யாழ் மாவட்ட முன்பள்ளிச்சிறார்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் 24.7.2014 அன்று யாழ் இந்து மகளீர் கல்லூரியில் இடம்பெற்றது. மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில், யாழ் மாவட்டத்தின் ஐந்து வலயங்களையும் சேர்ந்த ஏராளமான முன்பள்ளிச்சிறார்கள் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.                                  ...
யூன் 26 சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகும். இந் நாளை பற்றி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில், கடந்த கால யுத்தம் எமது நாட்டு மக்களை பல இன்னல்களுக்கு தள்ளியுள்ளது. சித்திரவதைகளுக்கு உள்ளானோர் இன்று இன மத பேதம் இன்றி மனோவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தமக்குள்ளேயே உளக்குமுறல்களை அடக்கிக்கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழினம் இன்று இலங்கையில் சந்தித்த சித்திரவதைகள் எண்ணிலடங்கா. பூரண அரசியல், பொருளாதார, சுயகௌரவ, சுயபாதுகாப்பு...
சமுக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள இதுவரை தனித் தனியான இணையங்கள் அல்லது மென்பொருள்கள் தான் இருந்து வந்தன. அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக www.YourVideoDownloader.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில்  எந்த விதமான மென்பொருளும் இன்றி,  நீங்கள் விரும்பும் சகலவிதமான Youtube, Facebook, Vimeo, Dailymotion  காணொளிகளை, இலகுவாகவும் இலவசமாகவும் மிகத் துரிதமாகவும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நீங்கள் டவுன்லோட் செய்ய விருப்பும் வீடியோவின் லிங்க்யை காப்பி செய்து...
கிளஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாயத்துக்கான முதலாவது உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலியில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அரசாங்கம், விடுத்த அழைப்பு ஜூன் மாதம் 24 ம் திகதி கிடைத்ததாக இலங்கை அரசாங்க தகவல்கள் தெரிவித்தன. புலிகளின் ஆதரவு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டிருந்த எதிர்ப்பின் மத்தியிலும் பிரித்தானியா...
   இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்தும் விசாரணையை விஞ்சும் வகையில் எமது குழுவின் விசாரணைகள் அமையும். இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையானது யுத்த காலத்தில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதா என்பதனை விசாரிக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல்...
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 25.7.1983 அன்று   அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், “”இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே! உங்களுக்கு ஒன்றும் நடக்காது” என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது. 25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29...
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதா? அல்லது அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதா? என்ற இரு முரண்பாடான கருத்து நிலைப்பாடுகள் தொடர்பிலான விவாதங்கள் இந்த வாரம் கனேடிய நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டுள்ளன. கனடாவின் தற்போதய பழமைவாதக் கட்சி அரசாங்கம் புதிதாக கொண்டுவந்துள்ள பாலியல் தொழில் தொடர்பிலான சட்டமூலம் இன்னமும் பாலியல் தொழிலாளர்களை குற்றவாளிகளாகவே காண்பதாக விவாதத்தின் போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கனடாவில் நடப்பில் இருந்த பாலியல் தொழில் தொடர்பிலான சட்டத்தினை அரசியல் யாப்புக்கு ஒப்புடையது...
இலங்கை நாடாளுமன்றில் போதியளவு உறுப்பினர்கள் பிரசன்னமாகாத காரணத்தினால் நாடாளுமன்ற அமர்வுகள் நாளை வியாழக்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் காரணத்தினால் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அவை நடவடிக்கைகளை நாளை வரையில் ஒத்தி வைத்துள்ளார். ஜூலை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் சமால் ராஜபக்ச தலைமையில் ஆரம்பமானது. எனினும் பின்னர் போதியளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்காத காரணத்தினால், அவை நடவடிக்கைகளை நாளை வரையில்...
விடுதலைப்புலிகளின் சொத்துக்கள், புதையல்கள் மற்றும் தரகு பணம் மூலம் ராஜபக்ஷவினர் பெற்ற பெருந்தொகையான பணம் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு செல்வந்தர்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் பற்றி விசாரணை நடத்தும் சர்வதேச குழுவொன்று கண்டறிந்துள்ளது. இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் ஒன்று விசாரணை நடத்தும் குழுவின் பெயரை தற்போது வெளியிட முடியாது எனக் கூறியுள்ளது. மேற்படி பாகிஸ்தான் செல்வந்தர்களில் ஒருவர் சில காலம் பாகிஸ்தான் அமைச்சராக இருந்த...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நீக்கப்பட்டால், அதற்கு எதிராக போராட அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் தயாராகி வருவதாக சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவித்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தொடர்ந்தும் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை தாழ்த்தியும் புறந்தள்ளியும் வருகிறார். இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூடிய கவனத்தை செலுத்தி...