ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்தும்விதமாக அங்குள்ள சன்னி போராளிகள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாகப் போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்திற்கு தெற்கே உள்ள விவசாயப் பகுதி ஒன்றில் கண்களும், கைகள் பின்னாலும் கட்டப்பட்டுக் கிடந்த 50 சடலங்களைக் கண்டெடுத்துள்ளதாக ஈராக்கிய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. பாக்தாத்திலிருந்து 95 கி.மீ தொலைவில் உள்ள ஷியா பெரும்பான்மையினர் வசிக்கும் ஹில்லா...
இங்கிலாந்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. அந்நாட்டில் அரசியல் ரீதியாகப் பிரபலமாகியுள்ள முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல்வாதிகள் 10 பேர் உட்பட மொத்தம் 20 பிரபலங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர். உயர் பதவியில் இருப்போர், அரசியல்வாதிகள், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சில நீதிபதிகள் மீது நீண்டகாலமாக இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றது. விரைவில் இவர்கள் விசாரணையை எதிர்நோக்கக்கூடும் என்று குழந்தைப் பருவத்தில் பாதிக்கப்பட்டோரின் தேசிய...
  இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசா பகுதியை ஆட்சி செய்யும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் இளைஞர்கள் 3 பேரை கடத்தி சென்று தீவிரவாதிகள் கொன்றனர். அதற்கு பழிவாங்கும் செயலாக பாலஸ்தீனிய இளைஞரை கடத்திய 3 யூதர்கள் அவர்களை உயிருடன் எரித்து கொன்றனர். இதனால் இஸ்ரேலுக்கும், காசா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. காசா பகுதியில் உள்ள நகரங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு...
உலக நாடுகள் அனைத்திலும் போலியோ நோயை ஒழிக்க உலக சுகாதார கழகமான ‘யூனிசெப்’ தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய மூன்று நாடுகளிலும் இவர்களின் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த முடியவில்லை. பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம் திட்டத்தினை இஸ்லாமியப் போராளிகள் எதிர்த்து வருகின்றனர். இத்திட்டத்தில் பணியாற்ற வரும் சுகாதார ஊழியர்களைக் கடத்திச் செல்வதும், தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க வரும் செவிலியர்களைத் தாக்கி விரட்டுவதுமாக...
  சிரியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் படைகள் ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொது மக்களை கொன்று குவித்தன. இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபையும் உலகின் பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, ஐ.நா. சபையின் ஏற்பாட்டின் பேரில் சிரியாவிடம் இருந்த பயங்கர ஆபத்தை விளைவிக்கக் கூடிய ரசாயன ஆயுதங்களை கைப்பற்றி அழிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ‘சரின்’ எனப்படும்...
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 17 பேரைக் காணவில்லை. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஷாவா கிராமத்தில் இன்று அதிகாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது. சகதி மற்றும் பாறைத்துண்டுகள் ஒட்டுமொத்தமாக சரிந்து விழுந்ததால் 17 பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். நுஜியாங் ஆற்றங்கரையில் நடந்த இந்த சம்பவம் நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சுமார் 140 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று...
ஓடும் ரெயிலில் 13 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு, வெளியே தூக்கி வீசப்பட்டு பலியான சம்பவம் தாய்லாந்து நாட்டில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஒன்றான சுரட் தனி-யில் நோய்வாய்பட்டு கிடக்கும் பாட்டியை பார்த்து நலம் விசாரித்து விட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக தலைநகர் பாங்காக் செல்லும் ரெயிலில் தனது சகோதரிகளுடன் அந்த சிறுமி திரும்பிக் கொண்டிருந்தார். நீண்ட தூரமுள்ள அந்த பயணத்திற்கிடையில், கடந்த சனிக்கிழமை இரவு ரெயிலின் ‘பெர்த்’களில்...
அமெரிக்காவில் மலிவு விலை விமான சேவையை ‘பிரண்ட்டியர் ஏர்லைன்ஸ்’ என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த திங்கட்கிழமை 160 பயணிகளுடன் வாஷிங்டன் நகரில் இருந்து புறப்பட்டு டென்வர் நகரை நோக்கி பறந்துக் கொண்டிருந்தது.டென்வர் பகுதியில் மோசமான வானிலை நிலவியதால், வழியில் உள்ள செயென்னே விமான நிலையத்தில் தரையிறங்கி, நிலைமை சீரடையும் வரை காத்திருக்கும்படி விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே, போய் சேர வேண்டிய நேரத்தை...
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் போராளிகள் கை ஓங்கியுள்ளது. வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கில் உள்ள மொசூல், திக்ரித், கிர்குக், பலூஜா, பாய்ஜா உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. சிரியா மற்றும் ஈராக்கில் பிடித்த பகுதிகளை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய நாடு’ என்ற புதிய நாட்டை போராளிகள் உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில் இஸ்லாமிய நாடு பகுதியில் உள்ள மொசூல் நகரில்...
சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்தியர்களில் ஒருவர் சஞ்சய் ராதாகிருஷ்ணன்(26). மலை ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் உலகில் உள்ள கடும் ஆபத்தான மலை சிகரங்களின் மீது எல்லாம் ஏறி பயிற்சி பெற்று வருகிறார். இதன் ஒரு கட்டமாக, கம்போடியா நாட்டில் உள்ள கம்ப்போங் ஸ்பியு பகுதியில் அமைந்துள்ள ஃப்னோம் அவுரல் மலையின் மீதுள்ள மிக உயர்ந்த சிகரத்தில் கடந்த வாரம் ஏறினார். சிகரத்தில் இருந்து கீழே இறங்கி வரும் போது,...