ஆப்கானிஸ்தானுக்கு திடீரென வருகை தந்த ஒபாமாவை சந்திக்க அந்நாட்டு அதிபர் கர்சாய் மறுத்துவிட்டார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. அப்படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென ஆப்கானிஸ்தான் வந்தார். அங்குள்ள பக்ராம் விமான படை தளத்துக்கு சென்று அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். பின்னர் அமெரிக்கா திரும்பினார். ஆப்கானிஸ்தான்...
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் இன்று காலை நடைபெற்ற பேருந்து விபத்து ஒன்றில் 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள கலம் மலைவாசஸ்தலத்திற்கு இந்த பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அருகிலிருந்த நதியை ஒட்டிய சாலையோரத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இறந்தவர்களில் ஐந்து பெண்களும், 10 குழந்தைகளும் அடங்குவர் என்று ஸ்வாட்...
சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச பாடசாலைகளின் மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்க அனுமதிக்கப்படுவதனால், ஏனைய பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சர்வதேச பாடசாலைகளில் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தும் மாணவர்கள், இனி வரும் காலங்களில் தேசிய பாடசாலைகளில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. இது தொடர்பில் தேசிய பாடசாலைகளின் அதிபர்ளுக்கு ஏற்கனவே...
யாழில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான ஆசிரியை நேற்று முதல் காணவில்லையென அவரது சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்தனர். நேற்றுக் காலை தொண்டைமானாறு காட்டுப்புலம் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்றவர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லையென சகோதரன் தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர். இது தொடர்பான...
இரண்டு, மூன்று வருடமாக சினிமா பக்கம் தலைக்காட்டாத கவுண்டமணி, தற்போது 49 ஓ திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவர் சினிமா திரையுலகில் தலைக்காட்டாத பட்சத்திலும் அவரது கொமடிகள் இப்போதும் ஓயாத அலையாய் அடித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நேற்று மிக எளிமையாக அவர் பிறந்தநாளை அவரது அலுவலகத்திலேயே கொண்டாடிய கவுண்டமணி.மீடியாக்கு அளித்த பேட்டியில், படங்களே பார்ப்பதில்லை என்றும் ஆனால் ஆங்கில படத்தின் காமெடியை மட்டும் ரசிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பத்திரிக்கைகளை...
ஐ.பி.எல் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை, மும்பை மிகக் குறைவான ஓவர்களில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு வந்த மும்பை அணி, துடுப்பாட்டத்தையும், பந்து வீச்சையும் சரிசெய்து வெற்றிப்படியை நோக்கி பயணம் செய்தது. இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கெதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ’பிளே-ஆப்’ சுற்றுக்கு செல்ல ராஜஸ்தான் அணிக்கு தான் அதிக வாய்ப்பிருந்தது. ஆனால் அந்த விதியையும் மாற்றி எழுதியது மும்பை. ராஜஸ்தான் றொயல்ஸ் அணியுடனான வாழ்வா...
இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்டக்காரராக விளங்கிய மஹேல ஜெயவர்தனே இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் சிறந்த பங்களித்துள்ளார். இது மட்டுமல்லாது, சர்வதேச கிரிக்கெட்டிலும் பல சாதனைகளை புரிந்துள்ளார். தெனகமகே பிரபாத் மகேல ஜயவர்தன அல்லது மகெல ஜயவர்தன 1977ம் ஆண்டு மே 27ம் திகதி இலங்கை, கொழும்புவில் பிறந்தார். இலங்கை அணியின் முன்னாள் தலைவரான இவர் அணியில் சிறந்த மட்டையாளராக இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் 2006 ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்டச் சபையால்...
  பொதுக்கிணற்றில் குடிதண்ணீர் எடுப்பதற்குப் படையினர் தடை விதித்ததைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் இயக்கச்சிப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இயக்கச்சிச் சந்தியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு ஆகிய உப்பளங்களின் பணியாளர்களின் பயன்பாட்டுக்கென உப்பளங்கள் அமைக்கப்பட்ட காலத்தில் மூன்று கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டது. அந்தக் காலம் தொடக்கம் இயக்கச்சிப் பகுதி மக்கள் மூன்று கிணறுகளிலும் குடிதண்ணீர் எடுத்துவந்தனர்....
சேவகன் படத்தின் மூலம் தனது இயக்குனர் பாதையை தொடங்கியவர் அர்ஜூன். பின் வேதம், ஏழுமலை போன்ற படங்களை இயக்கி வந்தவர், மதராஸி திரைப்படம் தோல்வியில் முடிந்ததால், தன் இயக்குனர் பாதையை கைவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பின் தற்போது ஜெய்ஹிந்த் - 2 திரைப்படத்தில் மீண்டும் தனது இயக்குனர் வாழ்க்கையை அரம்பித்துள்ளார் அர்ஜூன். கல்வி முறையையும் அதன் குறைபாடுகளையும் மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் தான் ஜெய்ஹிந்த். இந்தியவையே...
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர் பந்து வீசும் முறை குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் (மேற்கிந்திய தீவுகள்) ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர், 38 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில் இவரின் பந்து வீச்சு முறை...