருந்தவரும், உளவு நிறுவனங்கள் போற்றிப் பாராட்டுகிற...
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை மாற்றலாம் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரம் தான் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் மூன்று மாடிகளைக் கொண்ட நிர்வாகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.ஜுனைட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பசீர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு...
வடக்கு, தெற்கு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு! முடிந்தால் குழப்புங்கள்: ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு சவால் ஊடக கருத்தரங்குகள் நடத்தப்படுவதற்கு எதிராக அரசாங்கத்தின் வன்முறை குழுக்கள் முன்னெடுத்து வரும் கேவலமான மற்றும் கோழைத்தனமான நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்களுக்காக பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படும் என ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. முடிந்தால் அந்த பயிற்சி கருத்தரங்களை குழப்புமாறும் செயற்பாட்டுக்குழு சவால் விடுத்துள்ளது. இலங்கை பத்திரிகை சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற...