ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்லாமிய பழங்குடியினருக்குமிடையே நடந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 35 பேர் இறந்தனர். நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஜோப் மாகாணத்தில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹாவ்தி கிளர்ச்சியாளர்களுக்கும், பழமைவாத சன்னி இஸ்லாமிய பழங்குடியினருக்குமிடையே நேற்று முதல் கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் பீரங்கி மற்றும் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உள்ளூர் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இதில் இதுவரை 35 பேர்...
பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் பல் உடையும் வகையில் பெண் ஒருவர் தாக்கியுள்ளார். கல்கிஸ்ஸை கடற்கரையோர பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விருந்துபசாரம் ஒன்றில் பங்கேற்ற பெண் ஒருவரை, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். குறித்த பெண்ணிடம் தகாத முறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் நடந்து கொள்ள முயற்சித்த போது அந்தப் பெண், கான்ஸ்டபிளின் பல் உடையும் வகையில் அடித்துள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப்...
இலங்கை- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கலேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் அம்லா பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக பீட்டர்சன்- எல்கார் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக ளையாடினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 11.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அந்த அணி 70 ரன் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பீட்டர்சன் 46 பந்தில் 34 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து...
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது. அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும்...
  கன்வென்ஷனும் சுவிசேஷ ஆராதனைகள்- இலங்கை பெந்தெகொஸ்தே சபை வவுனியாவில் 17முதல்20 வரை நடைபெறுகிறது தினமும் மாலை 5மணிக்கு பிசாசின் பிடி; பாவம் .மதுபானம் பில்லிசூனியம். கொலை .இன்னும் தீய பழக்கவழக்கங்களிலிருந்து இயேசு விடுவிக்கிறார் சமாதானம் சந்தோசம் பாவமன்னிப்பு தருகிறார் வாருங்கள் கேளுங்கள் அனுபவியுங்கள் TPN NEWS
அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்க தான் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் அரசியல் காரணங்களுக்காக நாட்டின் அபிவிருத்தியில் மாற்றங்களை செய்ய இடமளிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னிச்சையாக வேலை செய்யாது, மக்களுக்கு கூடிய பிரயோசனம் கிடைக்கும் வகையில் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் இணைந்து உரிய திட்டத்தின் ஊடாக தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நேற்று...
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிவில் அமைப்புக்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு;ள்ளமை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தக் கூடாது, ஊடக அறிக்கைகளை வெளியிடக் கூடாது, ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை பாதுகாப்பு அமைச்சு விதித்திருந்தது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து உன்னிப்பாக அவதானம்...
இலங்கையில் நல்லிணக்கத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முதன்மையானது என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜென் போல் மொன்சுவா (துநயn-Pயரட ஆழnஉhயர) தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நண்பர்கள் என்ற ரீதியில் நல்லிணக்கம் குறித்து பிரான்ஸூம், ஐரோப்பிய ஒன்றியமும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மீளவும் யுத்தம் இடம்பெறாமல் இருப்பதனை தடுக்க வேண்டுமாயின் நல்லிணக்கம் தொடர்பில் கூடுதல் கவனம்...
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும் இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத காரியவசமும் சந்திப்பின் போது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற குறுகிய கால நிகழ்வின் போது இந்த கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அமெரிக்காவுக்கான தூதுவராக நியமனம் பெற்றுள்ள பிரசாத் காரியவசம் ஒபாமாவிடம் தமது நியமனக் கடிதத்தை கையளித்தார். இந்த நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்தநிலையில் வெள்ளைமாளிகை விருந்தினர் புத்தகத்தில் தமது கருத்தை பதிவுசெய்த...
  அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது! - ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கவில்லை: விக்னேஸ்வரன் - தெளிவாக கூறவில்லை சிவஞானம் ஜனாதிபதியின் அழைப்பை வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு வருமாறு ஜனாதிபதி அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதில் விக்னேஸ்வரனும் உள்ளடங்குகிறார். எனினும் தாம் உள்ளுர் பணிகளை ஏற்கனவே குறித்த தினத்தில் ஒழுங்கு செய்துள்ளமையால் அதனை தவிர்க்க முடியாது என்ற காரணத்தினால் அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்க முடியாது...