சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆணையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்;ட்(Sri Lanka Sinha Regiment )இனது ஆறாவது பட்டாலியனை (6th...
வெள்ளை வான், கறுப்பு வான் கடத்தல்கள் தமிழர் வாழும் பிரதேசங்களில் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன. யுத்தம் முடிவுக்கு வந்து, இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும், தமிழ் இளைஞர்கள், யுவதிகள் இதுபோன்ற வான்களில் வருபவர்களால் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் இடம்பெற்றபடிதான் இருக்கின்றன. அண்மையில் மட்டக்களப்பின் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு கறுப்பு வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் தப்பி வந்த ஒரு மாணவி...
;ஒப்பரேஷன் ட்ரஸ்ட்’ என்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உலக இராணுவ விவகாரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு போதாது என்றுதான் கூறவேண்டும். ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிக முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான ஒரு நடவடிக்கைதான் இந்த |Operation Trust’ என்ற இராணுவ நடவடிக்கை. ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராகப் புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக...
தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர் மத்தியஸ்தம் வழங்கினால் நாம் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பா.. உ. தெரிவித்தார் இன்றைய சந்திப்பு தொர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்கள் தமது நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வந்தனர் என்பது குறித்து எமக்கு விளக்கினர். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கு தாம் முழு...
கடந்த மாதம் பிரித்தானியாவிற்கு வருகை தந்திருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவிடம் எச்;சரிக்கையுடன் கூடிய ஒரு செய்தி தமிழர் தரப்பினால் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 25.05.2014 அன்று லன்டனில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவுக்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற ஒரு முக்கிய சந்திப்பின் பொழுது தமிழர் தரப்பினால் இந்தச் செய்தி முஸ்லிம் காங்கிரசிற்கு வழங்கப்பட்டது. தமக்கு இரகசியமாகக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தாம் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக தமிழர்...
21ம் நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பு. உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் ஒழு முக்கியமான இன அழிப்பு பற்றிப் பார்க்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.எச்சரிக்கை: சிறுவர்கள் மன வலிமை குன்றியவர்கள் இந்தக் காணெளியைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
      இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்ட கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை விசாரிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்  மைலாப்பூரை சேர்ந்த ஜெபமணி மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை புலித் தலைவர் பிரபாகரன், அவரது...
சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் மத்தியில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன், பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். தாயக நினைவுகளை ஒத்ததாய் அமைந்திருந்த சுவிஸ் சூரிச் மாநில சிவன் ஆலயத்தில் உட்பற வெளிப்புற அமைப்பு பக்தர்களின் மனங்களில் பாரிய இடம் பிடித்தது குறிப்பிடத் தக்கதுஅத்துடன் சாமி வீதிவலம் வந்ததுடன் தீர்த்ச் சடங்கு வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் பல்லாயிரம்...
யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் ராமபோசா: விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து பேச்சு தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ராமபோசா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு உலங்கு வானூர்திகளில் தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ராமபோசா தலைமையிலான குழுவினர் வருகை தந்தனர். இவர்களை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ராமபோசா வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்...
மீண்டும் ஜோஷியின் இயக்கத்தில் அமலா பால், ஹீரோ மோகன்லா அமலா பாலுக்கு திருமணம் நிச்சயமானதும் மலையாளத்தில் ஒரு படம் கமிட்டானது. பெயர் மிலி. சென்னையில் ஒருநாள் படத்தின் ஒரிஜினலான மலையாள ட்ராஃபிக்கை இயக்கிய ராஜேஷ் பிள்ளை இயக்கம். இது என்னுடைய கனவு கதாபாத்திரம் என்று மிலி குறித்து அப்போதே உணர்ச்சிவசப்பட்டிருந்தார் அமலா பால். இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு. 2012-ல் மோகன்லால் ஜோடியாக ஜோஷி இயக்கத்தில் ரன் பேபி ரன் படத்தில்...