திருவண்ணாமலையில் நிலத்தில் புதையல் எடுக்க மாணவியை வைத்து நள்ளிரவில் பூஜை செய்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பெலாசூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்ற விவசாயி, பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்பட்டு கேரளாவுக்கு சென்று ஒரு மந்திரவாதியை சந்தித்துள்ளார். அப்போது லட்சுமணன் நிலத்தில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்க லட்சுமணனின் மூத்த மகளை குழியில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றும் மந்திரவாதி கூறியிருக்கிறார். அதன்படி...
  பாலாறு நதிநீர் பிரச்சனையில் தன் மீது கோபம் கொள்வது ஏன் என தமிழக முதல்வர் ஜெயலிலதாவிடம் கருணாநிதி கேட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாறு நதிநீர் பிரச்னை பற்றி, சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதற்கு, விளக்கமளித்து அறிக்கை ஒன்றை கொடுத்தேன். எனினும் அதில் ஜெயலலிதாவை விமர்சித்து ஏதும் கூறப்படவில்லை. இதற்கு அவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, உறவுக்கு கை கொடுப்பதும், ஆட்சி அதிகாரம் இல்லாதபோது, உரிமைக்கு...
]   சென்னையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் ராகிங் கொடுமை தாங்க முடியாமல் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த யோகலட்சுமி என்பவர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பி.எஸ்.சி.-இ.டி.சி.டி எனப்படும் அவசரசிகிச்சை தொடர்பான படிப்பை பயின்று வந்தார். 2ம் ஆண்டு மாணவியான யோகலட்சுமியை 3ம் ஆண்டு படிக்கும் கோடீஸ்வரி என்ற மாணவி பாலியல் ரீதியாக ராகிங் தொல்லையளித்து தொடர்ந்து சித்ரவதை...
இந்தியாவின் கேரளமானிலத்தில்  நடைபெற்ற மேடை  நிகழ்வு ஒன்றில் சின்னக்குயில் சித்ரா அந்தரத்தில் நின்று பாடி அசத்தினார் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்    
    1990 -1991 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள்  மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள்  ஸுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள். 12-07-1990 மக்கா புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த...
   மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைத் தேண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியாழ் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். கல்முனையிலிருந்து கடந்த 1990ம் ஆண்டு காத்தான்குடி நோக்கிச் சென்ற 165 பேர் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதுடன் இவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ்வாறு புதைக்கப்பட்டவர்களின்சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காத்தான்குடி நகரசபை உறுப்பினர் மஜீத்...

  உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வரும் சுப்பர் கம்பியூட்டர்களில் சீனாவின் Tianhe-2 கணனியே தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படுகின்றது. சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்தில் காணப்படும் இக்கணினி 33.86 petaflops/s எனும் வேகத்தில் செயலாற்றக்கூடியதாக இருக்கின்றது. முதன்மையான 500 சுப்பர் கம்பியூட்டர்கள் தொடர்பான தகவல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுள் 63 தொடக்கம் 76 வரையான கணினிகள் சீனாவிலும், பிரித்தானியாவில் 30 கணினிகளும், பிரான்ஸில் 27, ஜேர்மனியில் 23, ஜப்பானில் 30 கணினிகளும் காணப்படுகின்றன.
  பிரித்தானியாவில் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்த மூன்று இளைஞர்கள் முதியவர் ஒருவரை தாக்கியும், ஒழுங்காக பராமரிக்க மறுத்ததற்காகவும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வடக்கு சோமர்சடில் உள்ள முதியோர் இல்லத்தில் க்ளேடிஸ் ரைட் (79) என்ற மூதாட்டி டேமென்சியா நோயால் பாதிக்கபட்டு வந்துள்ளார். இவரை பாதுகாக்கவும், உதவிகளை செய்யவும் மூன்று இளைஞர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில், டேனியல் பேன்ஸ் (25), தாமஸ் (24) மற்றும் சால்னிகோ ஆகிய மூன்று இளைஞர்களும் மூதாட்டியின் கழுத்தை...
  அவுஸ்திரேலிய செய்தியாளர் பீற்றர் கிரெஸ்தே உள்ளிட்ட மூன்று செய்தியாளர்களுக்கு எகிப்திய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தவறான செய்திகளைப் பரப்பினார்கள் என்பதும், தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு உதவி செய்தார்கள் என்பதும் மூவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் கிரெஸ்தேயிற்கு ஏழு வருடகால சிறைத்தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அவருடன் அல்ஜெஸீரா செய்தி ஸ்தபானத்திற்காக வேலை செய்த பஹர் மொகம்மத் என்பவருக்கு பத்து வருடகாலமும், மொஹம்மட் ஃபவுமி...
போரை வேறு வழியில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போரை பல்வேறு வழிகளில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.  நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் போரை வேறு வழியிலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன். சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் வேறும் வழிகள் இருந்திருக்கலாம்.  இறுதிக் கட்ட போரை முடிவுக்குக் கொண்டு வரும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சில உளவியல் காரணிகளையும் அரசியல் காரணிகளையும் கருத்திற்கொள்ளவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட...