வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான மைதானங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் சுற்றுப்பயண மற்றும் போட்டி அட்டவணை கமிட்டி இன்று ஆலோசனை நடத்தியது.இக்கூட்டத்தில், டெஸ்ட் போட்டிகளை நடத்த பெங்களூர், அகமதாபாத் மற்றும் ஐதராபாத் ஆகிய மைதானங்களும், ஒருநாள் போட்டிகளுக்கு கொல்கத்தா, விசாகப்பட்டினம், கட்டாக், தர்மசாலா மற்றும் கொச்சி...
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் இந்தியா 28 வருடங்களுக்குப் பிறகு வெற்றி பெற்றது. இதற்கிடையே நாளை 3-வது டெஸ்ட் சவுத்ஆம்ப்டனில் தொடங்குகிறது. இப்போட்டியில் ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு ரோகித் சர்மா சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. ஸ்டூவர்ட் பின்னி இந்த டெஸ்ட் தொடரில்தான் அறிமுகமானார். முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில்...
இலங்கை- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி ஜெயவர்த்தனே சதத்தால் 421 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன் எடுத்திருந்தது. அம்லா 46 ரன்னுடனும், டி வில்லியர்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது....
புதுடெல்லி, ஜூலை 26- இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனும், இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக ஐ.சி.சி.யில் இந்தியா புகார் செய்தது. ஆண்டர்சன் மீது விசாரணை மேற்கொண்ட ஐ.சி.சி. அந்த வழக்கை ஆகஸ்ட் 1-ந்திகதிக்கு தள்ளி வைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜடேஜா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய  ஐ.சி.சி., ஜடேஜாவுக்கு 1-வது விதியை மீறியதாக போட்டியின்...
தெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தனிநாடான தெற்கு சூடான் சுமார் 80 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில்  39 லட்சம் மக்கள் பசியில் வாடி வருவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளதாக கூறியுள்ளனர். இதனால், சர்வதேச நாடுகள் தெற்கு சூடானுக்கு அறிவித்த...
கிர்கிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர். குர்மான்பெக் பாகியேவ். இவரது ஆட்சியின் போது எதிர்கட்சியினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தை அடக்க ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். அதில் 77 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இவர் மீது மனித உரிமை மீறல் குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அவர் கிரிகிஸ்தானில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடி தலை மறைவானார். இவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கில்...
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் தென் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மாகாண தலைநகர் ஜுனேயூ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. அப்போது பொதுமக்கள் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். நிலநடுக்கம் என்பதை உணர்ந்த அவர்கள் அலறியடித்தபடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய விடிய ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டத்தை தொடர்ந்து ஜுனேயூ பகுதியில் தகவல், தொடர்பு...
மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் இரண்டு அணு உலைகளைக் கட்டமைக்க சீனா மற்றும் கனடாவுடன் நேற்று ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. கனடா நாட்டின் எஸ்என்சி- லவலின் நிறுவனமும், சீனாவின் அணுசக்தி பொறியியல் நிறுவனமும் இந்த ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. இவற்றுள் கனடா நிறுவனம் ஏற்கனவே அங்கு இரண்டு அணுசக்தி உலைகளை கடந்த 1996 மற்றும் 2007ல் கட்டியுள்ளது.செர்னவோடா அணுசக்தி உலைகள்(சிஎன்பிஈசி) என்ற இந்தத் திட்டத்தின்மூலம் ருமேனியாவிற்குத்...
கடந்த மாத இறுதியில் மூன்று இஸ்ரேலிய இளஞைர்கள் கடத்தப்பட்டு காசா பகுதியில் சடலமாக மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் செயல்படும் ஹமாஸ் போராளிகளுக்கு இதில் பங்கிருப்பதாகக் கருதிய இஸ்ரேலிய அரசு அவர்கள் மீதான தாக்குதலைத் தொடங்கியது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்தத் தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.இருதரப்பிலிருந்தும் நடைபெற்றுவரும் ஏவுகணைத் தாக்குதல்களில் ஒன்று கடந்த வாரம் டெல் அவிவ் விமான நிலையத்தின் அருகே விழுந்ததைத்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு பொறுப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து ராணுவப் படைகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இஸ்லாமாபாத் நகரின் சட்டம்- ஒழுங்கை நிர்வகித்து நிலைநாட்டும் பொறுப்பினை வரும் அக்டோபர் மாதம் வரை 3 மாத காலத்துக்கு ராணுவப் படைகளே ஏற்கும் எனவும் அந்நாட்டின் உள்துறை மந்திரி நிசார் அலி கான் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கும் சில மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட தேதலில்...