மதத்தின் பெயரால் நாம் இன்னும் எத்தனை உயிரை பழிவாங்க போகிறோம்..கொலை செய்தவன் கொலைதான் செய்யப்படவேண்டும் என்று எந்த மதம் சொன்னாலும்; அதுவும் ஒரு கொலைகார மதமே!! அது தண்டனை அல்ல; என்பதை மனித சமுதாயம் என்று ஏற்றுகொள்ளும். கொலைசெய்யும் மதங்களை விட்டு ஒழித்து மனித நேயம் காப்போம்.. நாமே கடவுளாவோம் மன்னிப்பதன் மூலம்
நாட்டையோ மதத்தையோ அழிப்பதற்கு கடும்போக்காளர்களுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி எச்சரித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, கடும்போக்காளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார். அரசாங்கம் தவறுகளுக்கு பொறுப்பு இல்லையென்ற போதும் பலவந்தமாக அந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களுக்கு அரசாங்கத்தின் மீதே விரல் நீட்டப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கறுப்பு ஜூலையின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை பௌத்தர்களும் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் முஸ்லிம்களும்...
இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வட்டரக்கே விஜித தேரரை மத்திய மாகாண சபையின் உறுப்பினர் அசாத் சாலி சென்று பார்வையிட்டுள்ளார். ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவரும் மஹிங்கனை பிரதேச சபையின் உறுப்பினருமான வட்டரக்கே விஜித தேரர், பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகாமையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த போது கண்டு பிடிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மோதல் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மட்டுமல்லாது, செய்தியளிப்பில் இலங்கை ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் பற்றி நாட்டின் ஊடக சமூகம் ஆழமான கவனத்தை செலுத்த வேண்டும் என நம்புவதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது இந்த மோதல் நிலைமை குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள்...
இருபது பேரைக் கொலை செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தயாரான நிலையில் இருக்கும் நிலை யுத்தம் ஓய்ந்து தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட எத்தனிக்கும் சமயத்தில் தமிழர் பகுதிகளில் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் என்பவற்றால் மீண்டும் பதற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளார்கள் தமிழ்மக்கள்.  யாழ்ப்பாணத்தில் மீண்டும் ரவுடிகளின் அட்டகாசம் பெருக்கெடுத்துள்ளது, மது, மாது, போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருங்காலத்தைத் தொலைத்து வருகின்றன இளம் தமிழ் சமூகம். இதே நிலையில்தான் கோண்டாவிலில் நேற்று...
  அமைச்சரவைக்குள் அத்துமீறி நுழைந்து அட்டகாசம் காண்பிக்கும் பொதுபலசேன அதிகாரம் கொடுத்தது யார்?
சிறீலங்காவின் களுத்துறை அளுத்கம, மத்துகம, பேருவெலபகுதிகளில் சிங்கள பௌத்த குண்டர்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற அல்-ஜசீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் குழுவின் மீது குண்டர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இவர்கள் சிங்கள காடையர்கள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் கத்திப் பேசியவாறே இவர்கள் அங்கே வந்து அல்ஜசீராவின் வாகனத்தை தாக்கியுள்ளார்கள். இருப்பினும் இதனை நேரடியாக தொலைக்காட்சியில் கூறமுடியாது என்ற காரணத்தால் அவர்கள் அதனை...
  இராணுவத்தினர் தழிழ் பெண்கள் பாலியல் சித்திரவதை நிர்வாணப்படுத்தி 24 மணி நேரமும் என் மார்பங்கள் என் உறுப்புனக்கள் ஒரு விச்சாரியை விட கேவலமான முறையில் நடந்து கொண்டனர்
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள், 83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றதோ என தாம் சந்தேகிப்பதாக வடமாகாண முதல்வர க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன்,  குறித்த வன்முறைச் சம்பவங்கள் உண்மையில் இனங்களுக்கிடையில் விரிசலினை உருவாக்கும் நோக்குடன் திட்டமிட்ட வகையில் நடைபெற்றிருக்குமானால் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.கொழும்பு, அளுத்கம பகுதியில் கடந்த சில தினங்களாக சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் உருவாகியிருக்கும் முறுகல்...
இணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்படும் துணைச்சாதனமான Router இல் தற்போது புதிய தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்டுள்ளது. அதாவது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதும், தொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான Soap எனப்படும் Router உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் பயன்படுத்துவதற்கு இலகுவாக காண்படுவதுடன், வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.