தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக வன்னி மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். அதில் குறிப்பிடப்பட்ட விடயமாவது, 'தமிழ் முஸ்லீம் மோதல்களுக்கு தூபமிட்டு உனது சூழ்ச்சியை காட்டாதே' 'TNA சதியில் இருந்து எங்களை பாதுகாருங்கள்' 'இந்திய வீட்டுத்திட்டத்தினை நாங்கள் புறக்கணிக்கவில்லை' 'இன மத அரசியலுக்கு அப்பால் செயற்படும் அமைச்சரை இழிவுபடுத்தாதே' என்ற வாசகங்களை ஏந்தியவாறு வவுனியா முஸ்லீம் பள்ளியிலிருந்து ஊர்வலமாகச் சென்று, வவுனியா அரச அதிபரிடம் மகஜர் ஒன்றையும்...
மக்களின் ஜனநாயக அங்கீகாரத்துடன் வட மாகாண அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் செயற்பாடுகளை முடக்கும் வகையில் அல்லது தாமதப்படுத்தும் வகையில் அந்த அரசாங்கத்திற்கு சமமான மற்றொரு நிர்வாகம் வடக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களால் உருவாக்கப்பட்ட மாகாண அரசாங்கம் சுமூகமான முறையில் செயற்பட முடியாதுள்ளது. மேற்கண்டவாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும், ஐ.நா சபையின் சர்வதேச அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரன்கோவிற்குமிடையிலான சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக மேற்படிச்...
இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.. இன்று படப்பிடிப்புகள் ரத்து! இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உலக சாதனைப் புரிந்த இயக்குநர் ராம நாராயணன், சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய...
இலங்கையின் அளுத்கம தாக்குதல்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான வன்முறை நடந்த பின்னணியில் , இலங்கையின் சில முஸ்லீம் தலைவர்கள் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், சந்திப்பு குறித்து அகில இலங்கை ஜமாயத் உல் உலமா சபையின் ஊடகச் செயலர் ஹுசேன் பைசல் பரூக் அவர்கள் BBC  செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்;
  சிறு வயதிலேயே தனது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வரும் வவுனியாவைச் சேர்ந்த ஸ்கெனோவா பெனாண்டோ (ளுஉயழெறய குநசயெனெழ) வயது 21 என்ற இந்த இளைஞன் இதுவரை 12 பாடல்களையும் 2 குறும் படங்களையும் இயக்கி சிறு வயதிலேயே பாடகர் மற்றும் இயக்குனர் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். வன்னி மாவட்டத்தில் இந்நாட்டு கழைஞர்களை ஊக்குவிக்காததன் காரணமாக இவ்வாறு இலைமறை காய்யாக வாழ்ந்து வருகின்ற கழைஞர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல...
மூவின மக்கள் வாழ்ந்து வருகின்ற ஒரு நாடு இலங்கையாகும். சிறு பான்மை இனங்களாக தமிழர், முஸ்லீம், பேகர் என வாழ்ந்து வருகின்றனர். ஆனால் முஸ்லீம் சமுதாயத்தினரும் பரங்கி இனத்தவர்களும் தமிழ் பெசும் மக்களாகவே இருந்து வந்தனர். தமிழ் பேசும் மக்களின் இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு அக்கால கட்டத்தில் முஸ்லீம் இனத்தவர்களின் பங்களிப்பு காத்திரமாக அமையபெற்றது. ஆனால் காலப்போக்கில் இந்த நிலைமை மாற்றம் அடைந்து விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முஸ்லீம்...
இலங்கையில் செயற்படும் இனவாத அமைப்புகள் என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபல சேனாவைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. மேலும் பொதுபல சேனா அமைப்பை அரசாங்கமே பின்னின்று இயக்கி வருவதும் அம்பலமாகி வருகின்றது. இந்நிலையில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இலங்கையில் இனவாத, தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்து ஒன்பது முஸ்லிம்...
    பாகிஸ்தானின் பஞ்சாபி மாகாணத்தில் இளம் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பஞ்சாபி மாகாணத்தில் லையா என்ற கிராமப்பகுதி உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 20 வயதான முசம்மில் பிபி என்ற இளம்பெண் திடீரென காணாமல் போயிருந்தார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில், மறுநாள் அருகில் உள்ள வயல்வெளி பகுதியில் ஒரு மரத்தில் இளம்பெண்ணின் உடல் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. அவரது உடைகள்...
அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளிர் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விபரமான அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு வழங்கியுள்ளார். இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளுக்கு அரசாங்கம் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் நாடுகள் எச்சரித்திருந்தன. இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர், மேற்படி சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளிடம் வழங்கியுள்ளார். வளைகுடா நாடு முஸ்லிம் நாடுகளின்...
     தனது மரணத்தின் மூலம் சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு கிடைக்கும் என்றால், மரணத்தை எதிர்நோக்க தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையில் பௌத்த சிங்களவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் இருப்பதன் காரணமாகவே நாங்கள் அதனை தீர்ப்பதற்காக குரல் கொடுத்து வருகின்றோம். என்னை கொலை செய்தோ, கைது செய்தோ, என் பெயருக்கு...