300 ற்கும் அதிகமான ஆவணங்களுடன் கம்பளை மரியவத்த பிரதேசத்தில் வைத்து சாரதியொருவரை இன்று செவ்வாய்கிழமை (08) கைது செய்ததாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது குறித்த சாரதி தன்வசம் வைத்திருந்த பிறப்பு சான்றிதழ்கள், மரண சான்றிதழ்கள், வாகன புகை பரிசோதனை சான்றிதழ்கள், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளடங்களாக 300 ற்கும் அதிகமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆசனத்தின் கீழ் பகுதியில் 100 ற்கும் அதிகமான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததுடன்...
திருகோணமலை மாவட்டத்தில் சில திணைக்களங்களில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு தொழுகைகளுக்கும் மத வழிபாடுகளுக்கும் இடமளிக்க உயர் அதிகாரிகள் மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் -மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கர்களுக்கும் – 2014 ரமழான் பண்டிகை காலத்தில் விசேட விடுமுறை எனும் தலைப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டும் ஏன் இடையூறு விளைவிக்கின்றனர் என...
நேவியே எனது கணவரை இன்னமும் வைத்திருக்கின்றது;மனைவி ஒருவர் உருக்கமாக சாட்சியம் எனது கணவன் உயிரோடு தான் இருக்கின்றார். அவரை நேவி தான் வைச்சிருக்கிறது. யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை. எனது கணவர் என்பது எனது உரிமை. எனது உரிமையினை யாராலும் கேட்க முடியாது என இன்று பெண்ணொருவர் சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், எனது கணவர் 18.03.2009 அன்று வலைஞர்மடம் கடலில் மீன்பிடிக்க சென்றபோது காலை 5.30 மணிக்கு கடற்படையினரால்...
யாழ்ப்பாணத்திற்கு சென்ற  தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர். விஷேட உலங்கு வானூர்தியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு இன்றைய தினம் காலை தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் வருகை தந்தபோது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருகைதந்த...
தன்னார்வு நிறுவனங்களுக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளுக்கு அப்பால் சென்று செயற்படக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது செயலாளரின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், குறித்த எச்சரிக்கை தொடர்பில் கவனமாக ஆராய்வதாக குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்துதல் உட்பட்ட செயல்கள் மூலம் தன்னார்வு...
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்கள் அமைக்கும் விவகாரத்தில் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்ற கராத்தே வீரர் ஹூசைனியின் புகாரின் பேரில் சசிகலாவின் கணவர் நடராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் விளார் கிராமத்தில் ஈழத் தமிழர் துயரை விவரிக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றத்தில் சிற்பங்களை அமைக்க ஹூசைனியிடன் நடராஜன் முன்பணம் கொடுத்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் ஹுசைனி சிற்பங்களை முடித்துதராமல் ஏமாற்றுகிறார் என்று முள்ளிவாய்க்கால் முற்றம்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான குழுவை ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமை பேரவை அமைத்து விட்டது. எனவே இந்தக் குழு எந்த விடயங்களை கையாளும் என்பது பற்றிய ஒரு திறந்த ஆய்வை லங்காசிறி வானொலி நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா அவர்களுடன் கருத்துப் பகிர்வில் ஈடுபட்டிருந்தது. இதன் போது இதுவரை உலகின் பார்வைக்கு தெரிய வராத, 2003ம் ஆண்டே விடுதலைப்புலிகள் அழிக்கப்பட போகிறார்கள் என்பது மேற்குலகிற்குத் தெரியும் என்ற...
ஒல்லி தேக ரகசியம் காஐல் சொல்கிறார் ஸ்லிம் தேக ரகசியத்துக்கு காரணம் இருக்கிறது என்றார் காஜல் அகர்வால். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிப் படங்களில் நடித்துவருகிறேன். இதனால் கவர்ந்திழுக்கும் உடற்கட்டை ஸ்லிம்மாக பராமரிக்க வேண்டி இருக்கிறது. எப்போதுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதால் சைவ உணவையே சாப்பிடுகிறேன். தொடர்ச்சியாக யோகா பயிற்சியும் செய்கிறேன். அவுட்டோர் ஷூட்டிங் செல்ல வேண்டி இருந்தால் அங்குபோய் இருப்பதை சாப்பிட்டுவிட்டு பின்னர்...
ஐந்தாம் தலைமுறை படத்தில்அதிரடி ஆட்டம் போட்ட நந்திதா. தயக்கத்தால் தவறவிட்ட வாய்ப்பு பின்னர் தேடி வந்தது என்றார் இயக்குனர்.பரத், நந்திதா நடிக்கும் படம் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. எல்.ஜி.ரவிசந்தர் டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது:உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு இயக்குனர் கே.பாலசந்தர் அலுவலகத்துக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அங்கு சென்றதும் நமக்கெல்லாம் இவரிடம் வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகம் எழும். அந்த தயக்கம் என்னை அவர் அலுவலக கதவை தட்டாமலே திரும்பச் செய்து...
விழா மேடையில் அஜித்தை உரசிப்பார்த்த விஜய்! அஜித்-விஜய் இவர்களின் போட்டி இதுநாள் சினிமாவில் மட்டும் தான் இருந்து வந்தது. நிஜவாழ்க்கையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும், அப்படியிருக்க சமீபத்தில் விஜய் கூறியது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழ் சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழா ஒன்றில் விஜய் பேவரட் ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் ‘ கிரீடம்தான் வெயிட்டாக இருக்க வேண்டுமே தவிர, அதை சுமக்கும் ‘தல’ வெயிட்டாக...