பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 400 தீவிரவாதிகள் பலி பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் தலிபான், அல்–கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகள் முகாம்களை அமைத்து பயிற்சி எடுத்து வருகின்றனர். அடிக்கடி தாக்குதல்களை நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். கடந்த மாதம் கராச்சி விமான நிலையத்தில் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் தீவிரவாதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 29 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து வடக்கு வசிரிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள்...
சோமாலியா அதிபர் மாளிகை சுற்றுச்சுவர் மீது இஸ்லாமிய போராளிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரால் மோதி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுகள் நிரப்பிய காரில் வந்த போராளிகள் சுற்றுச்சுவரில் காரை கொண்டு மோதியதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த படையினர் காரில் வந்த ஷபாப் இயக்கப் போராளிகள், ஐந்து பேரில் மூவரை சுட்டுக்கொன்று அதிபருக்கு ஆபத்து நேராமல் தடுத்துவிட்டனர். மீதமுள்ள இருவர் சுற்றுச்சுவரில் கார் மோதிய போது நடந்த...
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த சீனிவாசன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சீனிவாசனின் தேர்வு குறித்து என்னிடம் கேட்டால் இது மிகவும் சரியான தேர்வு என்றுதான் சொல்வேன். ஐ.பி.எல். ஊழல் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது சீனிவாசன் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதாவது சுப்ரீம் கோர்ட் அவர் போட்டியிட மறுப்பு தெரிவிக்காத நிலையில் அவர் ஏன்...
பிரேசிலில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முடிந்த முதல் அரை இறுதிப்போட்டியில் பிரேசில் அணியை 7-1 என்ற கணக்கில் துவம்சம் செய்தது. இத்தோல்வி குறித்து பிரேசில் அணியின் பயிற்சியாளர் கூறியதாவது:- ஜெர்மனியிடம் பிரேசில் தோற்றது என் வாழ்நாளில் மிகவும் மோசமான நாள் என்று நினைக்கிறேன். உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் இது மிகவும் பேரழிவானதாகும். பிரேசில் அணியின் பயிற்சியாளராக நான் பொறுப்பேற்றதும் இது கடினமாக வேலை என்பது எனக்குத் தெரியும்....
நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பட்லர், நியூசிலாந்து அணிக்காக 8 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 19 இருவது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். ஓய்வு பெறுவதற்கு இது சரியான நேரம் என்ற 32 வயதே ஆன பட்லர் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவு கவலைதான் என்றாலும், உணர்ச்சிபூர்வமான நேரம். அடுத்து...
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 வருடங்களுக்கு பிறகு உமர் அக்மல் இடம் பெற்றுள்ளார். மொகமது ஹபீஸ் நீக்கப்பட்டுள்ளார். 2013-ம் ஆண்டு ஹபீஸ் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய 5 டெஸ்ட் போட்டியில் 102 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட்...
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்ளும். மிக முக்கியமான இந்த அரை இறுதி போட்டியில் நெதர்லாந்து அணியின் கேப்டனும், முன்னணி ஸ்டிரைக்கருமான ராபின் வான் பெர்சி விளையாடுவது சந்தேகம் என செய்தி வந்துள்ளது. வான் பெர்சிக்கு வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சினை உள்ளது. அதனால்...
பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக இருந்தார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் (19 ஆட்டம்) அடித்து உள்ளார். அவரது சாதனையை ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளூஸ் முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார். பிரேசிலுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 23–வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பையில்...
  கடந்த தேர்தலின் போது தமிழர்களுக்கு எதிராக   இனவாத தீயை தூண்டி விட்டு வளர்த்து  யுத்தத்திலும், தேர்தலிலும் வெற்றி பெற்ற இந்த அரசாங்கம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மதவாத தீயை தூண்டி விட்டு வெற்றி பெற முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு பொதுபல சேனை பொதுசெயலாளர் ஞானசார தேரர் பயன்படுத்தபடுகிறார். இந்நோக்கில் இஸ்லாமிய மதத்தவர்களுக்கு எதிராக கலவரம் செய்தார்கள். நரேந்திர மோடியை உடனடியாக ஆத்திரபடுத்த விரும்பாததால், உடனடியாக இந்து மதத்தவர்களை எதிர்க்கும்...
வங்கி வட்டி வீதங்களில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். வட்டி வீதத்ததை குறைக்கும் படி பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல் பலர் அதிகரிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் வெங்காயம் அறுவடை செய்யப்படும் வேளையில் பம்பாய் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டமையால் யாழில் வெங்காயத்தின் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது. யாழ்...