உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி- கானா அணிகள் மோதின. மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலை செய்தன.
இரு அணிகளும் முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்துக்கொண்டு வந்தன. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ஜெர்மினியின் கோட்சே தலையால் மோதி அற்புதமான...
ஐ.சி.சி. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய இளம் வீரர் விராட் கோலி முதலிடத்தை இழந்தார். வங்காளதேச தொடரில் பங்கேற்காததால் முதலிடத்தை இழந்த விராட் கோலி, 868 புள்ளிகளுடன் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை விட 4 புள்ளிகள் அதிகம் பெற்ற தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்வியர்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். டெஸ்ட் தரவரிசையிலும் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஷிகர் தவான் 8-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திலும்,...
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா, காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான லி சுவேருயியை (சீனா) எதிர்கொண்டார். 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கடுமையாகப் போராடிய சாய்னா, 20-22, 15-21 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தார்.
இந்தியாவின் பி.வி.சிந்து, காஷ்யப், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே தோல்வியடைந்து வெளியேறினர். தற்போது சாய்னாவும் வெளியேறியதால் இத்தொடரில்...
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈகுவடார் மற்றும் ஹோண்டுராஸ் அணிகள் விளையாடின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமமாக உள்ளனார்.
இரண்டாவது பாதியில் ஈகுவடார் அணி கடுமையாகப் போராடி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஈராக்கில் தற்போது நடைபெற்றுவரும் இனக்கலவரங்களில் போராளிகளின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதால் அந்நாட்டின் பிரதமர் நூரி அல் மாலிகி அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை அன்று ஈராக்கிற்கு 300 ராணுவ ஆலோசகர்களை அனுப்புவதான தனது திட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட்டார்.மேலும் ஈராக்கின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் ஒரு ராஜதந்திர பயணத்தில் ஈடுபடுவார் என்றும் ஒபாமா தெரிவித்தார். அதன்படி...
சிரியாவில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஐ.நா மனிதாபிமான உதவிகளைச் செய்துவருகின்றது. ஆனால் இந்த உதவிகள் அனைத்தும் சிரியா அரசின் அனுமதி பெற்ற பின்னரே அங்குள்ள மக்களைச் சென்று சேருகின்றது.
இந்த நடைமுறையை ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் வலேரி அமோஸ் தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். ஏனெனில், அரசின் அனுமதியில் விநியோகிக்கப்படும் உதவிகள் போராளிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்குக் கிடைப்பதில்லை...
ஆசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் சமீப காலங்களாக சன்னி, ஷியா பிரிவு இன மோதல்கள் வலுத்து வருகின்றன. ஹாவ்திஸ் என்று அழைக்கப்படும் ஷியா பிரிவின் போராளிகள் சலாபி என்று அழைக்கப்படும் சன்னி பழங்குடியினரை எதிர்த்து கடந்த சில மாதங்களாகக் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பழங்குடியின் இஸ்லா கட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டிலும், சலாபி ஆதிக்கத்தில் இருந்துவந்த சில பகுதிகளையும் ராணுவத்தின்...
தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் ஈராக் நகரங்களை மீட்க 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தாக்குதலுக்கு தயாராக உள்ளனர்.
எண்ணை வளம்மிக்க ஈராக் நாட்டில் தற்போது உள்நாட்டு போர் மூண்டுள்ளது. சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஷியா பிரிவு அரசின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ என்ற அமைப்பை ஏற்படுத்தி ராணுவத்துக்கு எதிராக அதிரடி தாக்குதல்களை நடத்துகின்றனர்.
ஈராக்கின் முக்கிய பெரிய நகரங்களான மொசூல், திக்ரித், கிர்குக், பலூஜா உள்ளிட்டவற்றை கைப்பற்றி...
விஜித்த வட்டாரக்க தேரர். மொஹமட் விஜித்த வட்டாரக்க என்றால்தான் பௌத்த அடிப்படைவாதிகளுக்குத் தெரியும்.
Thinappuyal News -
“குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.”
“
இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர் இருப்பவர் அல்லது இல்லாதவர் என அளவிடுவதே.”
“புத்த பெருமானின் இந்த போதனைகளுக்கிணங்க எம்மை உயர்த்திக் கொண்ட நாம் இன்றும் ஒழுக்க விழுமியங்களையுடைய ஒரு இனமாக உலக மக்களின் முன் தலைநிமிர்ந்து...
ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லைஅரசிலிருந்து அவராக வெளியேறினால் நல்லது! இல்லையேல் நாம் வெளியேற்றுவோம்
Thinappuyal News -
ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால் அவருக்கே சிறந்தது. இல்லையேல் நாம் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாட்டில் சிங்களவர்களுக்கு எதிரான மிகப்பெரிய கிளர்ச்சி விரைவில் உருவாக்கப்படவுள்ளது. ஜிஹாத் தீவிரவாதத்திற்கு எதிராக போராட சிங்களவர்கள் தயாராகவுள்ளனர். நாட்டில் தமிழ்த் தீவிரவாதிகள் நல்லதொரு பாடத்தினை கற்றுக்கொண்டுள்ளனர்....