வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் ஏனைய வடமாகாணசபை அமைச்சர்களும் முதன்முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிர தேச கிராமங்களுக்கு விஜயம் செய்த போது, அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் சந்திப்பில் கலந்துகொண்டு, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே எமக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையேல் எமக்கு விமோசனம்...
கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா என்பன இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணியை அமைதியான முறையில் நடாத்தியது. இக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர், பாதுகாப்பு அமைச்சரே பொது...
மோதலில் பிக்கு கொல்லப்பட்டதாக பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பொதுபல சேனா அளுத்கமவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டதாக பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. குறுஞ் செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அந்த அமைப்பின் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க இந்த பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தகவல்...
அளுத்கமை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் நேற்று இரவு வல்பிட்டிய பள்ளிவாசலில் பேரின வெறியர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் எண்பதுக்கு மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்ததாகவும் இன்று அதிகாலை வேளையே அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வல்பிட்டிய பள்ளிவாசலை அடித்து நொறுக்க திரண்டு வந்த பேரின வெறியர்களுடன் போராடிய நிலையிலேயே நிராயுத...
  ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்கள் இலங்கை அரசுக்கு எப்போதும் உவப்பானதாக இருப்பதில்லை. இம்முறையும் கூட்ட ஆரம்பநாளிலேயே வெளிப்பட்டிருந்தது. இம்முறை இலங்கை எதிரான பிரேரணை எதுவும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்ற போதிலும் ஆரம்ப நாளிலிருந்து ஒவ்வொருநாள் விவாதங்களிலும் இலங்கையின் பெயரும் பலமாக அடிபடுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த 10ஆம் திகதி ஐ.நா.மனித உரிமை பேரவையின் 26ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வழமையை விட...
  அலுத்கம தாக்குதல் சம்பவம் தொடர்பில் பூரண அளவிலான விசாரணை நடத்தப்படும்; என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தற்போது பொலிவியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி டுவிட்டரின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார். சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள ஒருவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களி;ல் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அமைதியை பேண வேண்டியது அவசியமானது என அவர்...
இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்ததை அடுத்து, அங்கு இன்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம்...
யாழ். வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் பல்வேறு அழுத்தங்களுக்கும் மத்தியில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த கண்டன போராட்டத்தை குழப்பும் வகையில் மக்களுக்கு பல அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும், போராட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவிடம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து நீதவான் கட்ரைட் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய விசாரணைக்குழுவினர் இலங்கை தொடர்பிலான விசாரணைகளை நடத்த உள்ளனர். இந்த விசாரணைக்குழுவினரிடம் 229,028 போலி மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்களினால் இந்த மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. போலி முறைப்பாடுகளை செய்யும் நடவடிக்கையின் பின்னணியில் நாடு கடந்த தமிழீழ...
  ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. ஒரு ஜனநாயக அரசின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமாக இருப்பவர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் வெளிநாட்டு செய்தி தளத்திற்கு தெரிவித்துள்ளார். அமைச்சர் உள்ளூர் ஊடங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்தானது, ஒரு அப்பட்டமான...