இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி "இல்லை" என்போம் எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று இடம்பெறுகின்றது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. இதில் பல்வேறுபட்ட மக்களும் கையெழுத்து இட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செலவுக்காக இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 34 கோடியே 64 லட்சத்து 64 ஆயிரத்து 210 ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதியின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட 856 கோடியே 91 லட்சத்து 70 ஆயிரம் ரூபா நிதிக்கு மேலதிகமாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஜனாதிபதியின் இந்த வருடத்திற்கான மொத்த செலவு 891 கோடியே 56 லட்சத்து...
மன்னார் மாவட்டத்தின் தச்சனா மருதமடு பகுதியில் நேற்று மாலை வெங்காய வெடி வெடித்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய தோமஸ் ஸ்ரீபன் என்பவராவார்.
இவர் விலங்கு வேட்டைக்காக வீட்டில் வெங்காய வெடி தயாரித்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக வெடியொன்று வெடித்ததனால் இவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்
படுகாயமடைந்த இவரை முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடல் உயிரி தாக்கி ஒருவர்...
1987ம் ஆண்டு உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான லெப். கேணல் திலீபனின் சடலம் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் மற்றும் இராணுவம் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான .ராசையா...
பெண் பொலிசாரை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு அழைத்த பொலிஸ் உயர் அதிகாரி மீது சரமாரியாகதாக்கும் துணிச்சல் மிக்க உத்தியோகஸ்தர் ஒரு நாள் படுக்க 1000 ருபா தருகிறேன்
கேவலம் இந்திய பொலிஸ்
நீண்ட நாட்களாக பல லட்சக் கணக்கான ரசிகர்களின் ஆதரவில் இயங்கிவந்த அஜித்தின் பேஸ்புக் பக்கத்திற்கு சமீபத்தில் தான் வெரிபைஃட் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை கேட்டதும் உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள் அப்பக்கத்திற்கு லைக்ஸ்ஸாக குவித்தனர்.
ஆனால் வெரிபைஃட் கொடுத்த 8 மணி நேரத்திற்குள் அஜித்தின் பேஸ்புக் பக்கம் அதிகாரப்பூர்வமானது இல்லை என பேஸ்புக் நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து...
மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி அதனை நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் கருவியாக சிலர் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்- ஜனாதிபதி
Thinappuyal News -
பௌத்த மக்களை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருப்பை வெளியே கொடுத்து, வெளி நெருப்பை உள்ளே கொண்டு வந்து முழு நாட்டையே தீக்கிரையாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி அதனை நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் கருவியாக சிலர் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
பௌத்த மக்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான தகவல்களை இணையத்தில் பிரசுரித்து உலக நாடுகளில் பிரசாரம் செய்யும் முயற்சிகளை சிலர் மேற்கொள்கின்றனர்.
பல வருடங்களாக...
தமிழில் சிறந்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவரான கே. பாலசந்தர், தெலுங்கில் சிறந்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவரான கே.விஸ்வநாத் இருவரும் 'உத்தம வில்லன்' படத்தில் நடித்துள்ளார்கள். கே. விஸ்வநாத், தமிழ், தெலுங்கில் கடந்த சில வருடங்களாகவே நடித்து வருகிறார். கே. பாலசந்தர் 'ரெட்டைச் சுழி' என்ற படத்தில் மட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது இந்த இரு சிறந்த இயக்குனர்களும் முதன் முறையாக ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த இரு இயக்குனர்களுமே...
ஜகார்தா :இந்தோனேஷியாவில், 120 எரிமலைகளில் ஒன்றான, 'மவுண்ட் சினாபுங்' வெடித்து சீறியதால், 4,000 மீட்டர் உயரம் வரை, எரிமலைக் குழம்பு எழுந்தது.இதுகுறித்து, ஷின்குவா பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:இந்தோனேஷியாவின், சுமத்ரா தீவில் உள்ள இந்த எரிமலை, 400 ஆண்டுகளாக உறங்கிய நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், மீண்டும் சீற்றம் கொண்டது.அவ்வப்போது, ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால், 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 30 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து...
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிரான போர் பிரகடனத்தை, தனி இஸ்லாமிய நாட்டின் தலைவர், அபுபக்கர் அல் பாக்தாதி அறிவித்துள்ளார். இதனால், ஈராக்கில் சிக்கியுள்ள நுாற்றுக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், 2002ம் ஆண்டு முதல் பயங்கரவாத தாக்குதல்களும், உள்நாட்டு கலவரங்களும் நடைபெற்று வருகின்றன. சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த, சதாம் உசேனின் ஆதரவாளர்களான, 'இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் சிரியா...