“சமூக சேவை அலுவலர் தன்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். என்ன பிளான் எதிர்பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு வடக்கு முதலமைச்சரிடம் கிருஸ்ணபுரத்தில் இரு கண்ணும் பார்வை இழந்தவரின் இளம் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களான குருகுலராஜா, ஜங்கரநேசன், சத்தியலிங்கம் உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம் மற்றும் கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் உறுப்பினர்கள் ஆகியோர், கிளிநொச்சியின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களான பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம்...
ஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அரசாட்சிப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதியை பதவி விலக்குவதே நோர்வேயின் நோக்கமாக அமைந்துள்ளது. எனினும், இந்த நோக்கத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள். நாட்டில் பல்வேறு மத மற்றும் இனத் தரப்புக்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் முயற்சியில் நோர்வே ஈடுபட்டுள்ளது. 2005ம் ஆண்டு முதல் மக்கள் ஜனாதிபதியுடன் இருக்கின்றார்கள்.  நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும்...
  2014.06.15 அன்று இலங்கையின் அளுத்கம மற்றும் பேருவளை வாழ் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளின் ஆவணப்பதிவு TPN NEWS
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது சட்டத்தரணியுடன் சென்று சற்று முன்னர் மாத்தறை பொலிஸில் சரணடைந்துள்ளார். மாத்தறை நகர குழு மோதல் தொடர்பில்வுக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இருப்பின் அவர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. அதன்படி மங்கள சமரவீரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தென் மாகாண சபை உறுப்பினர் மங்கள பிரியந்தவும் பொலிஸில் ஆஜராகியுள்ளார். இதனால்...
மாற்றக் கூடியதை மாற்று... மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்... ஏற்றுக்கொள்ள முடியாததை மறந்து விடு... முதலாவதும் மூன்றாவதும் யாருக்கு வேண்டுமானாலும் சாத்தியம். சற்றே சிரமமான இரண்டாவது விஷயம் மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம். குறிப்பாக உறவுகளுக்குள் சிக்கல் வராமலிருக்கச் செய்கிற மகத்தான மந்திரமும்கூட! வாழ்க்கைத்துணையோ, வேறு உறவோ... ஒருவரிடம் நமக்கு சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்? அவரிடம் நமக்குப் பிடிக்காத விஷயங்களைச் சொல்லிச் சொல்லி, அப்செட் ஆக்குவதுடன், அந்த...

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும், வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக அடைக்கலம் கேட்டு செல்லுகிற நிலைதான் உள்ளது. அப்படி அடைக்கலம் கேட்டு, புதுச்சேரியில் இருந்து 152 இலங்கைத் தமிழர்கள் ஒரு படகில் ஆஸ்திரேலியா நோக்கி கடந்த 13-ந் தேதி புறப்பட்டனர். அவர்களின் படகு, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 300 கி.மீ. தொலைவில், நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது படகில் திடீர் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் படகு...
உக்ரைனின் கிழக்கு பகுதியான டன்ட்ஸ்க்கை சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும் அல்லது ரஷியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி, ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நடந்து வரும் இந்த உள்நாட்டு போரில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் படி அப்பகுதியில் கடந்த 27-ந்திகதி வரை போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் உக்ரைன் அரசு ஐரோப்பிய யூனியனுடன் நேற்று...
ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் தாக்குதல்களாலும், தொடர் வெற்றிகளாலும் பிரதமர் நூரி அல் மாலிக்கி தலைமையிலான ஷியா முஸ்லிம் அரசு தத்தளித்து வருகிறது. போராளிகளை எதிர்கொள்ள முடியாமல் அரசு படைகள் பின்வாங்கி வருகின்றன. போராளிகள் மீது தாக்குதல் நடத்துமாறு பிரதமர் நூரி அல் மாலிக்கி கேட்டுக்கொண்டபோதும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இதில் அதிரடி நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருகிறார். ஈராக்கில் புதிய அரசை அமைக்க வேண்டும் என்பதுதான்...
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் உருகுவே அணியுடன் மோதிய கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தலான வெற்றியை பெற்றது. ஆட்டத்தின் துவக்க நேரத்தில் இருந்தே பந்தினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கொலம்பிய வீரர்கள், உருகுவே அணியின் கோல் கனவு நிறைவேறாத வகையில் சிறப்பாக விளையாடி இந்த வெற்றியை தங்களுடையதாக்கிக் கொண்டனர். இதன் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் முதன்முறையாக கொலம்பியா அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி...
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் பிரேசிலுடன் சிலி அணி மோதிய விறுவிறுப்பான ஆட்டம் இன்று போலோஹாரிசோண்ட்டில் நடைபெற்றது. சொந்த மண்ணில் பிரேசிலை வீழ்த்தும் முனைப்புடன் சிலி அணியும், போட்டிகளை நடத்தும் நாடு என்ற முறையில் தோல்வியை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிரேசில் அணியும் தத்தமது பொறுப்பை உணர்ந்து விழிப்புடன் விளையாடின. ஆட்டத்தின் முன்பாதி நேரத்துக்குள் முதல் கோலை பிரேசில் பதிவு செய்ய, அதற்கு பதிலடியாக சிலியும் தனது...