சில வாரங்களுக்கு முன்னர் Samsung Galaxy S5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்த சம்சுங் நிறுவனம் தற்போது Samsung Galaxy S5 Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் களமிறங்கியுள்ளது.இம்மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவு 1280 x 720 Pixels Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இது தவிர 1.4GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Exynos 3470 Processor...
முன்னணி மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமான அப்பிள் புத்தம் புதிய iPod Touch சாதனத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.Rear Facing Camera கமெரா உட்பட முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPod Touch சாதனங்களின் அம்சங்களை உள்ளடக்கியதாகவும் மூன்று வகையான சேமிப்பு கொள்ளளவினை கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.16GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்ட இப்புதிய சாதனத்தின் விலை 159 பவுண்ட்ஸ்களாகவும், 32GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்ட சாதனத்தின் வலை 199 பவுண்ட்ஸ்களாகவும்,...
பாகிஸ்தானின் பழங்குடியினர் வசிக்கும் வடக்கு வசிரிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் மறைவிடமாக செயல்பட்டு வருகின்றது.
கடந்த மாதம் கராச்சி விமான நிலையம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது ராணுவ விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி வருகின்றன.
இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் மக்கள் வீடுகளை காலி...
ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நாட்டின் உயர்மட்ட அதிபர் பதவிக்கு எட்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இவர்களில் ஒருவரும் 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லை. அதனால் இந்த முடிவுகளின் முன்னணியில் இருந்த அப்துல்லா அப்துல்லா, அஷ்ரப் கனி அஹமதுசாய் ஆகிய இரண்டு வேட்பாளர்களிடையே இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு கடந்த ஜூன் மாதம் 14ஆம்...
இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவியரான ட்ரேசி எமின் கடந்த 1998ஆம் ஆண்டில் வரைந்த 'மை பெட்' என்ற ஓவியத்தை அங்குள்ள தொழிலதிபரான சார்லஸ் சாட்சி என்பவர் கடந்த 2000ஆவது ஆண்டில் 1,50,000 பவுண்டிற்கு வாங்கினார். நவீனகால பாணியாகக் கருதப்படும் இந்த ஓவியத்தில் கசங்கிய படுக்கை உறை, வீசி எறியப்பட்டிருந்த சிகரெட் துண்டுகள், உள்ளாடைகள் போன்றவை வரையப்பட்டிருந்தன.
போருக்கு பிந்தைய மற்றும் சமகாலப் படைப்புகள் என்ற பிரிவில் நேற்று இந்த ஓவியத்துடன் சேர்த்து...
கென்யாவில் சரக்கு விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த நான்கு பணியாளர்கள் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. போக்கர் 50 என்ற அந்த சரக்கு விமானம், நான்கு பணியாளர்களுடன் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் சிறு வணிக வளாகம் ஒன்றின் மீது...
20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் கடந்த மாதம் 12–ந்திகதி தொடங்கியது.
இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்றன. 26–ந்திகதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.
‘லீக்’ முடிவில் பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி, அமெரிக்கா, பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய...
டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும், 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், தன்னைவிட தரநிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியாசிடம் (வயது 19) அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
உலகத் தரவரிசையில் 144-வது இடத்தில் இருக்கும் நிக் கிர்ஜியாஸ், வைல்டு கார்டு எனப்படும் சிறப்பு அனுமதியில் முதல் முறையாக விம்பிள்டன் பிரதான சுற்றுக்கு...
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவாவை வீழ்த்திய ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கனடாவின் பவுச்சர்டுடன் கெர்பர் மோதினார். அபாரமாக ஆடிய பவுச்சர்ட் 6-3, 6-4 என்ற நேர்செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், ரோமானிய வீராங்கனை ஹாலெப், ஜெர்மனி வீராங்கனை லிசிக்கியை 6-4, 6-0...
இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. நீண்ட தொடரான இந்த போட்டியை இந்தியா வெல்லுமா? என்ற கேள்வி இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் இத்தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் நீண்ட நாட்களாக மோசமான பார்மில் உள்ளார். இத்துடன் ஜூலை 9-ந்தேதி தொடங்கும் தொடரை சந்திக்க...