வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.இந்த நிலையில் புதிய ஆளுநராக யார் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னமும் அறிவிக்கவில்லை. 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின் ஆளுநர் ஒருவரின் பதவிக்காலம் அவரது நியமன நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் என்று இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி 2009ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி ஜனாதிபதி முன்பாக பதவியேற்ற வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி தனது...
அரசாங்கம் தனது பயன்பாட்டுக்காக உருவாக்கிய காவி போர்த்திய நபர் அரசாங்கத்தை முந்தி சென்றுள்ளதாகவும் பண்டாரநாயக்கவுக்கு நேர்ந்த கதியே ராஜபக்ஷவுக்கும் நேரும் எனவும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். காவி அணிந்த ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க உயிரிழந்தார் என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கும், பொலிஸ் மா அதிபருக்கும்...
தாம் இலங்கை வந்திருப்பது, நாட்டின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மாத்திரமே என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். ஒரு வார கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நவநீதம் பிள்ளை இன்றைய தினம் வடக்கு பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார்.அவர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண ஆளுனர் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.வடக்கு...
  செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள் என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தார்கள். 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம் ஊர்காவல்படையினராலும்; மேற்கொள்ளப்பட்டிருந்த இந்தப் படுகொலையை மீட்டுப் பார்க்கின்றது இந்த வார...
இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி சிறில் ரம்போசா தனது விஜயம் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஜேக்கப் யூமாவிடம் தெளிவுபடுத்தவுள்ளார். இது இவ்வாறிருக்க இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது ஜேக்கப் யூமாவின் செய்தியொன்றை சிறில் ரம்போசா கையளித்துள்ளார். எனினும் இந்த செய்தி குறித்த மேலதிக விபரங்களை இரு தரப்பும் இதுவரை வெளியிடவில்லை. கடந்த வருடம் ஜனாதிபதி ஜேக்கப் யூமாவே சிறில் ரம்போசாவை இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுகளுக்கு உதவுதற்கான...
  அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், சிங்கள பௌத்த மக்களை சர்வதேச ரீதியில் அவமானத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதான நபர் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனை கூறியுள்ளார். அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான மோதல்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச...
கத்தோலிக்க திருச்சபை மத பிரச்சாரங்களை மேற்கொள்ள நாடுகளை ஆக்கிரமிக்கவோ, மக்களை கொலை செய்யவோ இல்லை என கத்தோலிக்க தர்மத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. பரிசுத்த பாப்பரசர் இலங்கை பௌத்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தனிப்பட்ட பிரபலத்திற்காக பொது மக்களின் மனதை...
யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்றத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்து வழிகளிலும் உதவத் தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொட் மொரிசன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை கடற்படைக்கு இரண்டு கண்காணிப்புக் கப்பல்களைக் கையளிக்கும் வைபவத்தையடுத்து இடம்பெற்ற சந்திப்பின் போதே அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் மொரிசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது புகலிடம் கோரி சட்ட விரோதமாக படகுகளில் பயணிப்போரைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு...
என்னை கொலை செய்வதன் மூலம்தான் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால் அதனை தாராளமாக செய்யலாம் என்று ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் சூளுரைத்தார். வெளிநாடுகளில் இருக்கின்ற கொழுத்த உடல்களைக் கொண்டுள்ள சில முஸ்லிம்கள் எஸ்.எம்.எஸ். ஊடாகவும் தொலைபேசி அழைப்புக்கள் ஊடாகவும் என்னை கொலை செய்வதாக அச்சுறுத்துகின்றனர். இத்தகைய அலுகோசுகளும் எமது சமுதாயத்தில்தான் இருக்கின்றனர். நான் ஒரு முஸ்லிம் என்பதை உறுதிப்படுத்துகிறேன். ஒருபோதும் முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கமாட்டேன். அவ்வாறாக என்னை...
ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் நிலவரம் குறித்து நேட்டோ படைகளின் பொதுசெயலாளருடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேட்டோ படைகளின் பொது செயலாளர் ஆண்டர்ஸ் போக் சந்தித்து பேசினார். ஒபாமா மற்றும் ஆண்டர்ஸ் சந்திப்பின் போது, உக்ரைன் விவாகரம் மூலமாக ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு ரஷ்யா சவாலாக விளங்குவது குறித்தும், ஆப்கானிஸ்தானில் தேர்தல் முறைகேடுகள் காரணமாக...