பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நியமிக்கப்பட்டமை கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தங்காலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தை இறுதி நேரத்தில் புறக்கணித்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. மகிந்தவின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) ஆகியோரும் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் கடந்த 29ஆம் திகதி இரவு, அவர்கள்...
  குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய 20 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளுக்காக சுமார் 100 அதிகாரிகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், மேல் மாகாணம் மற்றும் காலி மாவட்டத்திற்கு இந்த...
  பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சுமார் 30 அரச பேருந்து நடத்துனர்கள் ஒரு வார காலத்திற்கு பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், அடிக்கடி 30, 50 ரூபாய் கொடுத்து பயணிக்கும் பயணிகளுக்கு சில நடத்துனர்கள் பயண சீட்டு வழங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. சீரற்ற நடமாடும் சோதனைகள் பேருந்துகளில் சீரற்ற நடமாடும் சோதனைகள்...
  எரிவாயுவின் விலைகளில் மாற்றம் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இறுதி தீர்மானம் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய நன்மைகளை மக்களுக்கு வழங்க முடியுமா என ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அநேகமாக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படாது எனவும் நாளைய தினம் இது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலிட்டி துறைமுக பகுதிக்கு இன்றையதினம் சனிக்கிழமை கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா கடற்தொழிலாளர்களிடம் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார். அதன் போது. மயிலிட்டி இறங்குதுறை பகுதியில் அதிகளவான நீண்டநாள் தொழில் மேற்கொள்ளும்...
  போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் “லொகேஷன் குடு மல்லி” என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். படல்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​மினுவாங்கொட, நில்பனாகொட, ஹேன்பிடகெதர, கல்கந்த, துனகஹ, கட்டுவெல்லேகம, அலுதேபொல ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 6,120 மில்லி கிராம்...
  ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணின் உயிரை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ளது. நேற்று (29) இரவு 7.00 மணியளவில் மஹியங்கனை - கண்டி ஏ26 வீதியில் மகாவலி ஆற்றின் வேரகங்தொட்ட பாலத்தில் இருந்து குறித்த யுவதி ஆற்றில் குதிக்க முயற்சித்துள்ளார். பாலத்தின் கொன்கிரீட் தடுப்பின் மேல் ஏறி ஆற்றில் குதிக்க தயாராக இருந்த குறித்த யுவதியை கண்ட அருகில் இருந்த இளைஞர்கள் குழு ஒன்று அவரை காப்பாற்ற ஓடி...
  காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பயங்கர சம்பவம் லுணுகம்வெஹர, பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தில், இன்று(29) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 31 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கைது இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக லுனுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
  முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் தென்னை மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 61 வயதான பிலிப்பையா ஜோய் பீரிஸ் என்பவர் கடந்த 24 ஆம் திகதி வல்லிபுரம் பகுதியில் தேங்காய் பிடுங்கச் சென்றுள்ளார். அப்போது, அவர் தென்னை மரத்தின் காய்ந்த ஓலையொன்றைப் பிடித்தபோது தென்னை மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்துள்ளார். இதனையடுத்து குறித்த நபரை முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர்...
  ஹோண்டா எலிவேட் (Honda Elevate) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 30000 கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Honda Cars India தனது தனித்துவமான SUV Elevate மூலம் புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது. 2023 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்த கார் 30,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. தொடங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் இந்த மைல்கல்லை கடந்தது மிகப்பாரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் முக்கிய அபிமான கார்களான Kia...