பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று இரவு நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில், நெதர்லாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. ஏற்கனவே ஸ்பெயினை வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த நெதர்லாந்து, ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. போட்டியின் 20வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபென் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு அடுத்த நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிம் காகில் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுக்க,...
பிரேசிலில் நடந்து வரும் 2014-உலக கோப்பை கால்பந்து போட்டியின் 'பி' பிரிவு ஆட்டத்தில் இன்று ஸ்பெயினை எதிர்கொண்ட சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆரம்பம் முதல் பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிலி வீரர்கள் மிக சிறப்பாக கோல்களை அடித்து ஸ்பெயின் வீரர்களை திணறடித்தனர். ஆட்டத்தின் பின்னிறுதியிலாவது ஸ்பெயின் வீரர்கள் பதிலடி தருவார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வகையில் திறமையாக விளையாடிய சிலி அணி,...
    முஸ்லீம் அமைச்சர்கள் பதவி விலகினால் என்ன? விலகாவிட்டால் என்ன ? இரண்டும் ஒண்று தான் ?
* அளுத்கம பேருவளையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் * அமைச்சுப் பதவியை துறப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. * சர்வதேச விசாரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் நாம் ஆதரவாக வாக்களிக்காமல் இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரித்ததன் ஊடாக பலமான செய்தியொன்றை உலகுக்குச் சொல்லியிருக்கிறோம். * பொலிஸார் பக்க சார்புடன் செயற்பட்டுள்ளமை வேதனையை அளிக்கிறது. * பொதுபலசேனாவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். * சர்வதேசத்திடம் முறையிட்டாவது எமது மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பேன். அமைச்சுப் பதவியை துறந்தால் எமது...
சர்வதேச விசாரணைக்குழு தொடர்பில் ஆளுங்கட்சி கொண்டுவந்த தீர்மானம் 134 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஏற்பாட்டில் சுயாதீன விசாரணை மேற்கொற்வதற்காக விசாரணைக்குழு இலங்கை பயணமாகும் என்று முடிவாகியிருந்தது. இந் நிலையில் விசாரணைக்குழுவிற்கு எதிராக பிரேரணை ஒன்றை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் கொண்டுவந்திருந்தது. இது தொடர்பிலான விவாதம் நேற்றும் இன்றும் நடைபெற்றிருந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே எதிர்த்து...
 தொடக்கம் 1: மியான்மார்: திகதி – 20 மார்ச் 2013முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தைச் சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார். இதை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது மோசமான இன அழித்தொழிப்பு நடந்தேறியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்...
ஜனாதிபதி பேருவளையில் சற்று முன்னர் பேருவளைக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெறும் விசேட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மோதல்கள் நடைபெற்ற பிரதேசங்களில் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பேருவளை பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்தார். பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள், முஸ்லிம் மத தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவும்...
இந்தியாவும் பிரித்தானியாவும் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன உலகில் பல நாடுகளில் தற்போது பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்குவது குறித்து இந்தியாவும் பிரித்தானியாவும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் அண்மையில் பதவியேற்ற பிரதமரான நரேந்திர மோடி விடுதலைப் புலிகளின் தடை தொடர்பில் ஆராய கடந்த வெள்ளிக்கிழமை விசேட குழுவொன்றை நியமித்தமை இதன் முதல் கட்ட நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. 1991...
மறந்தேன் மெய்மறந்தேன், இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கல்யாணி. கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ரோஹித்திடம் கல்யாணி கூறி இருந்தார். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகே இவர்களது திருமணம் நடந்தது. இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் தாயுமானவன் என்ற படத்தில் நடிக்க கல்யாணிக்கு வாய்ப்பு வந்தது. இதை கணவரிடம் தெரிவித்தபோது அவர் நடிக்க பச்சை கொடி காட்டிவிட்டாராம்....
வாய்ப்புகள் பறிபோன நிலையில் ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கிறது சான்டல்வுட் திரையுலகம். தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் ஸ்ரேயா. படுகவர்ச்சியான வேடங்களிலும் தூள் கிளப்பினார். இந்நிலையில் ஹன்சிகா, நயன்தாரா, திரிஷா போன்றவர்களின் போட்டியில் ஸ்ரேயாவுக்கு மார்க்கெட் டல்லடித்தது. இதையடுத்து இந்தியில் கவனம் செலுத்தினார். அங்கும் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்குபிறகு பாலா இயக்கும் கரக்காட்டக்காரர்களின் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால்...