அளுத்கம வன்முறைகளின்போது ஏற்பட்ட சேதங்களை புனரமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதுமானவையல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி இதனை குறிப்பிட்டுள்ளார். அளுத்கம புனர் அமைப்புக்காக 200 மில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந்தநிலையில் இது, கட்டிட சேதங்களை மறைக்கக்கூட போதாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதியாக முஸ்லிம்கள் தம்மை தாமே தாக்கிக் கொண்டதாகவும் தமது வீடுகளுக்கு தாமே தீயிட்டுக் கொண்டதாகவும் அரசாங்கம் கூறுவதாக...
கிளிநொச்சி- பரவிப்பாஞ்சான் மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்டப் போராட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நடைபெறவுள்ளது. யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் இன்றுவரை மீள் குடியேற்றப்படவில்லை. இவர்கள் பல ஆண்டுகளாக நண்பர்கள்,உறவினர்கள், வீடுகளில் அகதிகளாக தங்கிவாழ்கின்றனர். இவர்களுடைய வீடுகள் மற்றும், பொது நிலையங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 28 ஆம் திகதி...
இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த  நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். பான் கீ மூனின் இந்தக்கோரிக்கையை அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று வெளியிட்டுள்ளார். இலங்கையின் தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பில் செயலாளர் கரிசனை கொண்டுள்ளதாகவும் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையின்படி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர்களாக கருதப்பட்ட கோபி,  அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மூன்று பேரும் ரைபிள் ரக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் மரணம் தொடர்பில் கெப்பிற்றிகொல்லாவ நீதவான் எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. புலி உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பதவிய சுற்றுலா...
வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் மூன்று கிளைமோர் குண்டுகள் இன்று வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் இருந்து வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் குளத்தின் உட்பகுதியில் உள்ள பாசிப்புதர்களுக்குள் கிளைமோர் குண்டுகள் இருப்பதைக் கண்டு வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார்...
ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் தாயகத் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இணைந்து தமிழீழத்தில் சிங்கள அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை ஒரே குரலாக எடுத்துரைக்க முற்பட்டவேளையில், கனடாவில் வசித்துவரும் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையிலான ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் இனப்படுகொலை எனும் பதத்தினைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஏனையோருக்கு பாரியளவில் அழுத்தம் கொடுத்திருந்தனர். இதன்போது ஐ.நா.வில் உரையாற்ற வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
 முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிவதாக இலங்கையின் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை உறுதி...
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இரகசியமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மீனபிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கும் ஞானசார தேரருக்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தையை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஏற்பாடு செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் ஞானசார தேரர் பேச்சுவார்த்தை...
  கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட...
முகமாலையில் நேற்றும் இன்றும் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் விடுதலைப் புலிகள் இயக்க சோதியா மற்றும் மாலதி படையணியின் பெண் புலிகளது என இனம் காணப்பட்டுள்ளது. முகமாலையின் முன்னரங்கப் பகுதியில் நேற்றும் இன்றும் சீருடைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. அதன்படி இன்று மீட்கப்பட்ட எச்சங்களில் பெண் புலிகளது இரண்டு, இலக்க தகடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை சோதியா படையணியைச் சேர்ந்த 2784 மற்றும் மாலதி படையணியைச் சேர்ந்த 1190 தகட்டு இலக்கங்கள் ஆகும். இதன் அடிப்படையில் இவை சோதியா மற்றும்...