சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கூட்டமைப்பின் தலைவருமான சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டுமென அவரது கட்சியின் முன்னாள் உபதலைவரான கலாநிதி மகேஷ் அத்தபத்து வேண்டுகோள் விடுத்துள்ளாளர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்  வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமுடி ஒன்றுக்குக் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெறுமானமற்றவர் என சரத் பொன்சேகா கூறியதன் மூலம் அவர் முழு நாட்டையும் அமைதித்துள்ளார். அத்துடன் இவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பும் கோர வேண்டும்.  சரத்...
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண் வேலைக்குச் சென்ற பிலிப்பைன்ஸ் யுவதியொருவர் எஜமானரின் தாயார் சுடுநீரை வீசியதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பியை துரிதமாக தயாரிக்கத் தவறியமைக்கு தண்டனையாகவே எஜமானரின் தாயார் அவர் மீது சுடுநீரை வீசியதாகக் கூறப்படுகிறது. சுடுநீரால் முதுகும் கால்களும் அவிந்து வேதனையில் துடித்த அவரை 6 மணி நேரம் கழித்தே எஜமானரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் சவூதியிலுள்ள தனது மைத்துனியை...
  இஸ்ரேல் நாட்டுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவை அலற வைத்துக் கொண்டிருக்கிற ஸ்னோடென் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தனிநாடாக பிரகடனம் செய்துள்ளது. அதன் கலிபா (தலைவராக) அல் பாக்தாதி அறிவிக்கப்பட்டுள்ளார்   இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை இது தொடர்பாக ஈரானிய செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.எ.ஏவுக்கு ஸ்னோடென் அளித்த...
ஃபுகுஷிமா அணு மின் நிலையங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் வடகிழக்குக் கடற்கரையில் உள்ளன. மார்ச் 11-ம் தேதி ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் மையம் கொண்டு 8.9 – 9 ரிக்டர் எண்மதிப்பு கொண்ட மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி) ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கறைப் பகுதிகளில் பேரழிவு ஏற்படுத்தியது. ஃபுகுஷிமா அணு...
  நேரடியாக வாகனங்கள் மோதும் காட்ச்சி என்ன நடக்குது என்று மட்டும் பாருங்கள்
  காரை­ந­கரில் இரண்டு சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­பட்ட சம்­பவம் தொடர்பில் இடம்­பெற்ற அடை­யாள அணி­வ­குப்பில் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் நிறுத்­தப்­ப­டாது வேறு நபர்­களே நிறுத்­தப்­பட்­டுள்­ளனர் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் நேற்று சபையில் குற்றம்சாட்­டினார். அத்துடன், இன்று வட­ப­குதி முழு­வதும் இரா­ணுவ மய­மாக்­கப்­பட்டு பெண்­க­ளுக்கு பாது­காப்பு இல்­லாத நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் விசனம் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காரைநகரில் இரு சிறு­மிகள் கடற்­ப­டை­யி­னரால் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டமை...
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. இலங்கை இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது அடிப்படையற்றது என்றும் ரூவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நம்பகமான தகவல்கள் கிடைத்தால் அமெரிக்க...
தேசிய ஒற்றுமையை குலைக்கும் வகையில் ஊடகச் செயலமர்வை நடத்தாதேஎன்று கூறி கொழும்பு இதழியல் கல்லூரிக்கு முன்பாக இன்று சனிக்கிழமை முற்பகல் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்பும் குழு என்று தம்மை அடையாளப் படுத்தியவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'ரைட்ஸ் நவ்' என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ஊடகச் செயலமர்வில் கலந்துகொள்வதற்காக வடபகுதியிலிருந்து ஊடகவியலாளர்கள் சிலர் கொழும்புக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில் அத்தகைய செயலமர்வை நடத்தக்கூடாது என்று...
வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வழங்க, வேந்தர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், புலிப்பார்வை. படத்தை இயக்கும் பிரவின் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: பிரபாகரனின் மகன் பாலசந்திரன், சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் முன் எடுக்கப்பட்ட படத்தை சேனல் 4  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் பற்றிய படம்தான் இது. பாலசந்திரனின் மரணத்தை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து படம் உருவாகியுள்ளது. தமிழர்களின் வீரமும், அறிவும் சரியான...
ஜோதிகா மீண்டும் நடிக்க வருவது உறுதியாகியுள்ளது. இதை சூர்யாவே தெரிவித்துள்ளார். சூர்யாவை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு குட்பை சொன்னார் ஜோதிகா. ஆனால் விளம் பர படங்களில் மட்டும் நடித்தார். அவரை மீண்டும் நடிக்க வைக்க பல டைரக்டர்கள் படாத பாடு பட்டனர். ஆனால் ஜோதிகா நோ சொல்லிவிட்டார். குடும்பத்தை கவனிப்பது, குழந்தைகளை பார்த்துக்கொள்வது என பிசியாக இருந்தார். இப்போது அவரது குழந்தைகள் தியா, தேவ் வளர்ந்துவிட்டனர். இதனால் அவரை...