சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்...
சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கி, சர்வதேசரீதியாக போர்க்குற்றத்தை மையமாக வைத்து நகரும் வலையிலிருந்து தப்பும் முகமாக, சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை மாட்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலரை படுகொலை செய்ததென்ற குற்றச்சாட்டில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை நோக்கி பொறிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 53ஆவது படையணியின் 8 விசேட படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் மேஜர் ஜெனரல் கமால்...
சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரொபேட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்பான விடுதலை, இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் சட்டச் சிக்கலை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. அதேவேளை, இவர்களின் விடுதலை என்பது சட்ட பரிமாணத்துடன் (Dimension), அரசியல் – இராஜதந்திர பரிமாணங்களையும் முதன்மையாகக் கொண்டது. அதனடிப்படையில், இவர்கள் ஏழு பேரினதும் விடுதலை தொடர்பான பல்வேறு பரிமாணங்களையும், இவர்களின் விடுதலையின் அடித்தளத்தையும் மற்றும் அது எதிர்காலத்தில்...
யூலை மாதம் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பின் முன்னணித் தலைவர்கள் உட்பட உட்பட 53 வீர மறவர்களின் 31வது ஆண்டு நினைவு நாள், இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருந்து வருகை தந்த புலம் பெயர் உறவுகளால் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் கறுப்பு யூலை நினைவு தினத்தையொட்டி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் தங்கத்துரை, குட்டிமணி,...
தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் இன்றைய தினம் தம்மை பின்தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் நீதிமன்றிலிருந்து திரும்பிய போது இனந்தெரியாத மோட்டார் சைக்கிள்தாரிகள் தம்மை பின்தொடர்ந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடக சந்திப்புக்களை நடாத்துதல், ஊடக அறிக்கைகளை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக கருத்து வெளியிட்டதன்...
1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இணைப்பாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. 1. இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் உடன்பாட்டின் இரண்டாவது பத்தி மற்றும் அதன் துணை பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கவனிக்க, இந்தியத் தேர்தல் கமிஷனின் பிரதிநிதி ஒருவரை மேதகு இலங்கை அதிபர் அழைப்பார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். 2. அதேபோன்று இருநாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தின் பத்தி 2.8-இல் குறிப்பிட்டுள்ள...
இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம். பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த...
தலைவர் பிரபாகரனைப் பிடித்துவிடுவார்கள் என்பதனால் அல்ல; ‘பிடித்துவிடுவோம் விடுவோம்’ என்று முழக்கமிடும் பேரினவாதிகளையும், அவர்கள் வாய்மொழியும் செய்திகளின் உண்மையைச் சற்றும் உய்த்தறியாமல் பரப்பும் ஊடகவியலாளர்களையும் பார்த்துத்தான் வேதனையாக இருக்கிறது. அவரைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்பதா அல்லது இலங்கையே வைத்துக்கொள்வதா என்பதும் சர்ச்சைக்குரிய ஒன்றாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.   குரங்கு அப்பம் பிரிக்கிற கதை காரணமில்லாமலே ஞாபகத்திற்கு வருகிறது. சடுதியான மறதியில் வீழ்ந்து மக்கள்தான் வாக்களித்துத் தொலைக்கிறார்கள் என்றால், அரசியல்வா ிகள் அவர்களுக்குமேல் வரலாற்று...
**கறுப்பு ஜுலை 83 – அரிதான வீடியோ காட்சிகள்** கறுப்பு ஜுலை 83 – அரிதான வீடியோ காட்சிகள் TPN NEWS
வடமாகாண பிரதம செயலர் வழக்கு! முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம் வடமாகாண பிரதம செயலர் மற்றும் அவரது பணியாளர்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய சுற்றறிக்கையை, உயர்நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த சுற்றறிக்கை தமது அடிப்படை உரிமையை மீறுவதாக, வடமாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை மாகாண  பிரதம செயலரின்...